Purpose

வணக்கம், (Aam Aadmi Party Puducherry)

இந்த இணைத்தளம் புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சிக்காக தொடங்கப்பட்டுள்ளது.  புதுச்சேரியை சேர்ந்த அனைத்து ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள் இதில் இணைந்து செயல்பட வேண்டுகிறோம்.

இங்கு நம் மாநிலத்திற்கான உங்களுடைய  ஆலோசனைகள், கோரிக்கைகள், திட்டங்கள் புகார்கள், பிரசாரங்கள், செய்திகள், மற்றும் கவலைகள் போன்றவற்றை பதிவிடவும்.

மேற்படி நம் செயல்பாடுகள் பேஸ்புக் மற்றும் வாட்சப் நிலையிலேயே இருந்து வருகிறது. அவற்றில் உள்ள சில குறைபாடுகளை  புரிந்து கொள்ளுங்கள். ஒரு முக்கிய பதிவை  பல மணி நேரம் நீங்கள் நன்கு யோசித்து வாட்சப்பில் டைப் பதிவிடும்போது பலர் தனக்கு இடமில்லை என்று உடனே அழித்துவிடுவார்கள். பேஸ்புக் போன்ற சமூக இணைய தளங்களில் பதிவிடும்போது, நம் முக்கிய செய்திகளோடு பல தேவையற்ற பதிவுகள் கலந்து வருவதால் நம் செய்திக்கான முக்கியத்துவம் குறைந்து விடும். இதுவே தனி இணையதளம் இயக்க காரணமாகிறது.

உங்களுடைய பதிவுகளை இங்கு பதிவு செய்த பின், அவற்றை மறக்காமல் வாட்சைப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக இணைய தளத்தில் ஷேர் செய்து விடுங்கள். ஷேர் செய்யப்பட்ட பதிவுகள் சமூக வலைதளத்தில் அழிக்கபட்டலும் நம்முடைய AAPPY.IN ல் அழிக்கபடாமல் பாதுகாக்கலாம்.

மாற்றத்திற்கான முதல் மாற்றம் இதுவாக இருக்கட்டும். நன்றி.

 

Translate »