Farmers against Govt

புதுச்சேரி ஆட்சியர் முன்னிலையில் உழவர்கள், வேளாண் இயக்குனர் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்

புதுச்சேரி அரசானது, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஹெக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் நிவாரணத்தை வழங்க உத்தரவிட்டது.

இழுபறி 1
அதைத்தொடர்ந்து வேளாண் பெருங்குடி மக்கள் உழவர் உதவியகத்தை நாடினார்கள்.

இழுபறி 2
அதைத் தொடர்ந்து, வேளாண் இயக்குனர் அவர்கள், இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர், வேளாண் பெருங்குடி மக்கள் இ-சேவை மையத்தை அணுகினார்கள். அங்கு பணிபுரியும் ஊழியர்கள் விண்ணப்பிப்பது குளறுபடி இருப்பதாக தெரிவித்தார்கள்.

இழுபறி 3
இதை அறிந்த வேளாண் துறை அமைச்சர் அவர்கள், நேரடியாக உழவர் உதவியக்கத்தை அணுகுமாறு கேட்டுக் கொண்டார்.

இழுபறி 4
இன்று, 23.11.2021 வேளாண் துறையை தொடர்பு கொண்டு பேசியபோது, நிவாரணம் அளிப்பதாக சொல்லப்பட்ட கோப்புகள் அவர்களிடத்தில் இல்லை என்றும் வேண்டுமென்றால் உழவர் உதவியகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

பின்பு, உழவர் உதவியகத்தை தொடர்பு கொண்ட போது. நேரில் வந்து சந்திக்குமாறு சொல்கிறார்கள்.

மற்ற மாநிலங்களில்
தமிழ்நாட்டில் பொருத்தவரை, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் அதிகாரிகள் ஒவ்வொரு கிராமமாக சென்று அங்கு உள்ள விவசாயிகளை சந்தித்து அவர்கள் நிலத்தை பரிசோதித்து கையொப்பம் வாங்கிக்கொண்டு, வங்கிக் கணக்கையும் பதிவேற்றி செல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் குறித்த நேரத்தில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது.

டெல்லியில் , ஹெக்டருக்கு ரூ. 50,000 என அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரடியாக சென்று நிவாரணம் அளிக்கிறார்கள்.

 

புதுச்சேரி விவசாயிகளான நாங்கள் எந்த அளவில் மற்ற மாநில விவசாயிகளோடு தாழ்ந்து போனாம்? எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை?

இந்த நிவாரணத்தில், தென்னை மரம், பழ வகை மரங்கள், காளான் உற்பத்தி, சிறிய காய்கறிகள் போன்ற எதற்கும் நிவாரணம் அளிக்கப்படவில்லை.

புதுச்சேரியில் இதுபோன்ற விவசாயிகள் இல்லை என்று இவர்களாகவே முடிவுக்கு வந்து விட்டார்களா?

சில அமைச்சர்கள் கூறியதுபோல், இதுபோன்ற உணவுகளை அவர்களை உண்பதில்லையா?

அரியாங்குப்பம் Dr. ஆ. ஜெயராஜன்

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »