புதுச்சேரிக்கு (யூனியன் பிரதேசத்திலிருந்து) மாநிலத்தகுதி பெற்றுத்தந்திட ஆதரவு கேட்டு, 2000 பேரிடம் கையொப்பம் இட்ட கடிதம். ஆம் ஆத்மி கட்சி தலைவர் டில்லி முதல்வர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களிடம் சமர்ப்பிக்கப் படுகிறது.
அறிவு சார்ந்த பெரியோர்களே, சமூக ஆர்வலர்களே, பிற கட்சி பிரமுகர்களே மற்றும் தொண்டர்களே, வியாபார பெருமக்களே, இளைஞர்களே, இளம் பெண்களே, இக்கடிதத்தில் கையொப்பம் இடுவதோடு, பெயர், ஊர், செல் எண் ஆகியவற்றை குறிப்பிடவும் கேட்டுகொள்கிறோம்.
58 ஆண்டு கால பிரச்சனைக்கு தீர்வு காண, நாங்கள் முனைகிறோம். இதற்கு கட்சி பாகுபாடு, இயக்க பாகுபாடு, மொழி பாகுபாடு, இன பாகுபாடு இவற்றை ஒதிக்கி புதுவை வாழ் மக்கள் ஓரணியில் திரள, வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
புதுவைக்கு ஏன் மாநில தகுதி வேண்டும்? முழு விளக்கம் இங்கே க்ளிக் செய்யவும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில், உங்கள் விபரத்தை பதிவிட்டு, டிஜிட்டல் கையெப்பம் இடத்தில் டிக் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.