ஊழலை ஒழிப்பது எப்படி? விழிப்புணர்வு பதிவு பாகம்-4
ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் முதல் கட்ட பணி.
புதுச்சேரியில் மூன்றாவதாக இடம் பிடிப்பது… வருவாய் துறை… இதில் நில அளவை துறை… பத்திர பதிவு துறை.. ஆகியவையும் அடங்கும்…
இத்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு… உடனுக்குடன் பதவி உயர்வுகள் வரும்…
ஆட்சியாளர்களுக்கு அடக்க ஒடுக்கமாக கைகட்டி சேவகம் பார்ப்பது இவர்களே…
சான்றிதழ் வழங்குவதில் இவர்கள் காட்டும் அளப்பறைகள் இருக்கிறதே சொல்லி மாளாது…
சான்றிதழ் பெற இவர்கள் கேட்கும் கேள்விகள்… உலகப் பிரசித்தி பெற்றவை….
தரிசனம் கிடைத்தாலும் கரிசனம் கிடைப்பதில்லை…
எப்போது சென்றாலும்..
மீட்டிங்.. ஆய்வு நடத்த வெளியில் சென்று இருக்கிறார் என்ற பதிலே வரும்…
நில ஆக்ரமிப்பு… அரசு நிலம் கையகப்படுத்துதல்.. அரசு புறம்போக்கு… வாய்க்கால் ஆக்ரமித்தல… ஆகியன.. கிராம நிர்வாக அதிகாரி தொடங்கி.. தாசில்தார் வரை ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து… ஒரே ஆட்டம் தான்.. கும்மாளம் தான்….
உதாரணமாக… பல மடுவுகள்… அரசு புறம் போக்கு நிலங்கள்… ரியல் எஸ்டேட் அதிபர்களால் அபகரிக்கப்பட்டதில்.. அவற்றை கண்மூடித்தனமாக பத்திர பதிவு செய்த கொடுமையும் உண்டு…
நான் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் 13 மடுவுகளும்.. வாய்க்கால் களும் கானாதது தொடர்பாக புகார் அளித்ததில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை…
இன்னும் பல இடங்கள் தனியாரால் ஆக்ரமிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் ஆண்டாண்டு காலமாக அவர்களால் அனுபவித்து வரும் நிலையும் உள்ளது….
சான்றிதழ் அளிப்பதிலும்.. மருத்துவ கல்லூரி சீட்டு பெறுவதிலும் பல கோடி கை மாறியுள்ளது….
இவர்கள் ஆட்சியாளர்கள் செல்லப் பிள்ளையாக இருப்பதால்… அலுவலகத்துக்கு வரும் மக்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை….
தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேள்விகள் கேட்டாலும் உரிய பதில் கிடைப்பதில்லை….
இந்த துறையின் ஊழல் என்பது ஒரு புறம் இருந்தாலும்… பணியை மக்களுக்கு ஒழுங்காக செய்யாமல் இவர்கள் காட்டும் அலட்சியம்.. இருக்கிறதே… இதற்காகவாவது…
சேவை உரிமை பெறும் சட்டம் தேவை…
இவர்களின் சொத்து குறித்த விவரங்களை விசாரிக்க லோக்பால் சட்டமும் அவசியம் வேண்டும்…..
நாளை நான்காவது இடத்தை பிடிக்கும் பொதுப் பணித் துறை பற்றி பார்க்கலாம்…
ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் முதல் கட்ட பணி… ஆம் ஆத்மி கட்சியின் விழிப்புணர்வு பதிவு.
தொடர்…. 5