High court ideas

ஓட்டு போட்டு பார்த்தீர்களே , கேள்வி கேட்டு பார்த்தீர்களா?

கேள்வி கேட்டுதான் பாருங்களேன். இல்லை, கேள்வி கேட்பவர்களையாவது ஆதரியுங்களேன்.

நமது வரிப் பணத்தில் அரசு இயங்குகிறது. இதில் கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை, சம்பளம் நமது வரிப்பணத்தில் இருந்து தான் வழங்கப்படுகிறது.

அதாவது, கடை நிலை ஊழியருக்கு, தினசரி சம்பளம் குறைந்த பட்சமாக  ரூ 1800 முதல், உயர் அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக ரூ 7200 வரை வழங்கப்படுகிறது.

இதற்கு தகுந்த வேலையை இவர்கள் செய்கின்றனரா என்றால் இல்லை. சம்பளம் கொடுக்கும் மக்களையும் மதிப்பதில்லை. மக்களும் இதை கண்டு கொள்வதில்லை. சட்டத்தின் படியும்  அரசு ஆணை படியும்  செயல்பட வேண்டிய இவர்கள் அதை மதிப்பதில்லை. ஒழுங்காக பணியையும் செய்வதில்லை.

முதல் உத்தரவு அரசு ஆணைஎண். 47809/98/DPAR/SS.I(1) dt 19.8.98.

  1. துறை இயக்குநர்கள், தங்கள் துறைக்கு வரும் புகார்களை பத்து நாளுக்குள் முடிக்க வேண்டும்.
  2. தலைமை செயலகம் வரும் புகார்களை, ஏழு நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

இரண்டாவது உத்தரவு அரசாணை எண். G O Ms No 4/2010/A2/ARW dt 12.8.2010.

  1. துறை இயக்குநர்கள் தினமும் ஒரு மணிநேரம், மக்களை சந்தித்து பிரச்னைகளை தீர்க்க வேண்ண்டும்.
  2. துறை செயலர்கள், வாரம் திங்கள் கிழமை இரண்டு மணி நேரம் மக்களை சந்தித்து பிரச்னைகளை தீர்க்க வேண்ண்டும்.
  3. தலைமை செயலர் அடங்கிய குழு மாதம் ஒரு முறை கூடி, புகார்களுக்கு முடிவுகான வேண்டும்.

மூன்றாவது உத்தரவு அரசாணை எண். G O Ms No 3/2012/A2/ARW dt 31.12.2012.

  1. ஒவ்வொரு துறையும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்.
  2. அதன் முடிவு அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தலைமை செயலர் அடங்கிய குழுவுக்கு அனுப்ப வேண்டும். அரசானை படி செயல்படாத ஊழியர் அல்லது அதிகாரி மேல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதுதான் நடைமுறை.

இந்த அரசாணைகளை, உயர் அதிகாரிகள் நடைமுறை படுத்தாமல், கோப்புகள் பல நாட்கள் என்றாகி, பின்  பல மாதங்கள் என்றாகி, இப்போது பல வருடங்களாக கோப்புகள் கிடப்பில் உள்ள சூழ்நிலை, அதிகாரிகள் உண்மையிலேயே பணிபுரிகின்றனரா? என்ற சந்தேகம் வருகிறது.

ஒவ்வொரு சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும், பொது மக்களும், இதை பயன்படுத்தி பயன் அடைய வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படின் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

இது மக்களுக்கான விழிப்புணர்வு.

ஆம் ஆத்மி கட்சி. உங்களுக்காக இதை வழங்குகிறது.

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »