விழிப்புணர்வே நாட்டுயர்வு”

காரைக்கால் மாவட்டம் முழுவதும், BARRICADE எனப்படும் இரும்பு தடுப்பு, ரோடுகளில் பல இடங்களில் போடப்பட்டுள்ளது. ஆனால், அது முற்றுலும் சட்டத்திற்கும் புறம்பாகவும் , மக்கள் உயிருக்கு பாதுகாப்பற்றதாகவும் இருகின்றன. அவற்றை உடனடியாக அகற்றும்  நடவடிக்கையை, காரைக்கால் நகர மற்றும் போக்குவரத்து காவல்துறை எடுக்க வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சி சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதை போன்று இரும்பு தடுப்பு பிரச்சனைகள், இந்தியா முழுவதிலும் இருக்கிறது. அதற்கான சட்டரீதியான கோரிக்கைகளை நாம் வைக்காத வரை, சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, தானாக முன்வந்து, சட்டத்தை மீறுவதை நிறுத்தப்போவது இல்லை. எனவே, “விழிப்புணர்வே நாட்டுயர்வு” என்ற வழியில் ஒவ்வொருவரும் களம் காண வேண்டும்.

Legal Notice

அனுப்புனர்:                                                                                                     Ref: AAPKKL2022-011

MMY. ஹமீது (7667 303030)

மாவட்ட தலைவர் ஆம் ஆத்மி கட்சி                                       தேதி: _______________

46 வள்ளல் சீதக்காதி வீதி

காரைக்கால்-60902

பெறுனர்:

__________________________________

__________________________________

__________________________________

__________________________________

பொருள்:- காரைக்கால் மாவட்டம் முழுவதும் ரோடுகளில் போடப்பட்டுள்ள (BARRICADE) இரும்பு தடுப்புகளை அகற்ற கோரி.

ஐயா. 

காரைக்கால் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை NH32, மாநில நெடுஞ்சாலை SH147 மற்றும் பல மாவட்ட சாலைகள், கிராம சாலைகள் செல்கின்றன. அவற்றில், கடந்த சில வருடங்களாக, BARRICADE எனப்படும் இரும்பு தடுப்பு சுவர், பல இடங்களில், சரியான காரணங்கள் இல்லாமல், வைக்கப்பட்டுள்ளன. அவைகளில் பெரும்பாலும், கடை மற்றும் நிறுவனகளின் விளம்பரங்கள் இடம் பெற்று உள்ளன. இதனால், வாக ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றன, மேலும், பல விபத்துக்களும்  நடந்து வருகின்றன. 

போக்குவரத்து காவலர்களும், சட்ட ஒழுங்கு காவலர்களும் அங்காங்கே வாகன தனிக்கைகாக, ஏற்படுத்தும் இரும்பு தடுப்புகளை, தணிக்கை முடிந்ததும் அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். அதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேவையின்றி, வளைந்து நெளிந்து செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

வேகத்தை குறைப்பதாக நினைத்துகொண்டு, எவ்வித அறிவியல் காரணமும் இன்றி அங்காங்கே தடுப்புகள் வைப்பதால், வேகத்தை குறைபதற்கு பதிலாக, தான் முதலில் முந்தி செல்லவேண்டும் என்ன எண்ணத்தில், கூடுதல் வேகம் எடுக்கிறார்கள் வாக ஓட்டிகள். எனவே, வாகன தணிக்கை, மாற்றுப்பாதை, திருவிழாக்கள் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களில் ஏற்படுத்தும் தடுப்பை அவ்வப்போது அகற்றி ஆபத்தை குறைத்து மக்கள் நலன் காக்க வேண்டுகிறோம்.

மெட்ராஸ் ஹை கோர்ட் மதுரை கிளை தானாக முன்வந்து எடுத்துக்கொண்ட Suo Motu WP(MD) No.12892/2017 வழக்கில், காவல் துறை ரோடுகளில் இரும்பு தடுப்பு வைப்பதற்கு பல வகைகளில் தடை விதித்திருகிறது. அப்படி அவசியம் ஏற்பட்டால் பல நிபந்தனைக்கு உட்பட்டு வைத்துகொள்ள அனுமதி அளித்திருக்கிறது. மேற்படி வழக்கின் தீர்ப்பில்.

  1. தேசிய நெடுஞ்சாலைகளில் பேரிகேட்டுகள் வைக்கப்பட வேண்டுமானால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு தடுப்புகள் அமைப்பதற்கான இடத்தை நகர காவல்துறை ஆணையர்கள் / கூடுதல் காவல் ஆணையர் / மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்க வேண்டும். மேலும், காவல் ஆணையர்/ காவல் கண்காணிப்பாளர் அந்தப் மாவட்டத்தில் உள்ள தடுப்புகளின் பட்டியலை புகைப்படத்துடன் வைத்திருக்க வேண்டும்.
  2. ஒவ்வொரு பேரிகேட்டிலும் போதுமான அளவு பெரிய பிரதிபலிப்பான்கள் இரவில் குறைந்தபட்சம் 100 மீட்டர் தூரத்தில் இருந்து தெரியும் வகையில் இருபுறமும் இருக்க வேண்டும்,. ஒளிரும் fluorescent ஸ்டிக்கர்  மாறி மாறி ஆரஞ்சு,  சிவப்பு அல்லது மஞ்சள் – பச்சை கலவையாக இருக்க வேண்டும்.
  3. வாகனங்களுக்கு குறிப்பாக மல்டி ஆக்சிஸ் டிரெய்லர்கள் போன்ற பெரிய வாகனங்களுக்கு கடுமையான சிரமத்தை ஏற்படுத்தாத வகையில், தடுப்புகள் ஒன்றிலிருந்து ஒன்று போதுமான தூரத்தில் வைக்கப்பட வேண்டும்.
  4. பேரிகேட்கள் தொடர்பாக சாலையில் செல்வோரை எச்சரிக்கும் வகையில் தடுப்புகளின் இருபுறமும் பிளிங்கர் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். 
  5.  தடுப்புகளை நியாயமான முறையில் வைக்க வேண்டும். 
  6. எல்லைக்குட்பட்ட போக்குவரத்து காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்குக்கு பொறுப்பான அதிகாரிகள் தேவையற்ற தடுப்புகளை அடையாளம் காணும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் மற்றும் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  7. வேகத்தைக் கட்டுப்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிற சாலைகளில் சாலை போக்குவரத்து விபத்துகளைத் தவிர்க்கவும், போதுமான எச்சரிக்கை மற்றும் தெரிவு நிலையுடன் விபத்து ஏற்படும் பகுதிகளில் தடுப்புகள் அனுமதிக்கப்படுகின்றன.
  8. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிற சாலைகளில் போதிய எச்சரிக்கை மற்றும் தெரிவு நிலையுடன் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பாதசாரிகள் கடக்கும் இடங்களிலும், குறுக்கு சாலை சந்திப்புகளிலும் தடுப்புகள் அனுமதிக்கப்படுகின்றன.
  9. தற்காலிக நடவடிக்கையாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக சென்டர் மீடியன்கள் அமைக்கப்படாத நகர்ப்புறங்களில் தடுப்புகளை அமைக்கவும், ஆய்வுக்குப் பின் காவல் துறையினருக்குத் அனுமதி உண்டு.
  10. அசாதாரண சட்டம் ஒழுங்கு சூழ்நிலைகள் மற்றும் கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்களின் போது போக்குவரத்தை திசைதிருப்பும் வகையில் தடுப்புகளை அமைக்கலாம். 
  11. மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடியிலும், வேறு சில இடங்களிலும், வாகனங்களைச் சோதனை செய்வதற்காக, தடுப்புகளைப் பயன்படுத்தலாம்.
  12. MV சட்டத்தின் 370 வது பிரிவின்படி, தடைகளுக்கு முன்பாக, தெளிவாகத் தெரியும் வகையில், அடையாளம் / எச்சரிக்கை பலகை இருக்க வேண்டும்.
  13. பேரிகேட் வைப்பது,  நெடுஞ்சாலைத்துறை  அல்லது போக்குவரத்துத்துறை  அல்லது காவல்துறை அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட வேண்டும்
  14. தடுப்புகள் வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து காவல்துறையால் வாங்கப்படுகின்றன. இந்த தடுப்புகள் இப்போது விளம்பரப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சானது, சந்திப்புகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் விளம்பரப் பதாகைகளுக்கு, ஏற்கனவே, தடை விதித்துள்ளது. நெடுஞ்சாலைகளில் விளம்பரங்களை அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதால், தகவல் தரும் பொருட்களைத் தவிர, விளம்பரப் பொருட்களுடன் கூடிய தடுப்புகளை அனுமதிக்கக் கூடாது. வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் தடுப்புகளில் எழுதக்கூடாது. 

எனவே, நீதிமன்ற கட்டளைகளை  மீறி, வாகன ஓட்டிகளின் உயிர் பாதுகாப்பிற்கு எதிரான  முறையில் வைக்கப்பட்டுள்ள பேரிகேட்களை, உடனே அகற்றும் பொறுப்பு போக்குவரத்து மற்றும், சட்ட ஒழுங்கு காவல்துறைக்கு நீதிமன்றம் கட்டளை யிட்டுள்ளதால். அவற்றை எவ்வித காலதாமதமும் இன்றி உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க காரைக்கால் மாவட்ட  வாழ் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். எங்கள் கோரிக்கையை மறுப்பதானால், 14 நாட்களுக்குள் எழுத்துபூர்வ பதில் தரவும். 

 

Copy to: இப்படிக்கு

  1. The Collector Karaikal
  2. SSP Karaikal
  3. SP Karaikal
  4. Town Pilce Karaikal MMY ஹமீது
  5. Traffic Police Karaikal மாவட்ட தலைவர் ஆம் ஆத்மி கட்சி
  6. Traffic Police TR Pattinam
  7. Enclosed MADRAS HIGH COURT MADURAI BENCH ORDER (WP(MD) No.12892/2017)

 

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »