எட்டப்பன் காட்டிக் கொடுத்ததால், இந்தியாவுக்கு பிழைக்க வந்த ஆங்கிலேயரிடம், சிக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் கப்பம் வெள்ளைக்காரனை வெளுத்து வாங்கிய காட்சி தான் நினைவுக்கு வருகிறது…

பிழைக்க வந்தவர்கள், நம்மை அடிமை ஆக்கியது கடந்த கால வரலாறு.

அதே வரலாறு தான் இப்போதும் நடைபெறுகிறது…

அப்போதும் அடிமைப்பட்டிருந்தோம், தற்போதும் அடிமைப் படுத்தப்பட்டு இருக்கிறோம்…

நமக்கு சேவை செய்ய, நாம் ஆட்சி அதிகாரத்தை அளித்தால், அதை வைத்து கொண்டு, நம்மை அடிமைப் படுத்துவது நிகழ்கால வரலாறு.

ஆட்சியாளர்களை வெள்ளைக்கார துரையாக நினைத்து, சமூக ஆராவலர்களாக வைத்து சித்தரிக்கப்பட்ட காட்சி தான்… இது..

ஆட்சியாளர்களே..

  • யாரை கேட்கிறீர்கள் வரி..
  • எதற்கு கேட்கிறீர்கள் வரி…
  • எங்களுடன் குண்டும் குழியுமான சாலையில் வந்து இருக்கிறீர்களா…
  • நாங்கள் படும் அவஸ்தை உங்களுக்கு தெரியுமா..
  • எங்களின் அடிப்படை உரிமைதானே பஞ்சாயத்து தேர்தல், அதை நடத்த உங்களால் முடியாதா..
  • மத்திய அரசு இதற்காக பணம் தருமே.. அதை ஏன் வாங்க வில்லை…
  • இந்த மாநிலம் உங்களுக்காகவா?எங்களுக்காகவா?

எதையுமே செய்யாமல் அதிகார ஆசை பிடித்து அலையும் உங்களுக்கு எதற்காக நாங்கள் வரி கட்ட வேண்டும்.

  • இருசக்கர வாகனத்தில் ஒரு முறை வாருங்கள், அப்போது தருகிறோம் வரி….
  • உச்ச நீதிமன்றமே உத்தரவு இட்டும் நடத்தாதது ஏன்….
  • இது யாருக்காக நடக்கும் ஆட்சி?
  • மக்களாட்சியா? மன்னராட்சியா?

மரியாதையாக சொல்கிறோம்…

  • தேர்தலில் ஓட்டுக்கு பணம் தரவும் தேவையில்லை…
  • நாங்கள் வாங்கவும் தேவையில்லை…
  • நாங்கள் ஈனப்பிறவிகள் அல்ல..
  • பாவப்பட்ட ஜென்மங்கள்…
  • இனி பொறுப்பதற்கில்லை…

பஞ்சாயத்து தேர்தல் நடத்தும் வரை வரி செலுத்த போவதில்லை…
இது உறுதி… இது உறுதி…

கட்ட பொம்மனின் வாரிசுகள் தான் இதற்கு சரியான முடிவை எடுக்க வேண்டும்.
.. எங்கள் அதிகாரத்தை தட்டிப் பறிக்க நீங்கள் யார்…

  • இவன் அதிகம் பேசுகிறான்…
  • இவன் தேசவிரோதி…
  • நான் தேச விரோதி அல்ல..
  • சட்டத்தை மதிப்பவன்..
  • உரிமைகளை கேட்பவன்..

வரி செலுத்தும் எனக்கு அனைத்து உரிமைகளை கேட்கவும் அதிகாரம் உண்டு… …
பஞ்சாயத்து தேர்தலை நடத்தினால் வரியை கட்டுவோம்…

இல்லையேல்.. வரியை கட்ட மாட்டோம்…

மக்களை மதிக்காத அரசை மக்கள் ஏன் மதிக்க வேண்டும்…

சாதுக்கள் தான் நாங்கள்..
நாங்கள் மிரண்டால்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »