2022-04-28 RTI KM Commissioner

அனுப்புனர்:

MMY. ஹமீது (7667 303030)

மாவட்ட தலைவர் ஆம் ஆத்மி கட்சி

46 வள்ளல் சீதக்காதி வீதி

காரைக்கால்-60902

பெறுனர்:

ஆணையர் அவர்கள்

நகராட்சி அலுவலகம்

காரைக்கால்

பொருள்: தகவல் பெரும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் தகவல் கோருதல் 

 

  1. தகவல் பெரும் உரிமை சட்டம் பிரிவு 4-1-B ன் படி, “தாமே முன் வந்து தகவல் வெளியிடுதல்” சட்ட அடிப்படையில் தங்கள் அலுவலகத்தில் நடக்கும் அனைத்து பணிகளின் விபரங்கள், ஊழியர்கள் விபரங்கள், சம்பளங்கள், பொறுப்புக்கள், போன்ற விஷயங்களை  பொதுமக்கள் அனைவருக்கும் சுலபமாக கிடைக்கும் வகையில் தெரியபடுத்த வேண்டும். அப்படி தங்கள் அலுவலக பணிகளை எந்த முறையில் பொதுமக்களுக்கு கிடைக்கதருகிரீர்கள் என்ற  முழு விபரம் தரவும்.
  2. 29-12-2021 அன்று மனுதாரராகிய நான், காரைக்காலில் குப்பை அகற்றும் HANDinHAND நிறுவனத்தின் வேலைகள்  தரமற்றதாக இருப்பதை சுற்றிக்காட்டி, தங்களுக்கு கொடுக்கபட்ட மனு மீது இதுநாள் வரையில் எடுக்கபட்ட நடவடிக்கைகள் விபரம் தரவும்.
  3. 18-03-2021 அன்று மனுதாரராகிய என்னுடை தெருவில் கழிவு நீர் ஓட வழியில்லாமல், பல வீடுகளின் படிக்கட்டுக்கள் சாக்கடைகளை அடைத்துக்கொண்டு இருபதாக கொடுத்த புகார் மீது இதுவரை எடுத்த நடவடிக்கைகள் விபரம் தரவும். 
  4. சாக்கடைகளை அடைத்தும், ரோடுகளை ஆக்கிரமிப்பு செய்தும், கட்டப்பட்டுள்ள படிகளை இடிக்க உத்தரவு நோட்டீஸ் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அனுபப்பட்டதது எனில், அந்த நோட்டீஸ் நகல் தரவும்.
  5. 21-02-2021 அன்று, எங்கள் பகுதி மக்கள் பலர் கையெழுத்திட்டு கொடுத்த மனுவில், தோமாஸ் அருள் வீதி முடிவில் “புது நகரில்” தண்ணீர் குழாய் போடுவதற்கு தோண்டப்பட்ட பள்ளங்கள்,  பல ஆண்டுகளாக மூடபடாமல், வாகனம் போய் வரவே இயலாத நிலையை சுட்டிக்காட்டி, சரி செய்துதர  கோரப்பட்டது. அந்த மனுவின் மீது எடுக்கபட்ட நடவடிக்கைகள் விபரம் தரவும்.
  6. 09-02-21அன்று, என்னுடைய RTI மனுவிற்கு, தங்களிடமிருந்து கிடைக்கப்பட்ட பதிலில், தண்ணீர் குழாய் பதிப்பதற்கு PWD துறைக்கு 22-02-2018 அனுமதி வழங்கப்பட்டதாகவும், வேலைகள் முடிந்ததும் அவர்களே சரியான முறையில் மூடித்தரவும்  உத்தரவு இடப்பட்டுள்ளது. ஆனால் காரைகாலில் பல தெருக்களில் சரியாக மூடப்படாமல் இருப்பதால், தாங்கள் PWD நிர்வாகத்தின் மேல் துறை ரீதியாக எடுக்கப்பட்ட, நடவடிக்கை விபரம் தரவும்.
  7. 21-02-2021 அன்று, எங்கள் பகுதி மக்கள் பலர் கையெழுத்திட்டு கொடுத்த மனுவில், தோமாஸ் அருள் வீதி முடிவில் “புது நகரில்” பொதுக்கழிபிடம் பழுதடைந்து உள்ளதையும், சுத்தம் செய்ய ஆட்கள் வராததையும் சுட்டிக்காட்டி, சரி செய்ய  கோரப்பட்ட மனுவிற்கு எடுக்கட்ட நடவடிக்கைகள் விபரம் தரவும்.
  8. 09-02-2022 அன்று, எங்கள் பகுதி மக்கள் பலர் கையெழுத்திட்டு, தங்களுக்கு ஏற்கனேவே  அளிக்கப்பட்ட மனுவிற்கு, தகுந்த கால கெடுவில் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி,  தங்களுக்கு அனுப்பிய Leagal Notice/சட்ட அறிவிப்பு கடிதத்தையும் பொருட்படுத்தாமல் அலட்சிய படுத்திய தங்கள் மீது, நீதிமன்ற மற்றும் பிரதம மந்திரி அலுவலக நடவடிக்கை எடுக்க, தங்கள் நிர்வாகத்தில் முன் அனுமதி பெறவேண்டும் எனில், அதன விபரம் தரவும்.

இப்படிக்கு 

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »