காரைக்கால் மின் துறை அலுவலகத்தில், மின் இணைப்பு ரசீதில் வீட்டின் கதவு எண் மாற்றகோரி, புகார் மனு ஒன்று அளித்திருந்தேன். அந்த மனுவையும் அப்போது நடந்த உரையாடலையும் ஆடியோ பதிவையும் “ஆம் ஆத்மி பார்ட்டி” இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தேன்.
அந்த பதிவை படிக்காதவர்கள் இங்கே க்ளிக் செய்து பார்க்கவும்
இன்று காலை 28-12-2021 மின் துறை அலுவலகத்திலிருந்து வந்த போன் அழைப்பில், இக்பால் என்ற மின்துறை ஊழியர், பணிவாக என்னிடம் சில கேள்விகள் கேட்டார். அதில், நேற்று கொடுத்த புகார் மனுவுக்கான தீர்வை, ஒரே நாளில் எப்படி சரி செய்ய முடியும்? என்றார், அதற்கு நான், நான் ஒரே நாளில் கேட்கவில்லை, அரசு ஆணைப்படி பத்து நாட்களுக்குள் சரி செய்தால் போதும் என்றேன். அப்போது பக்கத்திலிருந்து குறுக்கிட்ட வேறு ஒரு ஊழியர், “அந்த ஆளிடம் என்ன பேச்சி பேனை வைங்க ” என்று கீழ்தர தமிழில் பேசினார். அந்த ஆடியோவை இங்கே கேட்கவும்.
ஏன்? அந்த கீழ்தர தமிழில் பேசிய நபர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கூடாது? என்று யோசித்து வருகிறேன்.
எது எப்படியோ, அரசு ஊழியர்கள் செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டால், இப்படி விஷயத்தை அம்பலபடுத்தும் போது, அவர்களுக்கு கோபம் வருகிறது என்பது தெளிவாகிறது.
- லஞ்சம் கேட்பார்கள், ஆனால் யாருக்கும் தெரியகூடாது.
- வேளையை தாமதப்படுத்துவார்கள். அதுவும் யாருக்கும் தெரியகூடாது.
- சரியான நேரத்திற்கு வேலைக்கு வர மாட்டார்கள் அதுவும் யாருக்கும் தெரியகூடாது.
- கேள்வி கேட்டால், சரியாக பதிலும் சொல்ல மாட்டார்கள்.
- முக்கியமாக, அரசானை அல்லது சட்டம் என்று எதையும் அவர்களிடம் பேசிவிட கூடாது.
ஆனால், பொதுமக்கள் வரியை மட்டும் கட்டிவிட்டு, விளகெண்ணை போல இருக்கவேண்டும். இதுதான் இவர்களின் எதிர்பார்ப்பு.
தொகுப்பு மற்றும் பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.