இந்தியாவில், மொத்தம் 7157 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஒரிஸ்ஸா, மற்றும் புதுச்சேரியில் மட்டும், 1608 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் பல வழக்குகள், 20 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன.
புதுச்சேரியில் மட்டும், 58 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில், 30 ஊழல் வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன.
- புதுச்சேரியில், கிருமாம்பாக்கம் பேப்பர் மில் அமைக்க, அரசுக்கு சொந்தமான 5.6 ஹெக்டேர் நிலத்தை, ரூ 1.64 லட்சத்துக்கு வழங்கியது.
- 500 பேருக்கு வேலை வாய்ப்பு, 1500 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு, மற்றும் டிரான்ஸ் பார்மர் அமைக்கவும் நிபந்தனை அடிப்படையில் அரசு அளித்தது.
- அனால், 2001 ம் ஆண்டு மில் மூடப்பட்டது.
- அப்போது, இந்த நிறுவனம் அரசு இடத்தை திரும்ப அளித்து இருக்க வேண்டும்.
- அப்படி அளிக்காமல், அந்த இடத்தை வெளியில் விற்று விட்டனர்.
- இதனால் ரூ 7.52 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது.
- இதற்கு உடந்தை இருந்த.
- 1. மாவட்ட ஆட்சியர் திரு, ராகேஷ் சந்திரா.
- 2. மாவட்ட பதிவாளர் திரு, சுப்ரமணியன்.
- 3. பாகூர் துணை பதிவாளர் திரு, வெங்கடேசன். ஆகியோர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை சுமத்தியது.
- இன்னும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
அடுத்து.
- 2011 ல் சுனாமி பணத்தில் வீடு கட்ட வந்ததில் ரூ 89 கோடி, ஊழல் செய்ததாக திரு ராகேஷ் சந்திரா அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது .
- அவர் உடனடியாக நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்று தப்பித்துக் கொண்டார்.
- 2014 ல் இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து விட்டனர்.
- அப்போ அந்த 89 கோடி என்ன ஆனது என்ற கேள்வி இன்னும் மர்மமாகவே உள்ளது.
- 2014 ல் பாராளுமன்ற தேர்தல் நடந்தது, அரசியல் நிலைபாடுகளால் அவர் தப்பித்து விட்டார்.
- இருப்பினும், பிறகு டில்லியில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். பல நாளிதழ்களில் இதன் செய்திகள் வந்தன.
சின்னஞ்சிறு மாநிலத்தில், 58 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் 30 வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளின் விபரங்கள், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டு, மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் இரண்டாவது பணியாக,
ஆம் ஆத்மி கட்சியின் மக்களுக்கான விழிப்புணர்வு பதிவு.
தொகுப்பு.
திரு. கோ. ராமலிங்கம்.
செயற்குழு உறுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சி.
புதுச்சேரி.
பதிவு.
திரு. எம்.எம்.ஒய். ஹமீது.
மாவட்ட தலைவர்.
ஆம் ஆத்மி கட்சி.
காரைக்கால்.