புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ன ஆனது? ஆம் ஆத்மி கட்சி கேள்வி.

ஆட்சியாளர்களை கேட்டு எந்த பலனும் இல்லை.

தலைமை செயலரை நோக்கி,  ஆம் ஆத்மி கட்சியின் கேள்விகள். இதற்கு பதில் அளிப்பதோடு நடவடிக்கைகளும் எடுக்க வேண்டுகிறோம்.

  • புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம் 2017 ல் தொடங்கி, 2021 ல் முடித்து இருக்க வேண்டும். இதற்கு தலைவர் தலைமை செயலர்தானே? காலதாமதம் ஏன் ? இதுவரை முடித்த பணிகள் தான் என்னனென்ன ?
  • சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு 72 கோடி ரூபாய் செலவு.  350 ஏக்கர் நிலத்தை  கையகப்படுத்தி பத்து வருடங்களுக்கு மேல ஆகிறது. அதில் என்ன செய்வதாய் திட்டம்?
  • நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்துகள், கடந்த 13 ஆண்டுகளாக வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கவில்லை. இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?
  • 12 அரசு சார்பு நிறுவனங்களில் 10 நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்குகின்றன. இதற்கு தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
  • அரசு சார்பு நிறுவனங்களுக்கு அரசின் பங்கு தொகை  728.36 கோடி ரூபாய்  இதற்கு அரசுக்கு வரும் ஈவுத் தொகை எவ்வளவு தெரியுமா? 0.16 சதவீதம்.
  • கூட்டுறவு நிறுவனங்களுக்கு அளித்த அரசு முதலீடு 358 கோடி ரூபாய், இதில் அரசுக்கு வரும் ஈவுத் தொகை எவ்வளவு தெரியுமா? பூஜ்யம்.
  • அரசுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை 1101.41 கோடி ரூபாய், இதில் 5 வருடங்களுக்கு மேலாக வராமல் உள்ள தொகை 517.44 கோடி ரூபாய், இதை வசூலிக்க தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
  • கருவுலத்துறையில் ஈடு செய்யாமல், இன்னும் சஸ்பென்ஸ் கணக்கில் 1456 கேஸ் நிலுவையில் உள்ளன. இதன் மதிப்பு 114.62 கோடி ரூபாய், இதற்கு தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
  • கையாடல் வழக்குகள் 314 நிலுவையில் உள்ளன, இதன் மதிப்பு 27.88.கோடி ரூபாய் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?
  • வணிக வரித்துறையில் 22060 வழக்குகளில் இதுவரை 1533 வழக்குகள் மட்டுமே தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. மீதி 20527 வழக்குகளை தீர்த்து வைக்கும் எண்ணம் உண்டா? எப்போது தீர்க்கப்படும்
  • 443.36 கோடி ரூபாய் செலவினங்களுக்காக 653 கேஸ் ஆவணங்கள் ஆதாரங்கள் காட்டாமல் கிடப்பில் உள்ளதே உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
  • மொத்தம் 71 தன்னாட்சி நிறுவனங்களில், 53 நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கும் ,  15 நிறுவனங்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தணிக்கை செய்யப்படவில்லையே இது உங்கள் கவனத்துக்கு வந்ததா? வரவில்லையா?

சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்றால் அந்த சட்டங்கள் முறையாக செயல்படுகிறதா ?

  • தகவல் பெறும் உரிமை சட்டம் ஆணையர் அலுவலகம், என்னாச்சி ?
  • சேவை பெறும் உரிமை சட்டம், என்னாச்சி ?
  • லோக் பால் சட்டம் என்னாச்சி?
  • கட்டிடத் தொழிலாளர் ஆலோசனை வாரியம் என்னாச்சி?
  • கூட்டுறவு ஆலோசனை வாரியம் என்னாச்சி?
  • பஞ்சாயத்து தேர்தல் என்னாச்சி?
  • அனைத்து கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல் என்னாச்சி?
  • சட்டத்தின் படி அனைத்தும் முறையாக செயல்படுகிறதா?

ஆனால்! 

  • உங்களுக்கு தனியாக தலைமை செயலகம்.
  • மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளம்.
  • உங்களுக்கு கீழ் பலர் பணிபுரிந்தும்.
  • மேற்கண்ட பணிகளில் தேக்கம் ஏன் ?

விரைவு நடவடிக்கை தேவை, கால தாமதமானால், நாங்கள் மக்களை திரட்டி விரைவு நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும்.

இது ஆம் ஆத்மி கட்சியின் எச்சரிக்கை.

இதே நிலை தொடர்ந்தால். இதே கேள்விகளை, சாமானிய மக்களும், நகரங்களிலும், கிராமங்களிலும், எழுப்புவர்.

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்

ஆம்.ஆத்மி.கட்சி. புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

காரைக்கால்-மாவட்ட தலைவர்

ஆம்.ஆத்மி.கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »