NR Rengasamy 2021 Election CommitmentNR Rengasamy 2021 Election Commitment

நம் நாடு, நம் மண், நம் மக்கள், என்ற உயர்ந்த நோக்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட,  என் ஆர் காங்கிரஸின் 15 தேர்தல் அறிக்கை இது. இதை முதலில் படித்துவிட்டு  கேள்விக்கு வருவோம்.

Loading...

தமிழ் புத்தாண்டில், பொங்கல் திருநாள் கொண்டாடும் அனைவருக்கும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

கொண்டாட்ட நிகழ்வுகள், திண்டாட்ட நிலைக்கு வர நாமே காரணமாக இருக்கிறோம். காரணம் நமது அறியாமை, இயலாமை, வறுமை, இவற்றை  பயன்படுத்தி, ஆட்சிக்கு வர நினைப்பவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், வாடிக்கையாக இருந்து வருகிறது. அவர்கள் ஏமாற்றுவதும், நாம் ஏமாறுவதும், தொடர்கதையாகி வருகிறது.

இன்று பொங்கல் திருநாளில், உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆம் ஆத்மி கட்சி, புதுவையில் ஆளும் அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை,  உங்கள் முன் வைத்து, சில கேள்விகளை உங்கள் சார்பாக ஆளும் அரசை பார்த்து கேட்கிறோம். ஏனெறால், ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் மக்களை மறந்து விடுகின்றனர் ஆட்சியாளர்கள்.

இந்த பதிவானது, ஓட்டு வாங்கிய ஆட்சியாளர்களுக்கும், ஓட்டு போட்ட மக்களுக்குமானது.

முதல் வாக்குறுதி, மாநில அந்தஸ்து. அரசு முழு அர்ப்பணிப்பு உணர்வோடு மத்திய அரசை வலியுறுத்தும்.

அர்ப்பணிப்பு எந்த அளவு நடந்து இருக்கிறது?

அடுத்து, நிதி மேலாண்மை, கடனை சமாளிக்க எங்களுக்கு ஓட்டு போடுங்கள்.

மத்திய அரசு மான்யம், 90-ல் இருந்து 70 ஆகி, அது பிறகு 27 ஆகி. இப்போது வெறும் 17.42 சதவீதமாகிவிட்டது. இதற்கு என்ன சொல்ல போகிறது ஆளும் அரசு.

மத்திய அரசின் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்துவோம்.

வலியுறுத்தினார்களா? மேலும் 1600 கோடி புதிய கடன் வாங்கியது தான் மிச்சம். அதனால், இப்போது கடன் 11000 கோடி ஆகிவிட்டது.

நிதிக் குழுவில், புதுச்சேரியை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பட்ஜெட் வரப்போகிறது. நிதிக் குழுவில் சேர்த்து விட்டீர்களா?

மழையும் வெள்ளமும் மாறி மாறி வருவதால் வருடம் ரூ 10 கோடி தருவதை 100 கோடியாக உயர்த்த வலியுறுத்தப்படும்.

வலியுறுத்தினார்களா? நடந்தது என்ன? ஏற்கனவே வழங்கியதில் இருந்து ரூ 5 கோடி குறைக்கப்பட்டு ரூ 5 கோடி மட்டும் வழங்கியது தெரியுமா?

9400 பணியிடங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிரப்பப் படும். இளைஞர்கள் வயது வரம்பு அரசுப் பணியில் சேர, 40 ஆக (one time relaxation) உயர்த்தப்படும்.

ஆண்டு முடிய இன்னும் நான்கு மாதங்களே உள்ளன? எத்தனை அரசு பணியிடங்கள் நிரப்ப பட்டுள்ளன? வாக்குறுதி அளித்த படி வயது வரம்பு  40 ஆக உயர்த்தப்பட்டதா? இந்த விஷயம் இளைஞர்களுக்கு தெரியுமா? இளைஞர் மன்றங்கள் கோரிக்கை வைக்காதா? வயது வரம்பை உயர்த்தி காலிப் பணியிடங்களை நிரப்புவார்களா? ஆளும் அரசு தான் இதற்கு விளக்கம் தரவேண்டும்.

வேலை வாய்ப்பை பெருக்க சேதராப்பட்டிலும், மேட்டுப்பாளையத்திலும், புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப் படும்.

இந்த ஆண்டில் எத்தனை புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப் பட்டன? அதில் எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது? இதற்கு ஆளும் அரசு பதில் சொல்ல வேண்டும்.

மத்திய அரசு அறிவித்துள்ள ஏழு ஜவுளி பூங்காவில், புதுச்சேரியில் ஒரு பூங்கா அமைக்க வலியுறுத்தப் படும்.

ஒரு பூங்கா எப்போது அமைக்கப்படும்?

மத்திய அரசு அலுவலகங்களில், முதன்மை பணி தவிர மற்ற பதவியிடங்கள், மண்ணின் மைந்தர்களுக்கு அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

வலியுறுத்தப்பட்டதா? எத்தனை பணியிடங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது?

தனியார் தொழிற்சாலை 50 சதவீத மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.

தயவு செய்து தற்போது உண்மையான வேலை கணக்கெடுப்பு. நடத்தினால, வட இந்திய ஆக்கிரமிப்பு தெரிந்து விடும்.

தொழில் நுட்ப நிறுவனங்களிடம் பேசி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தரப்படும்.

பேச்சு வார்த்தை நடந்ததா? வேலை வாய்ப்பு பெற்று தரப்பட்டதா?

ஓராண்டுக்குள், உள்ளாட்சி. தேர்தல் நடத்தப்படும்.

கேட்டு கேட்டு காது புளித்து விட்டது. உச்ச நீதிமன்றமே சொல்லியும். உரைக்க வில்லை.

சேவை உரிமை பெறும் சட்டம், அமல் படுத்த படும்.

2010-ல் சட்டம் அமல் ஆனது. ஆளும் கட்சியாக இருந்த போதும் அமல் படுத்த வில்லை. எதிர்க்கட்சியாக இருந்த போதும் வாய் திறக்கவில்லை. இப்போது வாக்குறுதி மீண்டும் அளித்து இருக்கிறீர்கள். புதுவை மக்களை பைத்தியக்காரர்களாக  நினைத்து விட்டீர்களா?

ஒவ்வொரு தொகுதிக்கும் மேம்பாட்டு அலுவலர். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை துறை வாரியாக குறை தீர்க்கும் கூட்டம். தலைமை தகவல் ஆணையம் அமைக்கப்படும்.

அப்படி எதுவுமே செய்த மாதிரியோ,  நடந்த மாதிரியோ  தெரியவில்லை. ஐந்து வருட முடிவில்தான்  நடவடிக்கை எடுக்கப்படுமா?

கல்வி வாரியம் அமைக்க படும்.

கல்வி மிக முக்கியமானது என்றபோதிலும், அதற்கும் இன்னும் வழி பிறக்கவில்லை.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், அனைத்து பாடப்பிரிவுகளிலிலும் 25 சதவீதம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்துவோம்.

வலியுறுத்தினார்களா?

10 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, டேப்லட். 11-12 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படும்.

வழங்கினார்களா?

மழலையர் வகுப்பு ஆரம்பிக்கப்படும்.

மழலையர் பள்ளி. ஆரம்பிக்கப்பட்டதா?

பட்டய வகுப்பு முடித்தவர் ஆசிரியராக நியமனம் செய்யப்படுவர்.

ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனரா?

பாப்ஸ்கோ, பாசிக், மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் புனரமைக்கப்பட்டு,  தற்சார்பு நிறுவனங்கள் ஆக மாற்றப்படும்.

புனரமைக்கப்பட்டதா?

நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டு, மாதந்தோறும் மலிவான விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்படும்.

அதன் படி ஏதாவது வழங்கப்பட்டதா?

பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

பல் நோக்கு கூட்டுறவு சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டதா? தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதா?

நியாய விலை அட்டை காரர்களுக்கு, அரசு கொள்கை படி, வங்கியில் பணம் செலுத்தவும், பணம் வேண்டுவோர், பொருள் வேண்டுவோர், எதுவும் வேண்டாதோர் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும்.

அப்படி ஏதாவது பிரிக்கப்பட்டுள்ளதா?

முதியோர் ஓய்வூதியம். 90 வயதுக்கு மேல் ரூ 5000, 100 வயதுக்கு மேல் ரூ 10000 வழங்கப்படும்.

வழங்க அரசாணை ஏதாவது வெளியிடப்பட்டதா.

வங்கிகளில் அரசு உதவி பெறுவோருக்கு, அவசர கடனாக ரூ 10000 வழங்க நடவடிக்கை எடுப்போம்.

அப்படி ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா.

புதுச்சேரியில் 40 மசூதி களுக்கும், ரமலான் மாதங்களில் ரூ 2 லட்சம் வழங்கப்படும்.

வழங்கினீர்களா.

ஆதிதிராவிடர் நல சிறப்பு கூறு நிதி, அந்த துறைக்கு முழுமையாக செலவிடப்படும்.

அரசாணை ஏதாவது வெளியிடப்பட்டுள்ளதா?

தொடரும்…… 5

***

ஏற்கனவே உள்ள அரசாணைகளை செயல் படுத்தினாலே, நடைமுறை படுத்தினாலே போதும். எதையுமே செய்தபாடில்லை.

வாக்குறுதிகளை ஆளும் அரசும் சரி, அடுத்த தேர்தலில் ஓட்டு கேட்க வரும் எதிர் கட்சிகளும் சரி, ஓட்டு போடப் போகும் மக்களும் சரி,  தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்போது தான் நாடும் உருப்படும். நாமும் உருப்படுவோம்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டில், வாக்குறுதிகளை இதுவரை  75 சதவீதம் நிறைவேற்ற பட்டுள்ளன. இன்னும் இங்கு ஆரம்பிக்கவே இல்லை என்றால் எப்படி?

இளைஞர் மன்றங்களும், அமைப்புகளும், ஏன் கேட்கவில்லை? ஏன் பொங்கி எழவில்லை? போராட முன் வரவில்லை? என்ற கேள்வி நம் முன் எழுந்தாலும், விழிப்புணர்வு மங்கிய நிலை. அவர்கள் மீது ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தினாலும், கோபம் தான் ஏற்படுகிறது.

வாக்குறுதி தருகின்றனர், அதை நிறைவேற்றாமல் ஏமாற்றினால், கோபம் வந்திருக்கவேண்டும். அல்லது, இனிமேலாவது கோபம் வரவேண்டும். வரவில்லை என்றால், நீ இளைஞன் என்று சொல்லி கொள்வதற்கு அருகதை இல்லை.

ஆளும் அரசின் வாக்குறுதிகளும். மக்கள் சார்பாக ஆம் ஆத்மி கட்சியின் கேள்விகளும். தொடரும்…

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.                                                                                                          செயற்குழு உறுப்பினர்.                                                                                                                        ஆம் ஆத்மி கட்சி.                                                                                                                              புதுச்சேரி.

பதிவு.

திரு. MMY. ஹமீது.                                                                                                                              மாவட்ட தலைவர்.                                                                                                                                      ஆம் ஆத்மி கட்சி.                                                                                                                காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »