அரசியலில் புலி, அரசியலில் அனுபவம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றத்தில் வைத்து  பிழைப்பு நடத்தும்,

  • அவர்களை சுற்றி வெறும் நூறு பேர் தான்.
  • இவர்களுக்கு, அல்லக்கைகள் என்று பெயர்.
  • மக்கள் தொடர்பு  பச்சோந்திகள்.
  • தேர்தலுக்கு தேர்தல் நிறம் மாறுபவர்கள்.
  • இவர்களுக்கு தேவை பணம்.
  • இவர்கள் யாராக  வேண்டுமானாலும் இருக்கலாம்.
  • கிரிமினல்கள் இருக்கலாம்.
  • கட்சி மாறியாக இருக்கலாம்.
  • ஏமாற்றுக்காரனாக இருக்கலாம்.
  • காபேரே கிளப் நடத்துவனாக இருக்கலாம்.
  • அரசு நிலைத்தை ஆட்டை போட்டவனாக இருக்கலாம்.
  • கள்ள லாட்டரி விற்பவனாக இருக்கலாம்.
  • ஊரை ஏமாற்றி உலையில் போடுபவனாக இருக்கலாம்.
  • கடவுளை வணங்கும் பக்த வேடதாரியாக இருக்கலாம்.

எப்படி இருந்தாலும், இவர்களிடம் பணம் இருந்தால் போதும். இந்த நூறு அல்லக்கைகளும் அப்படியே களத்தில் இறங்கி விடும். அவரை தேர்தலில் வெற்றி பெற வைக்க திட்டம் தயாராகி விடும்.

  • முதலில் பிறந்த நாள் விழாவில் ஆரம்பித்து,
  • கோலப்போட்டி வைத்து,
  • தீபாவளி பொங்கல் இலவசங்களை வழங்கி,
  • மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி,
  • கோயில்களுக்கு அளவற்ற பணத்தை கொடுத்து.
  • கடையெழு வள்ளல்களில், ஒருவராக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்க,

இவர்கள் போடும் திட்டங்கள் இருக்கிறதே. மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதே இத்தகைய சுயநலப் பேய்கள் தான்.

  • மக்களை பற்றியும் கவலை இல்லை.
  • மாநில வளர்ச்சி பற்றியும் கவலையில்லை.
  • இவர்களுக்கு இவர்களைப் பற்றிதான் மிகப்பெரிய பெரிய கவலை.
  • சுயநலம் என்றால் அப்படி ஒரு சுயநலம்.
  • தெருவில் தலைவருக்கு வாழ்க சொல்வதில் இருந்து.
  • வரவேற்பதில் இருந்து.
  • கூட்டம் சேர்க்க ஆள் அழைப்பதில் இருந்து.
  • வீட்டுக்கு வீடு கதவை தட்டி, பாசத்துடன் அழைப்பதில் இருந்து.
  • அளவற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில் இருந்து.
  • அரிசி மூட்டை அளிப்பதில் இருந்து.
  • இறுதியாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் இருந்து,

இத்தனை ஆர்பாட்டமான வேலையை இவர்கள் தான் செய்வர். இதில் ஒரு கணிசமான தொகையை பார்க்கும் இவர்கள், வெற்றி பெற்றவுடன் இவர்கள் காட்டும் அளப்பறைகள் இருக்கிறதே சொல்லி மாளாது.

மக்களின் வறுமை, அறியாமை, இயலாமை, ஆகியவை இவர்களுக்கு பலமாக அமைந்து விடுகிறது.

வெற்றி பெற்றால் அவருடன் இருப்பர். இல்லை, எதிரணியில் சேர்ந்து விடுவர்.

இந்த நூறு பேர், இந்த10 சதவீத மக்களை தங்கள் இஷ்டத்திற்கு ஆடும் பம்பரம் போல் ஆட்டுவிக்கின்றனர். இது மற்றவர்களின் மத்தியில் ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. அரசை நம்பியே அனைத்து சலுகைகளுக்கும் கையேந்தி இருப்பது, இவர்களின் அதிகாரக் குவியலின் உச்ச கட்ட அக்கிரமம்.

  • உண்மையான கணக்கெடுப்பு.
  • சேவை பெறும் உரிமை சட்டம்.
  • அரசு அலுவலகங்கள் முறையாக செயல் படுதல்.
  • ஊழலற்ற நிர்வாகம்.
  • உள்ளாட்சி அமைப்புகள்.
  • கூட்டுறவு அமைப்புகள்.

சிறப்பாக செயல்பட்டால், மக்கள் இந்த அல்லக்கைகளிடம், கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு இப்போதைய தேவை.

  • ஊழலற்ற நிர்வாகம்.
  • அதிகாரப் பரவல்.
  • சேவை பெறும் உரிமை சட்டம்.

ஆயிரம் அல்லக்கைகள் வந்தாலும், மக்கள் விழிப்புணர்வு, நிமிர்ந்த நேர் கொண்ட பார்வை, வேட்பாளரைப்பார்த்து கேட்கும் கேள்விகள், அல்லக்கைகளை அலற வைத்து ஓட விடும்.

மதியால் விதி செய்வோம்.

இப்போதைய தேவை மக்களுக்கு போதிய விழிப்புணர்வே.

தொகுப்பு:

கோ ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்
ஆம் ஆத்மி கட்சி..
புதுச்சேரி.

பதிவு:

Hamid Incharges

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »