அரசியலுக்கு தகுதியானவர் யார் ? அரசியல் அனுபவம் என்றால் என்ன?

பதில்கள்:

  • ஒரு புதிய அரசியல்வாதி ஒரு தேர்தலை தொடர்ந்துதான் அறிமுகமாவார்.
  • அதே அரசியல் வாதி தன்னுடன் ஒரு கூட்டத்தை வைத்து மேய்க்க ஆரம்பிப்பார்.
  • அந்த கூட்டத்திற்கு  தினம் தினம் ஆயிரக்கணக்கில் படி அளப்பார்..
  • பலருக்கு பணம் கொடுத்து , அடிக்கடி போஸ்டர் அடித்து, அதில் தனக்கு தானே வாழ்த்து சொல்லிகொள்வார்.
  • மேய்க்கபடும் கும்பலில் யாருக்கு பிறந்த நாள் என்றாலும், போஸ்டர் அடிக்க செலவு செய்வார், அதிலும், தன் தலை மட்டும் விட்டுவிடாதபடி பார்த்துகொள்வார்.
  • தேர்தல் சமயங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தன்னை சுற்றிவர வாரி இறைப்பார்.
  • அவ்வப்போது, ஆங்காங்கே வீடுகள் பற்றி எரியும், நிவாரணம் என்ற பெயரில் முதல் ஆளாக அவர் இருப்பார் மறக்காமல் வீடியோமற்றும் போட்டோக்கு போஸ் கொடுப்பார்.
  • தான் மேய்க்கும் கூட்டத்திலிருந்து அலுவலகத்திற்கு அலுவலகம் ப்ரோக்கர் வேலைக்கு பார்பதற்கு ஆள் வைத்திருப்பார். மக்களுக்கு உதவி செய்வது போல மறைமுக லஞ்சம் வாங்குவார்.
  • .தேர்தல் வந்துவிட்டால், வீட்டுக்கு எத்தனை ஓட்டு, ஓட்டுக்கு எத்தனை நோட்டு என்று கணக்கு போட்டு எடுத்து வைப்பார்.
  • தேர்தல் பிரசச்சாரம்  என்ற பெயரில், எவனுக்கும் விளங்காத பாடல்களாலும், வசனங்களாலும், மக்களின் காதுகளையும் மூளையையும் மழுங்க செய்வார்.
  • சிந்தித்து, சிந்தாமல் சிதறாமல் ஓட்டுக்களை கேட்பார், ஆனால், சிந்திக்க விடாமல் பார்த்துகொள்வார்.
  • தனக்கு பத்து லட்சம் மட்டுமே சொத்து உள்ளது என்று தேர்தல் துறைக்கு அறிவித்துவிட்டு, 150 கோடிக்கு பினாமி சொத்து வைத்து இருப்பார்.
  • அனுமதிக்கப்பட்ட தேர்தல் செலவுகள் 5 லட்சம் என்றால், 5 கோடிக்கு செலவு செய்துவிட்டு, 3 லட்சத்தில் தேர்தல் செலவுகள் செய்தததாக தைரியமாக தேர்தல் துறைக்கு கணக்கும் காட்டுவார்.
  • தோல்வி அடைந்தால், அந்த 5 கோடி அம்போ,
  • வெற்றியடைந்தால் வருடத்திருக்கு 5 கோடி  வீதம், 5 வருடந்த்திற்கு 25 கோடியை எப்படி எடுக்கலாம் என்று தினம் தினம் கணக்கு போடுவார்.
  • மேற்படி  அத்தனை தகுதிகளும் ஒன்று சேர இருந்தால் மட்டுமே, அவர் இந்திய அரசிலில் புலி. நல்ல அரசியல் அனுபவம் வாய்ந்தவர் என்று பலரால் பாராட்டபடுவார்.

ஆனால், இதற்கு எதிர்மாறாக ஒரு அரசியல் அனுபவம் எங்கள் ஆம் ஆத்மி கட்சியில் உண்டு.

  • மாலைக்கும் வேலையில்லை, பொன்னாடைக்கும் வேலையில்லை.
  • போஸ்டருக்கும்  வேலையில்லை, பொய் வாழ்த்துக்கும் வேலையில்லை.
  • கூட்டத்திற்கும் வேலையில்லை, ஆட்டம் பாட்டத்திற்கும் வேலையில்லை.
  • பொய் பிரச்சாரத்திற்கும் வேலையில்லை, பொய் கலாச்சாரத்திற்கும் வேலையில்லை.
  • கூட்டத்தை வைத்து சோறு போடவும் மாட்டோம் , சொன்ன சொல்லுக்கு மாறு செய்யவும் மாட்டோம்.
  • பினாமி சொத்து வைத்து பிழைப்பு நடத்தவும் மாட்டோம், இருக்கும் சொத்துக்களை மறைக்கவும் மாட்டோம்
  • ஓட்டுக்கும் நோட்டு கொடுக்கவும் மாட்டோம்,  பாட்டு போட்டு  மழுங்கடிக்கவும் மாட்டோம்.
  • எங்கள் வெற்றி உங்களின் வெற்றி, எங்கள் தோல்வி உங்களின் தோல்வி.
  • பொய் கணக்கு காட்டவும் மாட்டோம், கேப்பையில் நெய் என்று சொல்லவும் மாட்டோம்.

மேற்படி  தகுதிகளை மட்டுமே வைத்துக்கொண்டு  ஒரு மாநிலத்தையே ஆண்டு வருகிறோம். லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் 100க்கு  100 வெற்றியும் பெற்றுவிட்டோம்.

  • இனியும், எங்களுக்கு ஒட்டு போடுங்கள் என்று நாங்கள் தான் கேட்கவேண்டுமா?
  • அரசியலுக்கு வாருங்கள் என்று எப்போது எங்களை அன்போடு அழைப்பீர்கள்?

 

தொகுப்பு:

MMY ஹமீது AAP

காரைக்கால் மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »