ஒருரூபாய்கடனில்லா_மாநிலம்!
முதல்வர் கெஜ்ரிவால் நேர்மையான ஊழலற்ற டெல்லி ஆட்சி!!
டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூட்டத்தில் இருக்கும் பெண் ஒருவர் கெஜ்ரிவாலை பார்த்து கேட்கிறார்.
# நல்ல தரமான புதிய பஸ்,
# பெண்களுக்கு போக்குவரத்து கட்டணம் இல்லை,
# நல்ல தரமான பள்ளிகள்,
# சிறப்பான மருத்துவமனைகள்.
இன்னும் எவ்வளவோ.
இப்படி உங்களை தேர்ந்தெடுத்த டெல்லி மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்து வர்றீங்க.
ஆனால் டெல்லியில் மற்ற மாநிலத்தவர்கள் எல்லாம் நிறைய பேர் இங்க வந்து தங்கறாங்க… இதனால டெல்லி ஜனத்தொகை அதிகமாய்ட்டே இருக்கே… அதுக்கு என்ன பண்ண போறீங்க ????
அதற்கு கெஜ்ரிவால் அளித்த பதில்:
“அப்போ ஜனத்தொகை இங்க அதிகமாய்டும்னு பயந்துகிட்டு டெல்லி மாநிலத்துக்கு நல்லது செய்யாமல் விட்டுவிடனுமா ? ”
என்று கேட்ட கெஜ்ரிவால்… உடனே கூட்டத்தில் பலத்த கைதட்டல்…
தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால்..
“அப்படி இல்லீங்க,
# இந்தியர்கள் அனைவரும் இங்க வாழலாம்,
# எல்லா மாநிலத்தவரும் இங்க வாழ்றாங்க..
# டெல்லி ஒரு மினி இந்தியா…
# டெல்லி நம் நாட்டின் இதயம்…
இதயம் நல்லா இருந்தாதான் நாடு நல்லா இருக்கும்… இங்கே நான் எல்லா மாநிலத்தவர்களையும் வரவேற்கிறேன்..
இந்தியர்கள் யார் வேண்டுமனாலும், டெல்லிக்கு வரலாம் இங்கே வாழலாம்.. நாம் அனைவரும் சேர்ந்து நமது டெல்லியை உயர்த்துவோம்”
நாங்க ஆட்சி செய்த கடந்த 5 ஆண்டுகளில்,
எங்கள் அரசிடம் நெறைய பணம் சேர்ந்துவிட்டது.
# எந்த வரியையும் உயர்த்தல,
# புதியதா எந்த வரியும் போடல,
# எந்த வங்கி கிட்டயும் கடனும் வாங்கல,
# இருந்த எல்லா கடனையும் மொத்தமாவே அடைச்சிட்டோம்..
# இந்தியாவிலேயே கடனே இல்லாத செலவை விட வருமானம் அதிகமா உள்ள ஒரே மாநிலம் நாங்க ஆட்சி செய்யும் இந்திய தலைநகர் டெல்லி தான்.
வருமானம் அதிகமானது மட்டுமல்லாமல்,
# பெண்களுக்கு பேருந்து கட்டணம் முழுமையா இலவசம்,
# மின்சாரம் 50% மானியம்.
# எல்லா மருத்துவ சிகிச்சையும், ஆப்பரேசனும் இலவசம்,
# அரசு மருத்துவமனைகளின் தரத்தை தனியாருக்கு குறைவில்லாமல் உயர்த்தி உள்ளோம்,
# அரசு பள்ளிகளின் தரத்தை தனியாருக்கு குறைவில்லாமல் உயர்த்தி உள்ளோம்.
இது எதற்குமே எங்கள் அரசு உங்களிடம் கூடுதலாக ஒரு பைசாகூட வரி வாங்கவில்லை… நீங்கள் 5 ஆண்டுக்கு முன்னர் என்ன வரி செலுத்துனீர்களோ அதே தான் இப்பவும் கட்டரீங்க…
பிறகு எப்படி இதெல்லாம் எங்களால் செய்ய முடிந்ததுனு கேக்கறீங்களா ???
நாங்கள் டெல்லியில் ஊழல் அற்ற ஆட்சி புரிகிறோம்…அதனாலேயே இதெல்லாம் சாத்தியமாகிறது.
டெல்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியின் சாதனைகளை உண்மை தகவலை
மக்கள் எனக்கு அனுப்பிய மகிழ்ச்சியான தருணம் நானும் உங்களுடன் பகிர்கிறேன்.
வசீகரன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஆம்ஆத்மிகட்சி
தமிழ்நாடு
