புகார் எண்: AAPKKL 2021002
காரைக்கால், குடிமை பொருள் வழங்கல் துறையில், நான் எனது குடும்ப அட்டையில், எனது மகனின் பெயரை சேர்க்க சொல்லி கொடுத்த போது , அதற்கு அப்போதே தேவையான ஆவணங்கள் என கூறிஎனது மகனின் பிறந்த பதிவை மட்டும் கேட்டு வாங்கிக் கொண்டனர். அவற்றை பெற்றுகொண்டதர்கான ரசீதும் வழங்கினர். சில நாள்களில் போன் அழைப்பு வரும் என்று சொல்லி இருந்தனர். ஆனால் சுமார் 3 மாதங்கள் ஆகியும் எந்த அழைப்பும் இல்லை. எனவே, நான் சென்று பார்த்தேன், அப்போதுதான் என்னுடை அட்டை எங்கே என்று தேடப்பட்டது. தேடி எடுத்து உங்கள் மகனின் பள்ளி சான்றிதழ் இருந்தால் மட்டுமே குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க முடியும் என்றார் ஒரு அதிகாரி எனப்படும் அரசு ஊழியர்.

ஆனால், அது எனக்கு சாத்தியமற்றதாக இருந்தது. காரணம், என் மகன், LKG படிக்கும்போதே கொரோனா பேரிடரால் பள்ளிகள் மூடப்பட்டது. மேலும், இந்த வருடமும் கொரோனா பிரச்சனை தலை தூக்கியதால், பள்ளிக்கு அனுப்பும் யோசனை முற்றிலுமாக இல்லை. எனவே, பள்ளி சான்றிதழ் தர இயலாது என்பதை நான் நேரில் தெரிவித்தேன். ஆனால், ஊழியரோ, அது இல்லாமல் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க முடியாது என்று சொல்ல, எழுத்து பூர்வமாக எனக்கு தர சொலிவிட்டு வந்துவிட்டேன்.
அடுத்த வாரம், அந்த துறையிலிருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில், பள்ளி சான்றிதழை திரும்ப கேட்டதோடு, எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டை நகலையும் கூடுதலாக கேட்டு இருந்தார். (அவருக்கு கோபம் வந்து விட்டதாம், அதனால் கூடுதல் ஆவணங்கள் கேட்கிறாராம்). மேலும், கேட்ட ஆவணங்களை ஒரு வார கெடுவிற்குள் சமர்பிக்க வில்லையென்றால், என் மனு நிராகரிக்க படுமாம்.
இதோ அந்த கடிதம்

எனது பதில் கடிதம்
அடுத்த பக்கம் பார்க்க
பதில் அனுப்பப்பட்ட ஆதாரம்
என்னுடைய கடிதம் அலுவலகத்திற்கு கிடைத்துவிட்டதற்கு இதுவே ஆதாரம்.
COUNT DOWN STARTS NOW
Days
1200Hours
19Minutes
48Seconds
8தொகுப்பு மற்றும் பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.
