புதுச்சேரி அரசு நிர்வாகத்தில், அரசு அலுவலகங்களிலும் அரசு ஊழியர்களிடத்திலும், அலட்சிய போக்கும் மெத்தனமும் மிகுதியாகிவிட்டது. அரசு அலுவலகங்களை அணுகும் பொதுமக்களை ஊழியர்கள் போலவும், அரசு ஊழியர்கள் முதலாளிகள் போலவும் “கனவு சட்டம்” இயற்றிவைத்துள்ளனர். இந்த நிலை கடை நிலை ஊழியர் முதல் கலக்டர் வரை தொடருகிறது.
- அரசு அலுவலகங்களில், புகார் மனுக்களை பெறுவதில் மெத்தனம். அது இல்லை இது இல்லை என்று பெறாமல் திருப்பி அனுப்ப முயற்சிக்கிறார்கள்.
- வரும் புகார் மனுக்களை பெற்றுகொண்டதற்கான சான்று வழங்காமல், தட்டிக்கழிகிறார்கள். கேட்டாலும் தரமுடியாது என்று பல ஊழியர்கள் சொல்கின்றனர்.
- ஊழியர்கள் வேலை நேரங்களில் இருக்கையில் இல்லாமல், சொந்த தேவைகளுக்காக வெளியில் சென்று விருகிறார்கள்.
- அனைத்து அரசு அலுவலகங்களிலும் சாப்பாடு நேரம் என்று மதியம் 1 மணி 2 மணிக்குள்ளாக அரை மணி நேரம் மற்றுமே எடுத்துகொள்ளலாம்.
- காலை 9 மணிக்கு சீட்டில் இருக்கவேண்டும், மதுயம் அரை மணி நேரம் போக மாலை 5 மணி வரை சீட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்னவென்று அனைவருக்கும் தெரியும்.
- ஒரு புகார் மனு அளிக்க செல்லும் பொதுமக்களை, அதற்காக திரும்ப திரும்ப அலையை விடுகிறார்கள்.
- புகார் மனுக்களை வாங்கிய பிறகு, அதை சரியாக பின் தொடர்ந்து வேலையை செய்யாமல், கிடப்பில் போட்டு வைத்து விடுகிறார்கள். ஏன் தாமதம் என்று கேட்டல், நீங்கள் ஏன் வந்து வந்து பார்க்கவில்லை என்று பொது மக்களையே திருப்பி கேள்வி கேட்கிறார்கள்.
- ஏற்றுகொள்ளும் புகார் மனுக்களை, முடிந்த வரை தாமபடுத்தி, பொதுமக்களே ஏதாவது பணம் வேண்டுமா என்று கேட்கும் நிலையை உண்டுபண்ணுகிறார்கள்.
- பல அலுவலகங்களில், பொதுமக்களிடம், மனுக்களை பெறுவதை தவிர்த்து, அதற்கான புரோக்கர் மூலமாக மட்டுமே பெறுகிறார்கள். உதாரணம்: போக்குவரத்து துறை, பத்திர பதிவு துறை, வருவாய் துறை.
- மேற்படி துறைகளில் தான் லஞ்சம் மிகுதியாக உள்ளது. எனவே, நேரடியாக லஞ்சம் கேட்டால் ஆபத்து வரலாம் என்று கருதி, இடைத்தரகர் மூலமே அனைத்து வேலைகளையும் நடத்துகிறார்கள்.
- முறைப்படி 10 நாட்களில் நடக்க வேண்டிய வேலை இடைத்தரகர் மூலம் சென்றால், 3 நாள்களிலும், நேராக சென்றால் 30 நாட்களுக்கு மேலும் ஆகிறது.
- இன்னும் புதுச்சேரி மக்கள் புலம்புவதற்கு எத்தனயோ குளறுபடிகள் உள்ளன.
இவற்றை சரி செய்யும் பொறுப்பு, முதலில் பொதுமக்களிடத்தில் தான் உள்ளது. எந்த குறையையும் புகாராக அளிக்கும் பழக்கம் வரவேண்டும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் நாம்தான் ஊழியம் வழங்குகிறோம் என்ற உணர்வு வரவேண்டும்.
வேட்டியை மடிச்சிகட்டி, மீசை முறிக்கி விட்டு , புஜத்தை நிமிர்த்தி காட்டி , நான் யார் தெரியுமா? என்று வெட்டி வீரனாக் இல்லாமல் , பொதுமக்கள் உண்மை வீரனாக வளம் வர வேண்டும்.
அதற்கு, அரசு ஊழியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எப்படி எடுக்க வேண்டும் என்று கலந்துரையாடல், ஆம் ஆத்மி கட்சி சார்பாக வாராவாரம் நடத்தி வருகிறோம்.
உங்களுடைய கருத்தையும் சொல்லுங்கள், எனக்ளுடைய கருத்தையும் கேளுங்கள் எங்களுடைய ஒரே ஆயுதம் பேனா மட்டுமே.
அதில் கலந்து கொள்ள இந்த க்ரூபில் இணைத்து கொள்ளுங்கள் அல்லது அழையுங்கள்.
தொகுப்பு மற்றும் பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.
போன் & வாட்சப் 7667 303030