Karaikal MapKaraikal Map

புதுவை மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்தை பற்றிய முழு விவரம்.

காரைக்கால்:

  • காரைக்கால் நகரம், புதுச்சேரியில் இருந்து சரியாக, 135 கிமீ, தொலைவில் உள்ளது.
  • இதன் பரப்பளவு 157 கிமீ.
  • இரண்டு தாலுகாக்கள் உள்ளன.  அவை, காரைக்கால் மற்றும் திருநள்ளாறு.

மக்கள் தொகை.

  • காரைக்காலின்  மொத்த மக்கள் தொகை, சுமார் 264093 நபர்கள்.
  • காரைக்கால் நகராட்சியில்,  சுமார், 125000 வாக்குகள் உள்ளன.
  • 51 சதவீத மக்கள் கிராமங்களிலும்.
  • 49 சதவீதம் மக்கள் நகர்புறங்களில் வசிக்கின்றனர்.

பஞ்சாயத்து நிர்வாகம்.

  • காரைக்காலில், 12 கிராம பஞ்சாயத்துக்களும்.
  • திருநள்ளாறில், 16 கிராம பஞ்சாயத்துக்களும் உள்ளன.
  • காரைக்கால் ஒரு நகராட்சி.
  • அதற்கு ஒரு சேர்மன் பதவி மட்டும்.
  • 5 கொம்யூன் பஞ்சாயத்துகள்.
  • 18 வார்டு கவுன்சிலர்கள்.
  • 27 பஞ்சாயத்து தலைவர்கள்.
  • 112 வார்டு உறுப்பினர்கள். ஆகியன அடங்கும்.
  • நகராட்சி வார்டுகளில். சுமார், 2500 வாக்குகளும்,
  • பஞ்சாயத்து வார்டுகளில், சுமார்450 வாக்குகளும் உள்ளன.

சட்டமன்ற நிர்வாகம்.

  • ஐந்து சட்ட மன்ற தொகுதிகளுக்கு, ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள்.
    • காரைக்கால் தெற்கு.
    • காரைக்கால் வடக்கு.
    • நிரவி, திருபட்டினம்.
    • நெடுங்காடு.
    • திருநள்ளாறு.

நீர் ஆதாரம்.

  • காரைக்காலில்,  7 ஆறுகள் ஓடுகின்றன. அவை.
    • 1-அரசலாறு.
    • 2- நத்தலாறு.
    • 3- நட்டாறு.
    • 4- நூலாறு.
    • 5- புறபடையனாறு.
    • 6- திருமலைராயனாறு.
    • 7- வாஞ்சியாறு. ஆகியன.

 

வங்கிகள் மற்றும் கூட்டுறவு.

  •  91 நியாய விலைக் கடைகளும்,
  • 81 கூட்டுறவு சங்கங்களும்,
  • 44 தேசிய தனியார் வங்கிகளும்,
  • 6 விவசாய வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும், உள்ளன.

கல்வி.

  • பிரைமரி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், மொத்தம் 169.
  • கல்லூரிகள் 3.
  • தொழில் நுட்ப கல்லூரிகள் 7.
  • தொழில் நுட்ப பள்ளிகள் 11.

பாதுகாப்பு.

  • காவல் நிலையம்  மொத்தம் 11.
  • புறக்காவல் நிலையம் 1.

உற்பத்தி மற்றும் வருவாய்.

  • குறு சிறு தொழிற்சாலைகள் 1086.
  • நடுத்தர தொழிற்சாலைகள்  4.
  • மிகப் பெரிய தொழிற்சாலைகள்  12.
  • நூற்பாலை 1.
  • துறைமுகம், 1, இது தனியாரால் நிர்வகிக்கப்படுகிறது.
  • மொத்த விவசாய நிலங்கள். 16012 ஏக்கர்.
  • இதில் நெல் உற்பத்தி, 6123 ஏக்கர்.
  • தானிய உற்பத்தி, 2216  ஏக்கர்.
  • தினசரி பால் உற்பத்தி, 10739 லிட்டர்.

சுகாதாரம்.

  • 1 அரசு பொது மருத்துவ மனை.
  • 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
  • 1 சமுதாய சுகாதார நிலையம்.
  • 2 தொழிலாளர் நல மருத்துவ மனை.
  • 17 துணை மருத்துவ நல நிலையம் ஆகியன உள்ளன.
  • 181 அங்கன்வாடிகளும்.
  • 135 மழலை பயிற்சி பள்ளிகளும் உள்ளன.

மேலும், புகழ் பெற்ற சனீஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாரில் அமைந்துள்ளது.

காரைக்கால் என்பது,  “மாவட்ட ஆட்சியர்” தலைமையில் இயங்குகிறது.

இதுதான், நம் புதுச்சேரியில் உள்ளடங்கிய, காரைக்கால் பற்றிய முழு விவரம்.

இது ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக, பொது மக்களுக்கான, விழிப்புணர்வு பதிவு.

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்

ஆம்.ஆத்மி.கட்சி. புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

காரைக்கால்-மாவட்ட தலைவர்

ஆம்.ஆத்மி.கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »