
புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி செயற்குழு உறுப்பினர், திரு ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூரியிருப்பதாவது.
புதுவை அரசு துறையில் சுமார், 4000 பேர் தினக்கூலியாக, வவுச்சர் ஊழியர்களாக பனி புரிகின்றனர். இவர்களின் பனி நியமனம் என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கும். டோக்கன் அடிப்படையில் நியமிக்கபடுவார்கள். எப்படி இருந்தாலும் அரசு துறையில் பனி புரிபவர்கள் ஆட்சியாளர்கள் நியமனத்துடன் அதிகாரிகளின் நியமனமும் சேர்ந்து நடந்தது. 240 நாட்கள் தொடர்ந்து பனி புரிந்தாலே பனி நியமனம் செய்ய வேண்டும் என சட்டம் இருக்கிறது.
சுமார், 10 வருடங்களுக்கு மேலாக பனி புரிபவர்களும் இருகின்றனர். அரசு குறைந்த பட்ச ஊதியம் ரூ: 18,000 என இருக்கிறது. அப்படி இருந்தும் பனி நிரந்தரம் செய்யவில்லை. சட்டப்படி ஆட்சி நடப்பதாக வரிப்பணம் செலுத்தும் மக்களாகிய நாங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறோம். அரசே சட்டத்தை மீறும்போது, ஊழியர்களின் உழைப்பை அபரிமிதமாக சுரண்டும்போது, அரசு மீதும் இதற்கு காரணமான உயர் அதிகாரிகள் மீதும் ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூடாது.
15 நாட்களுக்குள் இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். தற்காலிக தினக்கூலி வவுச்சர் ஊழியர்கள் 240 நாட்களுக்கு மேல் பனி புரிந்து இருந்தால், உடனடியாக காலதாமதமின்றி பனி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ: 18,000 வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை 1 5 தினகளுக்குள் நிறைவேற்ற வேண்டும். தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என ஆம் ஆத்மி கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். என கூறினார்.
தொகுப்பு:
கோ ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்
ஆம் ஆத்மி கட்சி..
புதுச்சேரி.
பதிவு: