பிரான்ஸ் அரசு கைவசம் இருந்த பாண்டிச்சேரியை, இந்தியாவிடம் ஒப்படைக்க, 1956 ம் ஆண்டு, சி றப்பு ஒப்பந்தம் போடப்பட்டு, 1 நவம்பர் 1954 ஆண்டு, தனி சுதந்திரம் வழங்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில் பாண்டிச்சேரிக்கு சிறப்பு நிர்வாக அந்தஸ்து அளிக்கவகை செய்யப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில் 32 ஷரத்துக்கள் அடங்கியுள்ளன.
- அதில் முக்கியமாக ஒப்பந்தத்தில் மாற்றம் ஏதாவது செய்ய விரும்பினால் பாண்டிச்சேரி மக்களின் கருத்தை கேட்க வேண்டும்.
- நிர்வாக செலவு 100 சதவீத மான்யம் அளிக்க வேண்டும்.
இந்த 32 ஷரத்து க்களில் உள்ளதை, இந்திய அரசு மீறுமானால், நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்திற்கோ, சர்வதேச நீதிமன்றத்துக்கோ செல்லலாம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரெஞ்சு அரசானது, 1956 ம் ஆண்டு ஒப்பந்தம் போட்ட பிறகு ஆறு ஆண்டுகள் இருந்தது. 1962 ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறியது.
அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த இந்திய அரசு. 1963 ம் ஆண்டு யூனியன் பிரதேச சட்டம் கொண்டு வந்து அதில் பாண்டிச்சேரியை உள்ளடக்கியது. அப்போது இது தொடர்பாக பாண்டிச்சேரி மக்களின் கருத்தை கேட்கவில்லை….
அந்த சட்டத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் இருப்பதும், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரம் இல்லை என்பதும், சட்டத் திருத்தம் வந்த பிறகு தான் தெரிந்தது.
அது முதல், பாண்டிச்சேரி தன்னுடைய சிறப்பு நிர்வாக அந்தஸ்தை இழந்தது. 100 சதவீத நிர்வாக மான்யம் 90 ஆக குறைந்தது. 1977 ல் தமிழகத்தோடு இணைக்க முடிவு எடுத்தது. அப்போது பாண்டிச்சேரியே கொதித்து எழுந்தது. இணைப்பு முடிவு கைவிடப்பட்டது.
இந்த கொதிப்பு, எப்பொழுது வந்திருக்க வேண்டுமென்றால், சிறப்பு நிர்வாக அந்தஸ்து நீக்கி, யூனியன் பிரதேசத்திற்கான, புதிய சட்டம் இயற்றி பாண்டிச்சேரியை இணைத்த போது நடந்து இருக்க வேண்டும்.
இந்திய நாடு நமது நாடு. நமக்கு துரோகம் எதுவும் செய்ய மாட்டார்கள். நாமும் நமது நாட்டிற்கு எதிராக எதையும் கேட்க கூடாது. அது தேச துரோக செயலாக கருதக்கூடும் என்ற எண்ணம் தோன்றி இருக்கலாம்.
இதனால், இந்த சிறு மாற்றத்தை அப்போது யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனாலும், மீண்டும் 90 சதவீத மானியத்தில் இருந்து 70 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதையும், யாரும் அப்போது கண்டு கொள்ளவில்லை.
2007 ல் தணிக்கணக்கு ஆரம்பிக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தது. பாண்டிச்சேரி புதுச்சேரி என்ற பெயர் மாற்றம் ஆனது. மறுபடியும், 70 சதவீத மான்யம் 30 சதவீத மானது.
இதற்கு பிறகு நடந்த மூன்று தேர்தலிலும், மாநில தகுதி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை, மத்திய அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. மத்திய அரசு தனக்கு கீழ், தொடர்ந்து புதுச்சேரி அரசை வைத்து இருக்கவே விரும்புகிறது.
இங்கு இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் மக்களை பற்றிய கவலை இல்லை. இவர்களை பற்றிய புகார்கள் டில்லியில் குவியலாக இருக்கின்றன. வடநாட்டு அதிகாரிகளின் வேட்டைக் காடாக புதுச்சேரி மாறி வருகிறது.
மேலும் மோசமாவதை தடுக்க, பிரெஞ்சு இந்திய ஒப்பந்தத்தை பற்றி இங்கு பேச வேண்டியுள்ளது. இந்திய அரசு கீழ் கண்ட வகைகளில் ஒப்பந்தத்தை மீறியுள்ளது.
- 1963 யூனியன் பிரதேச சட்டம் திருத்தம் கொண்டு வந்து அதில் பாண்டிச்சேரியை சேர்த்து இருக்க கூடாது. தவறு 1.
- அப்படி சேர்த்தாலும் ஒப்பந்தத்தில் உள்ளபடி நடத்த, அதில் சட்டத்தை கொண்டு வந்து இருக்க வேண்டும். தவறு 2 .
- சிறப்பு நிர்வாக அந்தஸ்து பெற்ற மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியது தவறு3.
- ஒப்பந்தத்தின் ஷரத்துக்களையாவது, இதில் குறிப்பிட்டு இருக்க வேண்டும் ஆனால், முற்றிலும், வலுக்கட்டாயமாக தவிர்க்க பட்டுள்ளது. தவறு 4.
- நிர்வாக மான்யம் 100 சதவீதத்தில் 90 சதவீதமாக குறைத்தது. தவறு 5.
- பாண்டிச்சேரியை தமிழகப் பகுதி இணைக்க முடிவு எடுத்தது. தவறு 6.
- மீண்டும் நிர்வாக மானியத்தை 90 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக குறைத்தது. தவறு 7.
- 2007 ல் தணிக்கணக்கு ஆரம்பிக்க அனுமதி கொடுத்தது. தவறு 8.
- மேலும் 70 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் குறைத்து, 30 சதவீதமாக ஆக்கியது. தவறு 8.
- தணிக்கணக்கு ஆரம்பித்த விஷயத்திலும், மான்யம் குறைத்த விதத்திலும், பாண்டிச்சேரியை புதுச்சேரி என பெயர் மாற்றம் செய்ததலிலும. தவறு 9.
- சிறப்பு நிர்வாக அந்தஸ்து என்பதை பறித்து, யூனியன் பிரதேசமாக மாற்றி அதிகாரம் அற்ற மாநிலமாக மாற்றியது, தவறு 10
- இந்திய அரசு பிரெஞ்சு இந்திய ஒப்பந்தப்படி நடக்கவில்லை.
- முக்கிய மாக புதுச்சேரி மக்களின் கருத்தை கேட்கவில்லை.
- இதனால் எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்.
- இங்குள்ள அரசியல் வாதிகள் இதை கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதற்காக சிலர், முயற்சி எடுத்தும் எந்த பலனும் இல்லை.
- 13 க்கு மேற்பட்ட தீர்மானங்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டும் இந்திய அரசு கண்டு கொள்ளவில்லை.
இந்திய அரசை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். மதிக்கிறோம்.
ஆனால் எங்கள் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாக உள்ளது. ஆதலால், இந்த ஒப்பந்தப்படி நடக்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
கடும் நிதிப்பற்றாக்குறை காரணம் காட்டி.
- பஞ்சாயத்து தேர்தலை நடத்த வில்லை.
- பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பணியிடங்களை நிரப்ப வில்லை.
- பஞ்சாலைகள் மூடப்பட்டன.
- பாரம்பரிய தொழில்கள், விவசாயம், மீன் பிடி தொழில்,கைத்தறி, ஆகியன நலிவடைந்து விட்டன.
- அரசு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மோசமாகி விட்டன.
- ஊழியர்களுக்கு பல வருடங்களாக சம்பளம் தரமுடியாத நிலை.
- ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளன.
- மத்திய அரசின் சட்டங்கள் கூட இங்கு அமல்படுத்துவதில்லை.
- சேவை பெறும் உரிமை சட்டம்.
- லோக்பால் சட்டம்.
- தகவல் பெறும் உரிமை சட்டம். (தலைமை ஆணையர் இல்லை.)
.இது போன்று பல்வேறு குறைபாடுகள்.
இவற்றை இனிமேலாவது, இந்திய அரசு கவனித்து, பிரெஞ்சு இந்திய ஒப்பந்தப்படி 100 சதவீத நிர்வாக மான்யம், மற்றும் சிறப்பு நிர்வாக அந்தஸ்து, வழங்கவே புதுச்சேரி மக்களின் விருப்பாக உள்ளது.
இதை மத்திய உள்துறை உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்…
மேலும் இதை வலியுறுத்தி, இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட பிரான்ஸ் நாட்டு அதிபருக்கும், இந்திய பிரதமருக்கும், மனு அளிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் எடுக்கப்படும். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புக்களுடன்.
கையொப்பமிட்ட மனு.
மிக விரைவில் அனுப்பப்படும்.
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.