AAPKKL-2022-006-2 Collector LetterAAPKKL-2022-006-2 Collector Letter

Step-2 Posted on 10-02-2022

அழகிய காரைக்கால் நகர பகுதியில், பல இடங்களை, அரசு அதிகாரிகளே பழைய வாகனங்கள் நிறுத்தும் குப்பை கிடங்காக மாற்றி வருகின்றனர். அதற்காக பொதுநல மனுவாக காரைக்கால் ஆட்சியருக்கு கடந்த 10-01-2022 அன்று மனு அளிக்கப்பட்டது. ஆனாலும் இதுநாள் வரையில் நடவடிக்கையும் எடுக்கவில்லை, எந்த பதிலும் அளிக்கவில்லை. பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை நினைவேற்ற வேண்டியது ஒரு அரசின் கடமை. ஆனால் எருமை மாட்டின் மீது பெய்த மழையாக, பல அரசு அதிகாரிகள் எனப்படும் ஊழியர்கள் கண்டுகொள்வதே இல்லை. அதைப்போல ஒரு மாத காலமாக  நம்முடைய மனுவும் கண்டுகொள்ள படவில்லை.

அதற்காக இரண்டாவது நினைவூட்டல் மனு 09-02-2022 மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் சரியான நடவடிக்கை எடுக்க தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கை கலக்டர் மீதே எடுக்க  ஆம் ஆத்மி கட்சி தயங்காது.

நினைவூட்டல்இரண்டாவது மனு.

AAPKKL-2022-006-2 Collector Letter
AAPKKL-2022-006-2 Collector Letter

 

Step-1 Posted on 10-01-2022

காரைக்கால், நகர மத்தியிலும்  மாவட்ட ஆட்சியர் அலவலகம் நேர் எதிரிலும் அமைந்துள்ளது, கவர்னர் மால் திடல் என்ற ஒரு பாரம்பரியமிக்க அழகான திடல். காரைக்கால் சுதந்திரம் பெற்றது முதல் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வரை அங்குதான், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.

பிறகு, அந்நிகழ்ச்சிகள் ஸ்டேடியத்திற்கும், கடற்கரை சாலைக்கும் மாற்றப்பட்டது. அதனால், இந்த பழைய பாரம்பரியமிக்க நகர மத்தியில் அமைந்துள்ள அழகிய திடல், கேட்பாரற்று, கவனிப்பாரற்று போனது. தற்போது அதில், காலாவதியான பத்திற்கும் மேற்பட்ட பழைய வாகனங்களும், கழிவு நீர் (செப்டிக் டேன்க்) சுத்தம் செய்யும் பெரிய வாகனங்களும் நிறுத்தி வைக்கபட்டுள்ளது. மேலும், ஆடு, மாடு, நாய்கள் கொட்டகையாக மாறி, கழிவு துர்நாற்றம் வீசுகிறது.

அந்த திடலை சுற்றிதான், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதல் நிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வருவாய் துறை அலுவலகம், கணக்கர் அலுவலகம் போன்ற மிக மிக்கிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

அந்த அழகிய திடல் சீர்கெட்டு போய்க்கொண்டிருப்பது, அங்கு தினம் வந்து செல்லும், அதிகாரிகள் எனப்படும், அரசு ஊழியர்கள் கண்ணில்  படாமலா இருந்து இருக்கும். ஆனால் கவனிக்க ஆட்கள் இல்லை.

எனவே, ஆம் ஆத்மி கட்சி சார்பாக உடனே நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பதிவு.

திரு. M M Y. ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

 

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »