அன்பார்ந்த 2022 வது ஆண்டின் இளைஞர்களே, உங்களுக்கு 1980 வது ஆண்டின் இளைஞர்கள்.
தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நம் வரலாற்றை பற்றி. நாம் தெரிந்து கொண்டால் தான், நம் மாநிலத்தின் பெருமையும், தியாக அர்ப்பணிப்பு உணர்வும் நமக்கு தெரியும்.
எட்டு மணி நேர வேலையை பெற துப்பாக்கி குண்டை எதிர்நோக்கிய வர்கள், பிரெஞ்சு இந்திய விடுதலைக்காக அடக்குமுறையை கண்டவர்கள், தியாக மறவர்கள், பாவேந்தர் பாரதி, சுப்பையா, டி கே ராமானுஜம், தியாகிகளை பெற்ற பூமி. இதன் முழு வரலாற்றை முழுமையாக அறிந்தவர்கள் நாங்கள்.

அப்போது மக்களுக்கு கம்யூனிஸ்டுகளும், இளைஞர் மன்றங்களும், அரசு ஊழியர் சங்கங்களும், போர்படையாக பாதுகாப்பாக இருந்தன.

சுப்பையா,  டி கே ராமானுஜம், சி எச் பாலமோகனன், விசுவநாதன், கருனாஜோதி, மற்றும் இளையபெருமாள் போன்றவர்கள், அப்போதைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, விளங்கியவர்கள்.

இப்போது இருப்பது போல் அப்போது இல்லை. அனைத்திலுமே ஒரு நேர்மை இருந்தது. மக்களுக்கு பாதுகாப்பு இருந்தது. இளைஞர் மன்றங்கள், பஞ்சாலை தொழிற் சங்கங்கள், நெசவாளர் தொழிற் சங்கங்கள், எஸ்டேட் தொழிற் சங்கங்கள், பஞ்சாயத்து தொழிலாளர் சங்கங்கள்.. கூட்டுறவு.. ஊழியர் சங்கங்கள்.. ஆகியன முறையாக விழிப்புடன் இயங்கிய காலம் அது. கம்யூனிஸ்டுகளின் கண்காணிப்பு தீவிரமாக இருந்த காலம்.

அரசு ஊழியர் சங்கங்கள், சி எச் பாலமோகனன். சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட காலம். அப்போது இருந்த இளைஞர் மன்றங்கள், செய்த போராட்டங்கள் அரசாங்கத்தையே அதிரவைக்கும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில், சீனியாரிட்டி அடிப்படையில் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்ப படும். தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு இருந்தது. நெசவாளர்களுக்கு ஒரு ஆபத்து என்றால், பஞ்ஞாலை தொழிலாளர் பொங்கி எழுவர். பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் அரசு ஊழியர்கள் பொங்கி எழுவர். விலைவாசி உயர்வு, கம்யூனிஸ்டுகள் தலைமையில் அனைவருவருமே பொங்கி எழுவர்.

எங்களின் காலம், பொற்காலம், போராட்ட காலம். நேர்மையான தலைவர்கள் இருந்தார்கள். உண்மையான போராட்டங்கள் நடந்தன.
நிம்மதியாக வாழ்ந்தோம்.

ஆனால், இப்போது உங்கள் நிலையை பார்த்து ரத்த கண்ணீர் வடிக்கிறோம், உள்ளம் பதறுகிறது. தற்போதைய பொருளாதார சூழலில் எல்லாமே மாறி விட்டது. ஆனால் கட்சியும் கொள்கைகளும், அவை கொண்ட கோட்பாடுகளும் மாறுவதில்லை. அப்படி மாறினாலோ, செயல் பட்டாலோ, ஆபத்து தான்.

இப்போது இருக்கும் கட்சிகளோ, அரசியல் வாதிகளோ, அவ்வளவாக ஆற்றல் படைத்தவர்கள் இல்லை. தொலைநோக்கு திட்டங்கள் இல்லை. சுயநலம் கொண்ட அரசியல் வியாபாரிகளும், இன்று அனைத்து கட்சியிலும் நீக்க மற நிறைந்து விட்டதால், அனைத்து உரிமைகளையும் உடமைகளையும் இழந்து நிற்கிறோம்.

இளைஞர்களே.
உரிமை இழக்கலாம்,
உடமை இழக்கலாம்,
உணர்வை இழக்கலாமா?

இப்போதைய அரசியல் வாதிகள், சிறந்த நடிகர்களாக இருக்கின்றனர். இவர்களிடம், இளைஞர்கள் அல்லக்கைகளாக சுற்றி அலைவது ஏன்?

எந்த தலைவர்களுக்கு நாங்கள் இவ்வளவு துதி பாடியது இல்லை. பிறந்த நாள் கொண்டாடியது இல்லை. ஏமாந்ததும் இல்லை.

நீங்கள் இளைஞர்கள். உங்களிடம் இளமை இருக்கிறது. வீரம் இருக்கிறது. விவேகம் இருக்கிறது. ஆட்சியையே மாற்றியமைக்க கூடிய சக்தி இருக்கிறது. இருந்தும் ஏன் இந்த மயான அமைதி.
உன் சக்தியை இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு, மக்கள் நலனுக்கு காட்டு.
யானை தன் பலத்தை அறியாதவரை அதன் பாகன் அதை பிச்சை எடுக்க வைப்பான். அதன் பலம் அதற்கு தெரிந்து விட்டால், மதம் கொண்டு விட்டால், முதலில் அது தண்டிப்பது அந்த பாகனைத்தான்.

2022 ம் ஆண்டின் இளைஞர்களே. உங்களிடம் உடல் பலம் இருக்கிறது. இளமை உன் தோளில் இருக்கிறது. எதிர்நீச்சல் போட்டால் நிச்சயம் வெற்றி உனக்குத் தான்.

எங்களுக்கு மன பலம் இருக்கிறது. உடல் பலம் இல்லை. நீங்கள் போர்க்களத்தில் இறங்கி புதுச்சேரி மாநிலத்தை மாநில மக்களை, இந்த ஊழல் கறைபடிந்த அழுக்குகளை களைய முற்பட்டால். எங்கள் முழு ஆதரவு நிச்சயம் அளிப்போம். களத்தில் இறங்கு, காலம் நேரம் பார்க்காதே.
காலம் கடத்தும் ஒவ்வொரு செயலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

நமது சகோதர சகோதரிகள்.
வேலை இன்றியும், சம்பளம் இல்லாமலும், பசியும் பட்டிணியுமாக இருக்கிறார்களே, இதற்கு நிரந்தர முடிவு கட்ட உன்னால் மட்டுமே முடியும்.

காலம் கடத்தினால் இளைஞனே, அரசு கஜானாவை காலி செய்து விட்டு, மதுபானக்கடைகளை அதிகமாக்கி, உல்லாச விடுதிகளை அதிகப்படுத்தி, குப்பை கூட்டவும், எச்சை கிளாஸ் கழுவவும் விட்டு விடுவார்கள்.
இதைக் கூட செய்ய இப்போது வட இந்திய இளைஞர்கள் குவியத்தொடங்கி விட்டனர். இதையெல்லாம் உணர்ந்து செயல்படா விட்டால், நீ சொந்த மாநிலத்திலேயே அகதி யாவப் போவது நிச்சயம்.

மாற்றம் இனி உன்னிடம் இருந்தே ஆரம்ப மாகட்டும்.

2022 ம் ஆண்டு புதுச்சேரிக்கு, புதுச்சேரி மக்களுக்கு, உன் செயலால் வீறு கொண்டு எழட்டும், எரிமலைக்கு இன்னும் ஏன் உறக்கம்? ரத்த சாட்டையை கையில் எடு.

இப்படிக்கு.

உன் வருகைக்காக, காத்திருக்கும், ஆதரவு தர இருக்கும்,
80 வது ஆண்டு இளைஞர்கள்.

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.                                                                                                          செயற்குழு உறுப்பினர்.                                                                                                                        ஆம் ஆத்மி கட்சி.                                                                                                                              புதுச்சேரி.

பதிவு.

திரு. MMY. ஹமீது.                                                                                                                              மாவட்ட தலைவர்.                                                                                                                                      ஆம் ஆத்மி கட்சி.                                                                                                                காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »