புதுவையின் எதிர்கட்சிகளே எங்கே சென்றீர்கள்?
தமிழகத்தில் எதிர்கட்சிகள், கேள்வி மேல் கேள்வி கேட்கிறது.
புதுச்சேரி தி,மு,க, என்ன செய்கிறது?
புதுச்சேரி மக்கள் தான் தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.
கோஷம் போடுவதோடு சரி.
அறிக்கை விடுவதோடு சரி.
ஆர்ப்பாட்டம். நடத்துவதோடு சரி.
போராட்டம் நடத்துவதோடு சரி.
நேர்காணல் அளிப்பதோடு சரி.
மாநாடு நடத்தி தீர்மானம் போடுவதோடு சரி. பணி முடிந்து விடுகிறது.
முடிவு, மக்கள் கையிலும், ஆட்சியாளர்கள் கையிலும் தான் இருக்கிறது.
இந்த நிலையால் தான், எந்த பிரச்னைகளும் முடிவுக்கு வராமல் போக காரணம்.
மக்களும் முடிவு எடுக்க போவதில்லை..
ஆட்சியாளர்களும் எடுக்க போவதில்லை.
போராட்டம் நடத்துபவர்கள், வலிமையான அடுத்த கட்ட போராட்டத்தை நடத்தினால் என்ன?
இதுதான் பாமர மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அவர் இவரை பார்க்க மாட்டாராம்.
இவர் அவரை பார்க்க மாட்டாராம்.
இப்படியே போனால், எங்களை எப்போது பார்ப்பது? புதுச்சேரி மக்களின் புலம்பல்.
உங்கள் இருவருக்காகவா ஒரு மாநிலத்தை சீரழிப்பது?
கடந்த ஐந்து ஆண்டுகள் ஆளுநரை காட்டி ஏமாற்றியது போதாதா?
இந்த ஆட்சியிலுமா?
ஹெலிகாப்டரில் வந்து பிரச்சாரம் செய்தவர்களே!
பஞ்சாயத்து தேர்தலுக்கு வராமலா போய் விடுவீர்கள்?
காத்திருக்கும், புதுச்சேரி மக்கள்.
