Step-2 Posted on 21-12-2022
காரைக்கால் நகராட்சி ஆணையருக்கு, காரைக்கால் தோமாஸ் அருள் வீதி புது நகரில் இருக்கும் மூன்று அவல நிலையை சரி செய்து தர கோரி, கடந்த 21-12-2022 அன்று, குடியிருப்பு வாசிகள் சுமார் 20 நபர்கள் கையெழுத்துடன் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அதற்காக எந்த நடவடிக்கையோ பதிலோ காரைக்கால் நகராட்சி தராத நிலையில்,
01-02-2022 அன்று அதே நகர் குடியிருப்பு வாசிகள் 40 நபர்கள் கையெழுத்துடன் லீகல் நோட்டீஸ் (Legal Notice) அனுப்பப்பட்டுள்ளது. இப்போது இருக்கு அரசு ஊழியர்கள் பலர், மக்களில் கோரிக்கைகளை அலட்சிம் செய்பவர்களாக உள்ளனர், ஆனால், ஆம் ஆத்மி கட்சி அதை சுலபாமா விடுவதாக இல்லை. மக்களிடம் ஊதியம் வாங்கும் எவரும் மகளுக்கான ஊழியத்தை செய்தே ஆக வேண்டும். எனவே நோட்டிசில் குறிபிட்டபடி கோரிக்கைகள் நிறைவேற்றபடவிட்டால், காரைக்கால் ஆணையர் மீது, சட்ட நடவடிக்கை தொடர ஆம் ஆத்மி கட்சி தயாராக உள்ளது.
கொடுக்கப்பட்ட நோடீஸ் :
பத்திரிகை செய்தி:
Step-1 Posted on 21-12-2022
காரைக்கால் தோமாஸ் அருள் வீதி புது நகரில், கடந்தாண்டு புதிய குடிநீர் குழாய் பதிக்க, சிமெண்ட் ரோட்டை உடைத்து தோண்டப்பட்ட பல பள்ளங்கள், சரிவர மூடாததால், வாகனங்கள் பள்ளிகுழைந்ததடுமாரி விழுவதும், பள்ளிக்குழந்தைகள் தடுமாறி விழுவதும் வாடிக்கையாவிட்டது.
காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான பொது கழிப்பிடம் ஒன்று சுத்தம் இல்லாமலும், பராமரிப்பு இல்லாமலும் மழை நேரங்களில் தண்ணீர் சொட்டுகிறது.
சாக்கடைகள் பல இடங்களில் உடைந்துள்ளதால், தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகத்துள்ளது.
மேற்கண்ட மூன்று குறைகளையும் நிவர்த்தி செய்ய கோரி, 21-12-21 அன்று தெரு மக்கள் சார்பாக, காரைக்கால் நகராட்சி ஆணையருக்கு புகார் அளிக்கட்டுள்ளது. அந்த புகார் மனுவை இங்கே வெளிபடுத்தி அம்பலபடுத்துகிறோம். குறிப்பிட்ட புகாரை நகராட்சி எப்படி கையாளுகிறது எப்படி குறைகளை நிவர்த்தி செய்கிறது அல்லது அதில் அலட்சியம் காட்டுகிறதா? கிடப்பில் போடுகிறதா? என்ற விஷயம், பொது மக்களுக்கு இந்த இணையதளம் மூலம் தெரியபடுத்தப்படும்.
கொடுக்கப்பட்ட முதல் புகார்:
ஏன் அம்பலபடுத்தவேண்டும்? விபரம் அறிய click here