Followup: AAPKKL2021003-2
Audio PlayerAudio Player
Audio Player
Audio Player
காரைக்கால் மின் துறைக்கு 27-12-2021 அன்று கொடுக்கப்பட்ட புகார் சம்பந்தமாக, என்னுடைய கையெழுத்தை பெறுவதற்கு, இன்று அழைத்ததன் பேரில், நான் சென்று மின் துறை A E அவர்களை சந்தித்தேன்.
அப்போது நடந்த உரையாடலை இங்கு பதிவு செய்கிறேன். நெடிய பதிவானதால் சில இடங்களை வெட்டியும், பிரித்தும் இங்கு பதிவு செய்கிறேன்.
அவர்கரிடம் நடந்த கலந்துரையாடலில், மின் துறை அலுவலகத்தில் போதுமான ஊழியர்கள் இல்லாததாலும், வேலை பலுவின் காரணத்தினாலும், சில பிரச்சனைகள் நடப்பதாக தெரிவித்தார்.
அடுத்து, அரசு அலுவலக ஊழியர்களுக்கு மதியம் 1 மணி முதல் 2 சாப்பாட்டு வேலை என்றாலும், மின் துறையை பொறுத்த வரை ஒரு மணிக்கு செல்ல முடியாத காரணத்தினால், கொஞ்சம் தாமதமாக சென்று தாமதமாக, திரும்பி வரவேண்டியுள்ளது என்பதையும் தெரிவித்தார்.
தன், கட்டுபாட்டில் இருக்கும், வேலைகளை சரியாக செய்து வருவதாகவும், இன்னும், மெருகேற்ற முயர்ச்சிப்பதாவும் உறுதியளித்தார்.
மேலும், வீட்டிற்கு தேவையாக, புதிய மின் இணைப்பு பெறுபவர்கள், ஏலக்ரீசியனை நம்பி, 10,000 ரூபாய் வரை இழக்காமல், தானாக முன் வந்து அதற்கான மனு அளிக்க வருயுறுத்தினார். ஏலக்ரீசியன் தான் பொய் காரணங்களை சொல்லி பொது மக்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
எனவே, இனி வரும் காலங்களில் வெறும் 1000 ரூபாய் செலவில் முடியக்கூடிய, புது இணைப்பு பெரும் வேலையை, மின் துறை அதிகாரிகள்தான் லஞ்சம் கேட்கிறார்கள் என்று, ஏலக்ரீசியன் சொல்லும் பொய்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என ஆம் ஆத்மி கட்சி கேட்டுக்கொள்கிறது.
மின் துறைக்கு நேராக சென்று மனு வாங்கி, நிரப்பி, அவர்கள் கேட்கும் ஆவணங்கள் சமர்பித்து, தேவையற்ற லஞ்சத்தை தவிர்க்குமாறும், உங்களுக்கு எம்.எல்.ஏ. வின் உதவி யாட்கள் உதவி செய்வது போல, கேட்கும் லஞ்சத்தையும் தவிர்க்குமாறும், லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக எங்களோடு கைகோர்க்க வாருங்கள் என்று அன்போடு கேட்டுகொள்கிறோம்.
தொகுப்பு மற்றும் பதிவு.
திரு. M. M. Y . ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.
