ஆம் ஆத்மி கட்சி சார்பில், இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று 26-12-21 மாலை திரு ஹமீது இல்லத்தில் நடைபெற்றது. அதில் சுமார் 15 நபர்கள் பங்கேற்றனர்.
விழிபுனர்வுக்கான சீரிய முயற்சியால் கடந்த 50 நாட்களில், வெவ்வேறு 70 இளைஞர்கள், இதுவரை கலந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு சரியான தெளிவான பாதையை காட்ட வேண்டியது நம் ஆம் ஆத்மி கட்சியின் கடமை.
விதைக்கப்படும் நிலத்தை பொறுத்தே, நல்ல அறுவடை செய்யமுடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். எனவே, அந்த நிலம் இளைஞர்களாக இருக்கவேண்டும் என்று முடிவு எடுத்து, செயல்பட்டு வருகிறோம்.
அடிமை இந்தியாவில் இருந்து மீண்டு, நாம் இன்னும் அடிமைகளாவே வாழ்ந்து வருகிறோம். உரிமை இந்தியா என்பது, எப்படி இருக்கும் என்பதை நாம்மால் (ஆம் ஆத்மி கட்சியால்) மட்டுமே காட்ட முடியும்.
புதுச்சேரி, ஆம் ஆத்மி கட்சியின், கடின உழைப்பாளிகள், எங்களை கைகோர்த்து வழி நடத்த வேண்டுகிறோம்.
தொகுப்பு மற்றும் பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.
