Step-2 Posted on 10-02-2022
காரைக்கால் விளையாட்டு அரங்கு சம்பந்தமாக, கலக்டர் அலுவலகத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இன்றுடன் சரியாக 30 நாட்கள் முடிவடையும் நிலையில். பதில்கள கிடைத்தன.
அதில் கேட்கப்பட்ட ஏழு கேள்விகளில் ஒரு கேள்வி தவிர அனைத்திற்கும் பதில்கள் உள்ளன. பதில்கள் திருப்தி அளிக்கிறது.
இந்த RTI கேட்கப்பட்டதற்கு காரணம், கடந்த 30 நாட்களுக்கு முன், சில இளைஞர்கள் என்னிடம் கொடுத்த புகாரானது, பொது ஜன இளைஞர்கள் விளையாட்டு அரங்கில், விளையாட சென்றால், அங்கு ஏற்கனேவே இருக்கும் சிலர், புது ஆட்களை விளையாட விட மறுப்பதாகவும், அப்படி விளையாட வேண்டுமென்றால், குறிப்பிட்ட க்ளப்பில் உறுப்பின் ஆக வேண்டும், அப்போதுதான் விளையாட முடியும் என்றும் தடுத்து விடுவதாக கூறினார்கள்.
ஆனால், இந்த விளையாட்டு அரங்கு, கல்வித்துறை கீழ் வருவதால், கல்வித்துறை எனக்கு கொடுத்து ருக்கும் பதிலில், வெளி விளையாட்டு அரங்கில் எவரும் விளையாடலான் எனவும், உள் விளையாட்டு அரங்கிற்கு மாதல் 400 முதல் 500 கட்டணம் இருபதாக தெரிவித்து உள்ளனர்.
இனி, நேரடியாக விளையாட்டு அரங்கிற்கு சென்று உள்ளே விளையாடுவதை தடுப்பவர்கள் மீது, காவல் நிலையத்தை புகார் அழிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் இளைஞர்களுக்காக எடுத்த இந்த முயற்சி முழுமையாக சரி செய்து தருவது காரைக்கால் ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பு.
Step-1 Posted on 10-01-2022
காரைகாலில், இருப்பதோ ஒரே ஒரு ஸ்டேடியம், அதில் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் வெளி விளையாட்டு அரங்கத்தில், இளைஞர்கள் விளையாடுவதற்கு எவ்வித நடைமுறைகளை காரைக்கால் நிர்வாகம் பின் பற்றுகிறது என்பது, பலருக்கும் தெரியவில்லை.
அங்கு தொடர்ச்சியாக விளையாடிகொண்டிருக்கும் க்ளப் போன்ற அமைப்புகள், பொது ஜன இளைஞர்களை விளையாட அனுமதிப்பதில்லை என்றும், அப்படி விளையாட வேண்டுமென்றால், அந்த க்ளப்களில் உறுபினராக வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் வந்த புகாரின் பேரில், இன்று 10-01-2022 காரைக்கால் கலக்டர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டப்படி ஆம் ஆத்மி கட்சி தலைமையில் தகவல் கேட்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வரும் பதில்களை பொறுத்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
RTI யில் கேட்கப்பட்ட கேள்விகள் விபரம் பின் வருமாறு.
தொகுப்பு மற்றும் பதிவு.
திரு. MMY. ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.