சேவை பெறும் உரிமை சட்டம். ஒரு பார்வை.
இந்த சட்டம் ஆனது 2010 ஆம் ஆண்டு உருவாக்க பட்டது.
இதன் நோக்கம், பொதுமக்கள் தங்கள் தேவைக்காக அரசு அலுவலகங்களில் அலைந்து, திரிந்து, வணங்கி, குனிந்து, பணிந்து, தனக்கான சேவைகளை பெறுவதற்கு பதிலாக, நமது வரிப் பணத்தில் இயங்கும் அரசு ஊழியர்களிடம் உரிமையுடன் கேட்பது தான் இந்த சட்டம்.
இந்த சட்டம் சொல்வது என்ன?
ஒவ்வொரு துறையிலும், மக்களின் குறைகள், புகார்கள், பிரச்னைகள், தேவைகள், போன்றவை காலதாமதமின்றி குறிப்பிட்ட கெடுவிற்குள் தீர்க்கப்பபட வேண்டும். இந்த சட்டம் முதல் முதலாக, மத்திய பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் , 2010 ல் அமல் படுத்தப்பட்டது.
பிறகு, 2015 வரை 21 மாநிலங்களில் அமல் படுத்தப்பட்டது.
பிறகு, 2019 ல் சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் அமல் படுத்தப்பட்டது.
ஆனால், புதுச்சேரியில் 2011 முதல் 2016 வரை, ஆட்சி செய்த திரு ரங்கசாமியும் கண்டு கொள்ளவில்லை. 2016 முதல் 2021 வரை ஆட்சி செய்த திரு நாராயணசாமியும் கண்டு கொள்ளவில்லை.
இந்த சட்டத்தை சட்டமன்றத்தில் முன் வைப்பது, உயர் அதிகாரிகளின் பணி. இந்த சட்டத்தை அமுல் படுத்தினால், அவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். ஆதலால் அவர்களும் இந்த சட்டத்தை அமல் படுத்த நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட. மக்களுக்குத்தான் இதில் அலைச்சல் அதிகம். அதுமட்டுமின்றி, ஊழலும், இடைத்தரகர் நிலையும் அல்லக்கைகளின் அளப்பறைகளும் அதிகமாக இருக்கின்றன.
உரிமையுடன் கேட்க வேண்டிய மக்கள், இந்த சட்டம் அமல் படுத்தாத நிலையில், சட்டமன்ற உறுப்பினர் வீட்டு வாசலிலும், அலுவக வாசலிலும் நின்று கெஞ்சி, விண்ணப்படிவம் பெற வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை சமீபத்தில் அமல் படுத்திய சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் அரசு ஆணை பதிவு கீழே உள்ளது. இதை பார்த்து சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகள், புரிந்து கொள்ளலாம்.
இந்த ஆவணம், 75 பக்கங்களை உள்ளாக்கியது. ஒவ்வொரு துறையும், ஓவ்வொரு வேலைகளையும் எந்தனை நாட்களுக்குள் மக்களுக்கு செய்து தரவேண்டும் என்ற முழு விபரமும் இதில் தரப்பட்டுள்ளது.
சேவைபெரும் உரிமை சட்டம்.சேவைபெரும் உரிமை சட்டம்.
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு.
திரு. MMY. ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.