அன்பார்ந்த நண்பர்களே, சமூக ஆர்வலர்களே, தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்களே, இது உங்களுக்கானபதிவு.

புதுவை 2021-2022 பட்ஜெட் தாக்கல் முழு விபரம்.

  • புதுச்சேரி பட்ஜெட் என்பது, பல்வேறு அரசு துறைகளில், தங்களுக்கு சம்பளத்திற்கு தேவையான  மற்றும் திட்டங்களுக்கு தேவையான, திட்டவரைவு தயாரித்து திட்டக் குழுவுக்கு ஒவ்வொரு வருடமும் அனுப்ப வேண்டும்.
  • அந்த திட்டக்குழு,  சேமிப்பு மற்றும் சிக்கனம் என்ற பெயரில், வடிகட்டி, அதை இறுதி செய்து, பட்ஜெட் குழுவுக்கு அனுப்பி வைப்பர்.
  • பட்ஜெட் குழு, இதை அணு அணுவாக ஆராய்ந்து, இறுதி வடிவம் கொடுத்து, அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்.
  • அமைச்சரவை, அதை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்.
  • ஆளுநர், மத்திய உள்துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார். இறுதியாக முடிவு அவர்கள் கையில்.
  • மத்திய உள்துறை அமைச்சர்தான், புதுச்சேரியின் நிர்வாகி. எனவே, அவர் பாராளுமன்றத்தில், யூனியன் பிரதேசங்களுக்கான பட்ஜெட் தாக்கல் செய்து அனுமதி பெறுவார்.
  • பிறகு அது புதுச்சேரி அரசுக்கே அனுப்பி வைக்கப்படும்.
  • அதை புதுச்சேரி முதல்வர், சட்ட சபையில், பல்வேறு அறிவிப்புக்களுடன் படிப்பார்.

அதனை தொடர்ந்து, அது, தலைப்பு செய்திகளாக மக்கள் மத்தியில் பேசப்படும்.

ஆனால், நடப்பது என்ன?

புதுவை மாநிலத்திற்கு, ஆளுநர் மூலமாக செலவு செய்வதற்கு, வருடத்திற்கு, 50 கோடியும் .

முதல்வர் அமைச்சர் மூலமாக செலவு செய்வதற்கு, வருடத்திற்கு, 10 கோடியும் மட்டுமே அதிகாரம் உண்டு.

(குறிப்பு: இதில் மாற்றம் ஏதாவது இருந்தால் தெரிவிக்கவும்)

இந்த நிலையில்.

இந்த பட்ஜெட் ஒதுக்கீடு தொகையில் செலவினங்களுக்காக, பாராளுமன்றத்தில்,  குறிப்பிட்ட ஐந்து மாதங்களுக்கு நிதி செலவீனங்களை செலவு செய்ய அனுமதிக்கப்படும்.

இதை மீறி, வேறு எந்த செலவும் செய்ய அதிகாரிகள் அனுமதிக்க மாட்டார்கள்.

அப்படித்தான், புதுச்சேரியில் அதிகாரிகள் ராஜ்யம் நடக்கிறது.

செலவீனத்தொகையை அனுமதித்தும் அதிகாரிகள், அதை செலவு செய்ய அனுமதிப்பதில்லை.  இதற்கு பல கேள்விகளை கேட்டு கோப்புகள் திருப்பி அனுப்ப படும்.

இப்படி தான் செயற்கை நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது.

இனி பட்ஜெட் பற்றி பார்ப்போம்.

முதல்வர் சட்ட சபையில் படிக்கிறார்.

2021-2022 பட்ஜெட் உரையில், 9924 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

முதல்வர் ஆற்றிய பட்ஜெட் உரையில். மொத்த பட்ஜெட். 9924.41 கோடி ரூபாய்.

அதில் வரவாக.

  • 6190 கோடி ரூபாய், வரி வருவாய் மூலமாகவும்.
  • 1729.77 கோடி ரூபாய், மத்திய அரசு மூலமாக.
  • 320.23 கோடி ரூபாய், மத்திய அரசு திட்டங்கள் மூலமாகவும்.
  • 1684.41 கோடி ரூபாய், பற்றாக்குறைக்கு, மேலும் கடனாக வாங்க, இந்த அரசு திட்டமிட்டுள்ளது.

அதில் செலவாக.

  • 1200.44 கோடி ரூபாய், முதலீட்டு செலவாகவும்.
  • 8723.97 கோடி ரூபாய், வருவாய் செலவீனங்களுக்கு, செலவிடப்பட உள்ளது.

வருவாய்  செலவீனங்களின்  விபரம் வருமாறு.

  • 2140 கோடி ரூபாய் சம்பளத்திற்காவும்.
  • 1050 கோடி ரூபாய் ஓய்வு ஊதியத்திற்கும்.
  • 1715 கோடி ரூபாய் கடனை அடைக்கவும்.
  • 1591 கோடி ரூபாய் மின்சாரம் வாங்கவும்.
  • 1290 கோடி ரூபாய் சமூக நலத்துறைக்கும்.
  • 1243 கோடி ரூபாய் நிதியுதவி பெறும் நிறுவனங்களுக்கும்.

ஆக மொத்தம் 9029 கோடி ரூபாய், செலவிட திட்டம் இடப்பட்டுள்ளது.

இதில், வர வேண்டியதாக காட்டப்படும் வருவாயும், செலவிடப்பட உள்ளதாக சொல்லும் செலவீனமும். ஒரு உத்தேச பட்ஜெட்டாகும்.

இத்துடன் முதல்வரின் பல கவர்ச்சி கரமான அறிவிப்புகள் வேறு உள்ளன. அதில், அவர் அறிவித்த ஒரு சில அறிவிப்புகள் உங்கள் பார்வைக்கு.

  • அனைத்து ரேஷன் அட்டை க்கும், இரண்டு தவனைகளாக  3000 ரூபாய் வழங்கப்படும்.
  • கல்வி கடன் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • பெட்ரோல் மீதான வாட் வரி, 3 சதவீதம் குறைக்கப்படும்.
  • 75 சதவீத மானியத்தில், கால்நடை தீவனம் வழங்கப்படும்.
  • 70 முதல் 100 ஏக்கர் பரப்பளவில், வன விலங்கு பூங்கா அமைக்கப்படும்.
  • ஆதிதிராவிடர் நலத்துறைக்கு, 396 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
  • ஏக்கருக்கு 5000 ரூபாய், விவசாய மான்யம் வழங்கப்படும்.
  • தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் 24-25 ல் நடத்தப்படும்.
  • 334.30 கோடி ரூபாய் செலவில் கட்டிடக்கலை தேசிய திட்ட அளவில் அமைக்கப்  படும்.
  • பாகூரில் 2 கோடியில், பஸ் நிலையம் அமைக்க படும்.

இது போன்ற அறிவிப்புகள்.

சரி உண்மையில் என்ன நடக்கிறது? என்று பார்ப்போம்

மத்திய அரசு இந்த பட்ஜெட் தொகையில் ஒப்புதல் அளித்தது ரூ 9000 கோடிக்கு மட்டுமே, அனுமதி அளித்துள்ளது.

தொடரும்.

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம்.ஆத்மி.கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம்.ஆத்மி.கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »