EB Complain 2021-12-27 at 15.43.27EB Complain 2021-12-27 at 15.43.27

புகார் எண்:Ref-AAPKKL2021003-1

Count Down Starts:

காரைக்கால், வள்ளல் சீதக்காதி வீதியில் அமைந்துள்ள, என்னுடைய கட்டடத்தின் மின் இணைப்பு ரசீதில், தவறான கதவு எண் இருப்பதை மாற்றிக்கேட்டு விண்ணபித்துள்ளேன்.

நான் அலுவலகம் சென்றபோது, மனுக்கள் பெரும் இடத்தில் யாருமில்லை. பிறகு நான், அங்கே இருந்த புகார் பலகையில் குறிப்பிடபட்டிருந்த, மேல் அதிகாரிக்கு போன் செய்து விஷயத்தை சொன்னது அவரே நேரில் வந்து என் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டார். அப்போது, அவரிடம் நடந்த கலந்துரையாடல்தான் இந்த ஆடியோ பதிவு.

திருத்தம்: என்னுடைய குரல் பதிலில் 2010 க்கு பதிலாக 1912 என்று தவறாக கூறிவிட்டேன்.

 

மேற்படி விண்ணப்பத்தின் பிரச்சனையை 10 நாட்களில்  சரி செய்யவோ அல்லது பதில் அளிக்கவோ வேண்டுமென்று புதுவை அரசின் GO சொல்கிறது. அந்த GO வை படிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், என்னுடைய மனுவிற்கு நடவடிக்கை எடுக்க,  36 கதவு எண் கொண்ட ஆதாரம் கேட்ட வகையில், என்னுடைய கட்டடத்தின் நகராட்சி வரி ரசீதை, இன்று 28-12-2021 பகல் ஒரு மணிக்கு , என்னிடம் மனு பெற்றுக்கொண்ட அதே அரசு ஊழியரிடம் (அதிகாரியிடம்) கொடுத்துள்ளேன். அந்த ரசீது இதோ.

House TAX
House TAX

ஆனால், புதுச்சேரியில் அரசு நிர்வாகத்தில், எந்த மனுவும் GO வில் குறிப்பிடப்பட்டுள்ளது போல சரி செய்ததாக தெரியவில்லை. ஆனால் இனி சும்மா விடப்போவதில்லை.

அதற்கு உயர்நீதி மன்றம் நமக்கு துணை நிற்கும்.

High court ideas
High court ideas

மேலும், புதுவை அரசு நிர்வாகத்தில் அனைத்து அலுவலகங்களும் மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை மட்டுமே சாப்பாடு நேரமாக எடுத்துகொள்ள வேண்டும். ஆனால், அரசு ஊழியர்களின் சொந்த விருபத்திற்கு ஒரு மணிக்கு முன்னதாக வேலையை நிறுத்திவிட்டு, மூன்று மணிக்கு மேலாகத்தான் வேலையை தொடங்குகிறார்கள். அதிலும், பல அலுவலகங்களை பூட்டிவிட்டு சென்று விடுகிறனர். உதாரணம்: காரைக்கால் போக்குவரத்து அலுவலகம்.

மெத்தனம் காட்டும் அதிகாரிகளின், வேலையை பறிப்பதில் ஆம் ஆத்மி கட்சி தனி கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

 

தொகுப்பு மற்றும் பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »