புதுவை ஆம் ஆத்மி கட்சியின் செயலாளர் ஆலடி கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது.
இந்தியாவில் சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு இளைஞர்களிடம் பரவி வருகிறது. படித்த இளைஞர்கள் ஆன்லைனில் சொந்த பணத்தை செலவிட்டும், கடன் வாங்கியும், மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும் விளையாடுகின்றனர். இதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்கின்றனர். இப்பிரச்சனையை உணராமல் மத்திய, மாநில அரசுகள் மவுனம் காக்கிறது. புதுவை சட்ட சபையில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் சட்டத்தை இயற்றவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ரவி சீனிவாசன், சண்முக சுந்தரம் , பூபேஷ் ராஜன், கண்ணபிரான் சுத்தம் சுந்தர் ராஜன், ஜெயராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர்.