உ.பி / குஜராத் போல் ஆகிறதா (புதுவை) காரைக்கால்?
காரைகாலில் பொய்யாதமூர்த்தி ஆலயம் மாதாகோவில் வீதி மற்றும் லெமர் வீதி சந்திப்பில் கிழக்கு வாசல் பார்த்து அமைத்துள்ளது. அதற்கு கிழக்கு புறமாக, மாதா கோவில் வீதியில், ஒரு அலங்கார வளைவு அமைக்க ஆலய நிர்வாகம் முயற்சி செய்து, கட்டமைப்பை தொடங்கியது. அதற்கு காரைக்கால் நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டதாக தெரியவில்லை. மேலும், கட்டுமான பணியை காரைக்கால் நிர்வாகம் தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது.
காரைக்கால் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெருவிக்கும் விதமாகவும், மீண்டும் கட்ட அனுமதிக்கும் விதமாகவும், அந்த ஆலய நிர்வாகிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்பினர் இன்று 23/03/2022 காரைகாலில் முழு கடையடைப்பு அறிவித்தனர். அதற்கு முழு ஆதரவு ப.ஜ.க. வழங்குகிறது.
அந்த கடையடைபிற்கு பலர் தங்கள் கடைகளை அடைத்து ஆதரவாகவும், பலர் ப.ஜ.க. அராஜக போக்கிற்கு பயந்தும் , சிலர் துணிச்சலாக தங்கள் கடைகளை அடைக்காமல் தங்கள் வியாபரத்தை தொடர்ந்தனர்.
அதில் புளியங்கொட்டை சாலையில் திறந்து இருந்த 3 Square என்ற வியாபர ஸ்தலத்தில் ப.ஜ.க. நிர்வாகிகள் பலரும், ஆலய நிர்வாகிகள் மற்றும் குழுக்கள் பலரும் ஒன்று சேர்ந்து, சத்தம் போட்டு மிரட்டி அந்த கடையை ஷட்டரை இழுத்து பூட்டிவிட்டு சென்றதாக மேற்படி வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஒரு கடையடைப்பு என்பது, தங்கள் கோரிக்கைக்கு உண்மையாக ஆதரவு தெரிவிக்க விரும்பும் நபர்கள், தானாக முன் வந்து தங்கள் வியாபாரத்தையும் வருமானத்தை தியாகம் செய்து தன்னிச்சையாக கடைகளை அடைத்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
ஆனால், இங்கு நடந்தது, ஒரு கட்டாய மிரட்டல் கடையடைப்பு, இப்படி செய்வதற்கு எந்த சட்டமும் அனுமதிக்கவில்லை. இப்படி கட்டாய மிரட்டல் விடுத்து நீங்கள் என்ன சாதிக்க போகிறீர்கள்?
நாளை வெளிவரும், பத்திரிகை செய்திகளில், பல இடங்களில் அடைக்கபட்டுள்ள கடைகளை போட்டோ எடுத்து, முழு கடையடைப்பு வேற்றி என்று சொல்லிகொள்வதில் பெருமை அடையவா?
அல்லது காரைக்கால் நிர்வாகத்திற்கு , “பாருங்கள் பொய்யாதமூர்த்தி ஆலய அலங்கார வளைவு கட்ட காரைகாலில் 100/100 நபர்கள் தங்கள் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்துவிட்டனர்” என்று கூறி பெருமை அடித்துகொள்ளவா?
பொதுவாக ஒரு கடையடைப்பை எந்த கட்சி அறிவித்தாலும், தங்கள் கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுவிடுமோ என்ற கோணத்தில்தான் அவரவர் தங்கள் கடைகளை அடைத்துகொள் கிரார்களே தவிர, ஆதரவு தெருவித்து அல்ல. இது எல்லா கட்சிகாரர்களுகும் நன்கே தெரியும்.
2014லில், ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்து சிறைத்தண்டனை வழங்கியதை எதிர்த்து, காரைக்காலில் ஆ.தி.மு.க.வினர் நடத்திய கடையடைப்புக்கு நான் ஆதரவு தெரிவிக்க விரும்பாததால். தனியாக போலீசில் பாதுகாப்பு கேட்டு, நான் என்னுடைய (ATTACK HYPER MARKET Kamarajar Salai, Karaikal) கடையை அடைக்கவில்லை. அது எனது உரிமை.
எனவே, கடையடுப்பு அவரவர் விருபத்தை பொறுத்தது, இதைகூடவா, கட்சி நிர்வாகிகளும், ஆலய நிர்வாகிகளும் பாதுகாப்பு குழுவும் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
இன்று இப்படி அராஜக செயலில் ஈடுபட்டு பிரச்சனை செய்த காரணத்தால், பொய்யாத மூர்த்தி ஆலய வளைவிற்கு ஆட்சேபனை தெரிவிக்காத பல நடுநிலைவாதிகள், இன்று முதல் ஆட்சேபனை தெரிவிப்பார்கள். அதனால், ஊசலாட்டத்தில் இருந்த அனுமதி, இனி கிடைப்பது குதிரை கொம்பு.
காவல் துறையின் பணி இங்கு தவறாக செயல்பட்டு இருக்கிறது. பொதுவாக கடையடைப்பு அறிவித்தால், கடைகளுக்குத்தான் பாதுகாப்பு தரவேண்டுமே தவிர, கடையடைப்பை வலியுறுத்தும் கும்பளுக்கு அல்லை. மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் திறன் கொண்ட போலீஸ் அமைப்பு காரைக்கலில் இல்லையா? மக்களை மிரட்டி, அராஜகம் செய்யும் கும்பலை தடுக்க காரைக்கால் காவல் துறைக்கு திராணி இல்லையா?
அராஜக அத்துமீறலில் ஈடுபட்ட கடையடைப்பு அறிவித்த அமைபினர்களுக்கும், தகுந்த நேரத்தில் போதுமான பாதுகாப்பு தர இயலாத காவல்துறைக்கும் ஆம் ஆத்மி கட்சி கண்டனத்தை தெரிவித்துகொள்கிறது.
இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடாமல், தகுந்த சட்ட நடவடிக்கைகள் தேவை. இதற்கு வணிகர்கள் ஆதரவு முழுமையாக தேவை. காரை வாழ் மக்களின் சகோதரத்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து அழிக்க நினைக்கும் கரையான் கூட்டத்தை ஒழிக்க ஒன்றுப்படுங்கள்.
இங்கு சாதி, மத, கட்சி, இன பேதமின்றி ஓரணியில் ஒன்றுபடுங்கள். வெற்றி நிச்சயம்.
<—– எனக்கு தாமதமாக கிடைத்த முழு விபரம்.
பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில் வாசலில், சாலையில், மண்டபம் கட்ட 2003 ல் அனுமதிபெறப்பட்டது. அந்த அனுமதி 2 வருடத்தில் காலாவதியாகும்படி கொடுக்கப்பட்டது. அப்போது கட்டப்படவில்லை.
திரும்ப 17 வருடங்கள் கழித்து 2 வருடங்களுக்கு முன் அனுமதி கோரிய போது, அருகில் அரசு உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள் உட்பட , முக்கிய கடைத்தெருவாக இருப்பதால், இருக்கும் போக்குவரத்து மிக அதிகமுள்ள சாலையில் ஆர்ச் அல்லது மண்டபம் கட்டுவது தவறானது. தவறான முன் மாதிரியாகிவிடும் என்று மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்படவில்லை.
மீண்டும் கடந்த நவம்பர்- டிசம்பரில் சாலையின் மேல் மண்டபம் கட்ட மாவட்ட ஆட்சியர், நகரமைப்பு குழுமம், பொதுப்பணித்துறை, காரைக்கால் நகராட்சி அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுத்த நிலையில், யார்கிட்டயும் அனுமதி வாங்காத நிலையில் அந்த ஆர்ச் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
உடனடியாக சில கட்சிகள், அமைப்புகள் தடை கேட்டு மாவட்ட ஆட்சியர் விடுமுறையில் சென்றதால் துணை ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வட்டாச்சியர், நகராட்சி ஆணையர் ஆகுயோரிடம் தடை கேட்டு மனு அளித்தனர்.
அந்த அதிகாரிகளுக்கு வக்கீல் மூலம் நோட்டிசும் அனுப்பப்பட்டது. மேலும் சில மனுக்களும் தபால் மூலம் அனுப்பப்பட்டது.
அந்நிலையில் நகராட்சி ஆணையர், ஆர்ச்சை கட்டுபவர்களுக்கு நோட்டீஸ் ஒன்றும் அனுப்பினார்.
அடுத்ததாக ஜனவரி 3 ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அதன் பிறகும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தபால் மூலம் மனு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜனவரி 28 ம் தேதி நகராட்சி ஆணையர் ஆர்ச்சை கட்டும் சம்பந்த பட்டவர்களுக்கு கட்டுவதை நிறுத்தவேண்டும். 10 நாட்களில் கட்டியவரை இடிக்கவேண்டும் என்றும் உத்தரவு ஆணை பிறப்பித்தார். அப்போதும் நிறுத்தப்படவில்லை. இவ்வளவு நடக்கும் போதும் , எந்த துறையிலும் அனுமதி வாங்காத அந்த ஆர்ச் கட்டிடத்தை வேகமாக கட்டினர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு, மூன்று முறை, கட்டுபவர்களின் சார்பில் ஆஜரான வக்கீல் மூலம் வாத, பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில், கடந்த 18. 03. 22 அன்று தீர்ப்பு கூறப்பட்டது.
இவ்வளவு நாட்கள், இவ்வளவு நடக்கும் போதும் அனுமதி பெறாத அந்த ஆர்ச்சை வேகமாக கட்டி விட்டு , கட்டிமுடித்தவுடன் தான் பிரச்சினை வந்து இடிக்க போவதாக சிலர் தங்களின் சுயநலத்திற்காக, தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.—–>
தொகுப்பு & பதிவு:

