புதுவை உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு

ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் முதல் கட்ட பணி… விழிப்புணர்வு பதிவு… தொடர்ச்சி… 2

புதுச்சேரியில் ஊழலில் முதலிடம் வகிப்பது…
உள்ளாட்சி துறையே அதாவது நகராட்சி.. கொம்யூன் பஞ்சாயத்துக்களே…

புதுச்சேரியில்..

  • 5  நகராட்சிகளும்..
  • 10 கொம்யூன் பஞ்சாயத்து க்களும்..
  • 98 கிராம பஞ்சாயத்து க்களும் உள்ளன..

மக்களின் அடிப்படை வசதிகள்…இவர்கள் மூலம் தான் தீர்வு கானப்பட வேண்டும்..

  • வீட்டு வரி
  • சொத்து வரி
  • தொழில் வரி
  • வர்த்தக வரி
  • கேபிள் வரி மற்றும்
  • காலி மனைகள் வரி
    மிக முக்கியமாக..வீடு கட்ட அனுமதி கோருவோரிடம் இருந்து அதிகளவில் வரி வசூலிக்கப்படுகிறது…..
  • பிறப்பு சான்றிதழ்*
  • இறப்பு சான்றிதழ் பெறுவதிலும் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்…

சுகாதாரக் கேடு அதிகரிக்கிறது..கொசுத் தொல்லையும் அதிகம்..

கொசுவை ஒருபக்கம் ஒழிக்கிறார்கள்..ஒழித்து கொண்டு இருக்கின்றார்கள்…அது ஒழிந்த பாடில்லை..
ஏழை மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வாட்டி வதைக்கிறது…இதற்கான ஒதுக்கீடு செலவு முறையாக செய்யாததால்…கொசுவும் வளர்கிறது.. வளர்ந்து கொண்டே இருக்கிறது.. ஒழிந்த பாடில்லை…
கொசுவையே ஒழிக்க முடியாத இவர்களிடம்.. இப்போது குப்பை அப்புறப்படுத்தும் மத்திய அரசின் புரியாத இந்தி திட்டமும் சேர்ந்து கொண்டது…
அப்புறம் என்ன… ஊழல் தான்.. கொள்ளை தான்…

சாலைகள் ஒன்றுகூட உருப்படியாக இல்லை.. குண்டும் குழியுமாக இருக்கிறது.
இதுதான்.. நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து க்களின் பரிதாப நிலை..

ஊழியர்கள் பற்றாக்குறை வேறு…

  • பாதி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவது இல்லை
  • மீதி ஊழியர்கள் எப்போதாவது வருவர்..
  • உயர் அதிகாரிகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பர்…
  • பொதுமக்கள் பார்க்க சென்றால்… இவர்கள் சொல்லும் வார்த்தை
  • மீட்டீங் நடக்கிறது..
  • வெளியில் சென்றுள்ளார்..
  • ஆய்வு செய்ய வெளியே சென்று இருக்கிறார்..
  • விடுமுறையில் இருக்கிறார்…

என்ற பதில் தான் வரும்… அதுவும் அங்கு பணிபுரியும் நான்காம் பிரிவு ஊழியரிடம் இருந்து.. கொஞ்சம் அதிகமாக பேசினால் மரியாதை குறைவான வார்த்தைகளைத் தான் கேட்க வேண்டி வரும்….

கிழக்கு இந்திய கம்பெனி எப்படி இந்தியாவுக்கு வந்து வியாபாரம் மூலம் நம்மை அடிமைப்படுத்தினார்களோ…

அதேபோல நாம் நமக்கு சேவை செய்ய இவர்களை ஆட்சி அதிகாரத்துக்கு அனுப்பி வைத்தால்… அதிகார ருசி இவர்களை ஆட்டிப் படைத்து நம்மை அடிமையாக்க வைத்து விட்டது… அதன் பலனைத் தான் நாம் இப்போது அனுபவித்து வருகிறோம்….

நகராட்சி.. கொம்யூன் பஞ்சாயத்துக்கள் செய்ய வேண்டியது என்ன…

  • வரிகளை ஒழுங்காக வசூலித்து…
    தேர்தல் மூலம் தேர்வு செய்த நிர்வாகிகள்.. மூலம்..
    வருடம் தோறும் பட்ஜெட் போட்டு திட்டம் தீட்டி மக்களின் அடிப்படை வசதிகளை தீர்க்க வேண்டும்…

ஆனால் என்ன நடக்கிறது…

பஞ்சாயத்து தேர்தல் நடத்தினால் அதிகாரத்தில் பங்கு போட இன்னொரு கூட்டம் வந்து விடும்… நமக்கு வரவேண்டிய வருமானமும் மரியாதையும் குறைந்து விடும் என்ற சுயநல எண்ணமே..
புதுச்சேரி யையும் புதுச்சேரி. மக்களையுமே பாழ் படுத்தி வருகிறது…

உழவர் கரை நகராட்சியை எடுத்து கொள்வோம்…
மக்கள் தொகை சுமார் மூன்றரை லட்சம்…
6 சட்டமன்றத் தொகுதிகள்…
இதில் நகராட்சிக்கு சொந்த மான இடங்கள்… வணிக வளாகங்கள்..
ஆக்ரமிக்கப்பட்டும்… கவனிக்கபடாமலும் உள்ளன…

இன்று நகராட்சிகள் பஞ்சாயத்துக்கள் தரம் தாழ்ந்து.. அதன் கடமையை உணர்ந்து செயல்படாத தற்கு காரணம் அங்கு தலைவிரித்தாடும்… ஊழலை..

இந்த அமைப்புகள்… ஆட்சியாளர்கள்… ஒப்பந்த தாரர்கள் இவர்கள் தலைமையிலேதான் நடக்கிறது….

கடந்த பதிமூன்று ஆண்டுகளாக வரவு செலவு கணக்கு கூட காட்டவில்லை…

இதனால் தான்..
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கூட பென்ஷன் தர முடியவில்லை…
இந்த நிலை தொடர்ந்தால் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாத நிலையில்… இந்த நகராட்சிகளும் பஞ்சாயத்து க்களும் காணாமல் கூட போய் விடும்….

அதிகாரப் பேய்களின் ஆதிக்கம்..
அதிகாரத்தை விட்டு தர மனம் இல்லாததால் இந்த மக்கள் அதிகாரம் கொண்ட அமைப்புகள்..
அடியோடு அழியும் நிலை உருவாகிறது…

மக்களுக்கு மாநிலத்தில் என்ன நடக்கிறது…

  • ஏன் பஞ்சாயத்து தேர்தலை நடத்த மறுக்கின்றனர்…
  • வரவு செலவு கணக்கு ஏன் காட்டுவதில்லை..
  • ரோடுகளை ஏன் ஒழுங்காக போடுவதில்லை…
  • கொசுவை ஒழிக்க உருப்படியான திட்டங்கள் ஏன் இல்லை…
  • சுகாதார கேடு ஏன் விளைகிறது…
  • மத்திய அரசு தரும் பணத்தை பெற இவர்கள் ஏன் முயற்சிக்கவில்லை….

இதற்கு எல்லாம் ஒரே காரணம், அதிகாரத்தை பகிர்ந்து தர இவர்களுக்கு மனம் இல்லை…

ஊழல் கொள்ளையடிப்பதற்கு அதிகாரம் செய்வதற்கு சரியான அமைப்பு… இந்த கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்கள்…

இந்த அலுவலகங்கள்… ஆட்சியாளர்களுக்காகவும்… தகவல் பெறும் சட்டத்தின் கீழ் கேட்பவர்களுக்கு பதில் அளிக்கவும்… புகார் களுக்கு பதில் அளிக்கவும் மட்டுமே இயங்குகிறது…
மற்ற படி இந்த நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து க்களால்… வரி செலுத்தும் மக்களுக்கு எந்த பலனும் இல்லை…

கேபிள் வரி வசூலிப்பதே இல்லை… ஆனால் மாதா மாதம் நம்மிடம் வசூலிக்கப்படுகிறது…

கேட்டால் வழக்கு நிலுவையில் இருக்கிறது…

வழக்கு போட்டவர் இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள்… வாய்தா போட்டே காலத்தை கடத்தி விடுவர்….

இப்போது புரிகிறதா.

ஏன் பஞ்சாயத்து தேர்தல் நடத்தவில்லை என்று….

மக்களும் இந்த விஷயத்தில் ஒரு முடிவை எடுக்க வேண்டும்…

பஞ்சாயத்து தேர்தல் நடத்தும் வரை…

எந்த வரியும் கட்ட முடியாது என்று…

அரசாங்கம் நமக்கு வழிகாட்ட வேண்டும்..
இல்லை நாம் அரசாங்கத்துக்கு வழிகாட்ட வேண்டும்…

மக்கள் அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பை திட்டமிட்டு சதி செய்து நடத்த விடாமல்… இன்று ஊழல் துறையாக மாற்ற இவர்கள் யார்….

என மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால்… இந்த துறையில் நிலவும் ஊழல் ஒழியும்….

ஊழல் ஒழிப்பு இயக்கத்தில்… அடுத்த இடத்தை வகிப்பது… தன்னாட்சி நிறுவனங்கள்… கூட்டுறவு நிறுவனங்கள்.. அரசு சார்பு நிறுவனங்கள்…

இது ஆம் ஆத்மி கட்சியின்… ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் முதல் கட்ட பணி…பதிவு.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »