வணக்கம்,

காரைக்காலில்  ஒவ்வொரு வாரமும்  ஞாயிற்றுகிழமை மலை, இளைஞர் களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டம் நடந்து வருகிறது. அதன் படி, இன்று 09-01-2022 கூட்டம் நடைபெற்றது.

அதில்,

  • கடந்த நாள்களில் அரசு அலுவலகத்திற்கு, கொடுக்கப்பட்ட புகார்களில், அரசு நிர்ணயித்துள்ள கால கெடுவிற்குள், நடவடிக்கை எடுக்காத புகார்கள் மீது, மேல்முறையீடு செய்வதெனவும்.,
  1. புகார் எண்: AAPKKL2021001: நடவடிக்கை எடுக்கவில்லை.
  2. புகார் எண்: AAPKKL2021002 நடவடிக்கை எடிக்கவில்லை.
  3. புகார் எண் :AAPKKL2021003-3 தாமதம், ஆனாலும்  நடவடிக்கை எடுக்கபடுகிறது.
  4. புகார் எண்: AAPKKL2021004 நடவடிக்கை எடுக்கவில்லை.
  • காரைக்காலில், கலக்டர் அலுவலகம்  எதிரில் உள்ள அமைந்துள்ள, விளையாட்டு திடலில், பல காலாவதியான வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதை அப்புறப்படுத்தவும், மாடுகள் கழிவுகளை சுத்தம் செய்து, மீண்டும் விளையாட தகுதியானதாக செய்து தரவும் ,
  • காரைக்காலில், இருக்கும் ஒரே விளையாட்டு ஸ்டேடியத்தை, சில  விளையாட்டு க்ளப்கள் மட்டும் ஆக்கிரமித்து, பொதுஜன இளைஞர் களை விளையாட விடாமல் தடுத்து வருவதாக, வந்த புகாரின் பேரில், அது பற்றிய விபரம் ஆர்.டி.ஐ. மூலம் கேட்டு நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாகவும்.
  • வருகின்ற பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு, இளைஞர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், தற்போது நடக்கும் கூட்டம் போல ஒவ்வொரு இளைஞர்கள்  வீட்டிலும் தனித்தனி கூட்டம் ஏர்பாடு செய்யவது சம்பந்தமாகவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

தொகுப்பு மற்றும் பதிவு.

திரு. MMY. ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

 

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »