Make India No-1 by KejriwalMake India No-1 by Kejriwal

நாடு தழுவிய பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி தொடங்கி உள்ளது.
நாடு முழுவதும் கெஜ்ரிவால் பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

புதுடெல்லி : 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நாடு தழுவிய பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி தொடங்கி உள்ளது. ‘மேக் இந்தியா நம்பர் 1’ என்ற பெயரிலான இந்த பிரசாரத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தொடங்கி வைத்தார். டெல்லி டல்கத்தோரா விளையாட்டரங்கில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்றால், தற்போது வரை ஆண்டு கொண்டிருப்பவர்களிடம் அதை விட்டுவிட முடியாது என்று கூறினார்.

கடந்த 75 ஆண்டுகளாக ஆண்டவர்கள் தங்கள் வீட்டையும், நண்பர்களையும் செல்வத்தால் வளப்படுத்தியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

சிறந்த நிர்வாகத்தை முன்வைத்து தொடங்கியுள்ள இந்த பிரசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, ஆதரவு திரட்டுவதற்காக நாடு முழுவதும் அவர் பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வர, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் தரமான கல்வி, ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச மற்றும் நல்ல மருத்துவம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு சம உரிமை மற்றும் கண்ணியம் மற்றும் விவசாயிகளுக்கு தங்கள் உற்பத்திக்கு நியாயமான விலை ஆகியவற்றை உறுதி செய்வதில் பொது நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Source: https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/make-india-no-1-mission-arvind-kejriwal-outlines-5-priorities-501091

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »