புதுச்சேரி, தலைமை செயலருக்கு ஆம் ஆத்மி கட்சி விடுக்கும் எச்சரிக்கை.

உயர்திரு. தலைமை செயலர் அவர்களுக்கு.

2019-2020 வரை உள்ள, புதுச்சேரி அரசின் தணிக்கை அறிக்கை, செப்டம்பர் 3 ந்தேதி வெளிவந்துள்ளது.

அதில், மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து தங்களிடம் விளக்கம் கேட்க வேண்டியுள்ளது.

  • 1. அரசுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையாக. 1101.41 கோடி ரூபாய் என   குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 517.44 கோடி ரூபாய் கடந்த, 5 ஆண்டுகளுக்கு மேலாக வசூலிக்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை தெரிவிக்கவும்.
  • 2. அரசு சார்பு நிறுவனங்கள் 12 நிறுவனங்களில், 10 நிறுவனங்கள், பெரும் நஷ்டத்தில் இயங்குகின்றன. இதனால், வருட வருமானமும் எதுவும்வருவதில்லை. இதற்காக, அரசு செய்த முதலீடு 728.36 கோடி ரூபாய்,  இதன்மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்த உள்ளீர்கள் என்பதை தெரியப்படுத்தவும்.
  • 3. புதுச்சேரி கருவூலத்துறையில் 1456 செலவீனம் செய்ய வாங்க பட்ட முன் பணம் 114.62 கோடி ரூபாய், ஈடு செய்யாமல், சஸ்பென்ஸ் கணக்கிலேயே உள்ளது. இது தொடர்பாக தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

புதுச்சேரி அரசு இயங்குவது எங்கள் வரிப்பணத்தில். நீங்கள் மாத சம்பளம் வாங்கி கொண்டு பணியில் அலட்சியம் காட்டுவது எங்களுக்கு கவலை அளிக்கிறது. இது தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

உங்களுக்கு பத்து நாட்கள் கால அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தங்கள் மீது வழக்கு தொடர நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

மாநில செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »