மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவே அரசு, அந்த தேவைகளுக்கான வேலைகளை செய்யவே அரசு ஊழியர்கள். அந்த வேலைகளை கண்காணிக்கவே, மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசியல் ஊழியர்கள் (அரசியல் தலைவர்கள்) . இந்த உண்மையை ஊழியம் செய்யகூடியவர்கள் மறந்ததோடு மட்டுமில்லாமல், மக்கள் மனதிலும் மறக்கடித்துவிட்டார்கள்.
அரசியல் மற்றும் அரசு ஊழியர்களின் மனதில், தன்னை எஜமானர்கள் போலவும், மக்களை யாசகர்கள் போலவும் நினைத்துக்கொண்டு, எதோ விரும்பினால் தர்மம் போடுவதற்கு உரிமை உள்ளது போல, அவர்கள் விரும்பினால் மட்டுமே மக்கள் தேவைகளுக்கான வேலைகளை செய்ய தொடக்கி விட்டனர்.
காலப்போக்கில் , இந்த மனநிலை மக்கள் மனதிலும் தொற்றிக்கொள்ள, தன்னை யாசகர்களாவே மாற்றிக்கொண்டு, தன் தேவைகளை, ஊழியர்களிடம் குனிந்து, பணிந்து, அடங்கி, கெஞ்சி, கொஞ்சி, கேட்கத் தொடங்கிவிட்டனர். சுருக்கமாக சொல்லபோனால், பொதுமக்கள் தங்களை தாங்களே அடிமைகளாக மாற்றிக்கொண்டு விட்டனர்.
இந்த நிலையை மாற்ற, எந்த அரசியல் தலைவர்களும் முன் வருவதாகவே தெரியவில்லை. மட்டுமில்லாமல், இந்நிலையை தங்களுக்கு சாதகமாக அமைத்துகொண்டு. அரசு ஊழியர்கள் வேலைகளை செய்யாமல் அல்லது கால தாமதப்படுத்தும் போது, அவர்களுக்கு தன் கண்டனத்தை தெரிவிக்காமலும், தண்டனை வாங்கிகொடுக்காமலும், தானாக வந்து சிக்கிய அடிமை மக்களுக்கு உதவி செய்வது போல, நன்றாக நடிக்க கற்றுகொண்டுவிட்டனர்.
ஒரு பக்கம், “கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன்” என்று சொல்லி ஓட்டுக்களை வாங்கியவன், இன்று, நம்மை ஓட வைத்துவிட்டானே என்ற கவலை கூட, மக்களின் மனதில் இல்லை. ஒரு அரசியல் திருடனுக்கு ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்ளும் கேடுகெட்ட கூட்டம் மறு பக்கம்.
அரசு நிறைவேற்றும், எந்த ஒரு அறிவிப்பும் “அரசானையாக” அவ்வப்போது வெளிவருகிறது. அந்த அரசானைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய பனி, அரசியல் ஊழியர்கள் கையிலும் ஊழியர்களை கையிலும் உள்ளது. ஆனால் அந்த வேலையை மட்டும் அவர்கள் செய்வதில்லை. காரணம், உண்மை தெரிந்துவிட்டால் அடிமை மக்கள் உரிமை கோருவார்கள்.
ஆனால், ஆம் ஆத்மி கட்சி இதை சாதாரணமாக விடுவதாக இல்லை. மக்கள்தான் இந்நாட்டின் மன்னர்கள் என்பதையும், மக்கள் பணத்திலிருந்து ஊதியம் வாங்கும் அரசியல் தலைவர்களும், அரசு ஊழியர்களும், மக்களுக்கு ஊழியம் செய்யவே மட்டுமின்றி வேறெதற்கும் இல்லை என்பதை முத்தரபினருக்கும் கட்டாயம் தெரிவிபோம்.
இதற்கு ஊழியர்கள் கட்டுப்படாமலும், அரசு கண்டுகொள்ளாமலும் இருக்கும் பட்சத்தில், மக்களை ஒன்று திரட்டி வரி செலுத்தா போராட்டம் ஒன்றை ஆம் ஆத்மி கட்சி அறிவிக்கும்.
எனவே, மாநில அரசே, மக்களின் தேவைகளை குறித்த நேரத்தில் நிறைவேற்ற கொண்டுவரப்பட்ட “சேவை பெரும் உரிமை சட்டத்தை” உடனே அமுல் படுத்து.
அரசியல் ஊழியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும் நடக்கும் இந்த சதுரங்க விளையாட்டில், இறுதியாக வெல்வது இந்நாட்டின் மன்னர்களே.
தொகுப்பு & பதிவு.
திரு. MMY. ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.