காரைக்காலில் எனது கடைக்காக, மின் அழுத்த குறைப்பு சம்மந்தமாக, புகார் அளிக்கப்பட்டு சுமார் ஒரு மாதம் கடந்த நிலையில், இது வரை எனது மின் கட்டண அளவை சரி செய்யவில்லை. எனவே, நான் புதுச்சேரி மின் விநியோக நுகர்வோர் குறை தீர்ப்பு மய்யத்திற்கு போன் செய்து பேசினேன். அதற்கு அவர்கள், எழுத்துபூர்வமாக புகார் தரசொல்லி அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதன் ஆடியோ பதிவை இங்கே கேட்கவும்.
ஆனால், 2010 ல் வெளியான அரசு ஆணைப்படி, மனுக்கள் அளிக்கப்பட்டு10 தினங்களுக்குள் குறைகள் தீர்க்கப்பட வேண்டும். அரசாணையை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
காரைக்கால் மின் துறை ஊழியர்கள், புரோக்கர் (எலெக்ரீசியன்) இல்லாமலும் லஞ்சம் இல்லாமலும் எந்த வேலையையும் துரிதமாக செய்ய எண்ணம் இல்லை என்று இதன் மூலம் உறுதியாகிறது. இன்னும் சில நாட்கள் அவகாசத்திற்கு பிறகு, மேற்படி குறைகளை சரி செய்யாத பட்சத்தில், இவர்கள் மீது துறை ரீதியாகவும், நீதிமன்றம் மூலமாகவும் ஆம் ஆத்மி கட்சி சார்பாக வழக்கு தொடரப்படும்.
மக்களுக்கு வேலை செய்யத் தான் அரசு ஊழியர்கள் என்ற உண்மையை உணர்த்தும் வரை, எங்கள் சட்டப் போராட்டம் தொடரும்.
தொகுப்பு மற்றும் பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.