கட்டுமான தொழிலாளர் நல வாரியம் நிலை பற்றிய விரிவான பதிவு…

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி எஸ்டேட் வளாகத்தில் அமைந்துள்ளது, கட்டுமான தொழிலாளர் நல வாரியம்

2005 ம் ஆண்டு வரை மாநில ஆலோசனை வாரியம் என்று இருந்தது, ஆனால் தற்போது இல்லை…

இதில் சுமார் 35984 பேர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்….

இதற்கு புதுச்சேரியில் நகர அமைப்பு துறையால்  அனுமதி அளிக்கப்படும், கட்டிட அனுமதியில் செஸ் ஆக ஒரு சதவீதம் தரப்படுகிறது. மேலும் இதற்கு சில அரசு சலுகைகளும்  உண்டு.

  • 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பென்ஷன்..
  • கல்வி உதவித் தொகை..
  • ஈமச் சடங்கு உதவி
  • கல்வி உதவித் தொகை
  • வீடு கட்ட கடன் உதவி..
  • கட்டிட உபகரணம் வாங்க உதவி, போன்ற சலுகைகள் உள்ளன…

இவை எல்லாம் அமல் படுத்த படுகிறதா என்றால் இல்லை. தணிக்கை கூட ஒழுங்காக நடைபெறுவதில்லை…

காரைக்கால் துறைமுகம், ரூ 1246 கோடி கட்டு மான செலவு ஆனது..

இதற்கான செஸ் ஒரு சதவீதம் ரூ 12.46.கோடி வசூலிக்க படவில்லை..

இதே போல் ரயில்வே துறையிலும் வசூலிக்க வில்லை..

இதில் பெரும் தொகை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது…

மேலும் இதிலிருந்து.. மிக்ஸி கிரைண்டர் வாங்கவும் ஒரு தொகை மடை மாற்றம் செய்யப்பட்டது…

தொழிற் சங்கங்கள் இதையெல்லாம் கேட்பதில்லை…

இந்த வாரியத்தில்… ஏதோ தீபாவளி சமயத்தில் டோக்கன் வழங்கப்படுகிறது…
அது கூட கூட்டுறவு நிறுவனங்களில் வாங்க கட்டாயப்படுத்த படுகிறது….

கட்டிடத் தொழிலாளர்களுக்காக அவர்கள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட நல வாரியம்… அவர்களுக்காக உண்மையாக பாடுபடுகிறதா? என்றால், நமக்கு கிடைக்கும் பதில் ஏமாற்றமே…

முறையாக, ஆலோசனை வாரியம் அமைத்து..

உண்மையான கட்டிடத் தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்தி, செஸ் ஒரு சதவீதம் வசூலித்து…

அவர்களுக்கு உண்டான சலுகைகளை முறையாக வழங்க ஆம் ஆத்மி கட்சி வேண்டுகோள் விடுக்கிறது….

தகவல் பெறும் உரிமை ஆர்வலர்களும், இந்த வாரியத்தின் செயல் பாடுகளை கண்காணித்து,
இந்த வாரியத்தின் செயல் பாடுகள் உண்மையான கட்டிட தொழிலாளர்கள் பலன் அடைய உதவி செய்ய ஆம் ஆத்மி கட்சி வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

இதில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது…

கடந்த 2006 ம் ஆண்டில் இருந்து, இதை நிர்வகிக்க, ஆலோசனை வாரியம் அமைக்க வில்லை. தணிக்கை செய்யவும் முடியவில்லை…

இந்த நிலையில் தான் இருக்கிறது, கட்டிடத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் நிலை…

இதில் பணிபுரியும் ஊழியர்களும் நிரந்தரம் செய்யவில்லை…
தற்காலிக ஊழியர்களே, அதிகாரக் குவியலின் அகப்பட்ட அரசு தன்னாட்சி நிறுவனங்களில் இதுவும் ஒன்று….

இது கட்டிட தொழிலாளர்கள் நல வாரியம் அந்த கட்டிடத் தொழிலாளர்களுக்காக நன்றாக செயல் பட…
ஆம் ஆத்மி கட்சியின் விழிப்புணர்வு பதிவு…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »