அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை
ஆம் ஆத்மி கட்சி சார்பாக, 18-03-2022 அன்று மாலை சுமார் 4.00 மணிக்கு காரைக்கால் நகராட்சிக்கு கொடுக்கப்பட்ட புகாருக்கு, அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு, புகாரில் சொல்லப்பட்ட சாக்கடை சுத்தம் செய்தல் நடைபெற்றது. ஊழியர்கள் மிகவும் சிரமம் எடுத்து சுத்தபணியை செய்தனர். எனது புகாரில் குறிபிட்டது போல, பல இடையூறுகள் உள்ளதால், பணி முழுமையடையவில்லை. கழிவு நீரை முற்றிலுமாக ஓடவைக்க முடியவில்லை. எனவே, இடையூர்களை அகற்ற காரைக்கால் நகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இருந்த போதிலும், சுத்தப்பணியை உடனடியாக தொடங்கியதற்கு நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
சுத்தம் செய்ய வந்த ஊழியர்களிடம், ஏன் தினமும் சாக்கடை சுத்தம் செய்வது குறைந்துவிட்டது என்ற கேள்விக்கு. காரைக்கால் நகராட்சியில், பணிக்காக சுமார் 70 நபர்கள் வேலை செய்த இடத்தில், தற்போது 40 நபர்கள் மட்டுமே வேலை செய்து வருவதாகவும், முன்பு இருந்த காரைக்கால் நகரம், தற்போது இன்னும் விரிவடைந்து விட்டபடியாலும், ஆட்கள் பற்றாகுறையாலும், மிகவும் சிரமப்பட்டு வேலை செய்யவேண்டியுள்ளதாகவும். மேலும், காரைக்கால் நகராட்சி, ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்காமல் இருப்பதாகவும், அதற்காக வரும் 21-03-2022 முதல் 25-03-2022 வரை வேலைநிறுத்த போராட்டம் அறுவித்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இப்போது நாம் பொதுவான கேள்விக்கு வருவோம். கடந்த காலங்களில் காரைக்கால் நகராட்சி போதுமான ஊழியர்களை அமர்த்தி, நகராட்சியின் வருமானத்தில், சம்பள பாக்கிகள் இல்லாமலும், பொதுமக்களுக்கான வேளைகளில் எவ்வித தொய்வும் இல்லாமலும் நிர்வாகம் செய்து வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக ஆட்கள் பற்றாக்குறை, சம்பளம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் தொடர்கதையாகிவிட்டன. இதற்கு என்ன காரணம், யார் காரணம்? இதையும் ஆராய வேண்டிய கடமை, காரைக்கால் வாழ் மக்களுக்கும் உண்டு.
எனவே காரைக்கால் நகராட்சி நிர்வாகம், ஊழியர்களின் சம்பள பற்றாக்குறைக்கு என்ன காரணம் என்று ஆராய்வதோடு, வரவு செலவு திட்டத்தை, பொதுமக்களுக்கு ஒரு “வெள்ளை அறிக்கை” யாக வெளியிட வேண்டும். சம்பள பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனே கொடுப்பதற்கு ஆவணம் செய்யவேண்டும். நிர்வாகிகள் தான்தோன்றி தனமாக நடக்காமல் புதுச்சேரி அரசானை G O Ms No 3 /2012/A2/ARW dt 31.12.2012. படி சமூக அமைப்புகள், கட்சிகள், பொதுமக்கள் ஆகியோரின், கருத்துக்கள், குறைகள், யோசனைகளை கேட்டு அறிந்து செயல்பட வேண்டும்.
காரைக்கால் ஒரு சின்ன அழகிய நகராட்சி, அதை சரிவர நிர்வாகம் செய்ய தகுதி இல்லாத (ஆணையர், கலக்டர்) போன்ற எந்த நிர்வாகியும், காரைக்கால் வாழ் மக்களாகிய எங்களுக்கு தேவை இல்லை. எனவே, பிரச்சனைக்கு உடனே தீர்வு காணவேண்டும், அல்லது பிரச்சனைக்கு வழி கண்டுபிடிக்க முடியவில்லை என்ற தோல்வியை ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்யவேண்டும்.
பணம் பற்றாக்குறையை காரணம் காட்டி, சம்பளம் கொடுக்காமல் ஊழியர்களை வஞ்சிப்பதும், அதோடு காரை வாழ் மக்களுக்கான சேவைகளில் குறைபாடுகளும், அலட்சியமும் தொடருமானால், “வரிகொடா இயக்கம்” நடத்தி காரைக்கால் நகராட்சியை ஸ்தம்பிக்கை வைக்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துகொள்கிறோம்.
AAPKKL2022-010 Commissioner KKL-2