Stop Corruption AAP
  • ஊழலை  ஒழிப்பது எப்படி?
  • இது எங்கு ஆரம்பிக்கிறது?
  • இதிலிருந்து மக்களை காப்பது எப்படி?
  • இதனால் பலன் அடைவது யார்?
  • பாதிப்படைவது யார்?
  • புதுச்சேரி மாநிலத்தில் இந்த ஊழல் விஷக் காற்று எப்படி பரவியுள்ளது?
  • ஊழலைஅப்புறப்படுத்தி மக்களை காப்பாற்றுவது. ஊழல் வாதிகளை மக்களிடம் அம்லப்படுத்துவதோடு சட்டத்தின் முன் நிறுத்துவது தான் இந்த தொடர் கட்டுரையின் நோக்கம்.

இந்த தொடர் கட்டுரையை புதுச்சேரி ஊழல் ஒழிப்பு இயக்கத்துக்கு சமர்ப்பிக்கிறேன்.

ஊழல் தீ அணைய இது ஒரு சிறிய வாளி தண்ணீர். மேலும், ஊழல் விஷக் காற்று பரவாமல் தடுப்பது எப்படி? ஊழல் எங்கு ஆரம்பிக்கிறது? என்ற ரிஷி மூலம் பார்த்தால்,

  • ஊழலை ஒழிப்போம் என்று உரக்க குரல் எழுப்பும் ஆட்சியாளர்கள் ஒரு பக்கமும்
  • ஊழலை ஒழித்தால்தான் எங்களுக்கு பூரண நிம்மதி கிடைக்கும் மக்கள் மறு பக்கமும் இருக்க முதலில், தேர்தல் நேரத்தில் ஓட்டுப் போட கொடுக்கல், வாங்கல்,  ஆரம்பிக்கிறது.இதுதான் முதலில் ஊழல் ஆரம்பிக்கும் இடமாக அமைகிறது..
  • ஆட்சி அதிகாரத்தை பெற ஓட்டுக்கு பணம் கொடுப்பதும்…
  • ஓட்டுப் போட அதற்கு பணம் பெறுவதும்..

ஊழல் அங்கு தான் உரம் போட்டு வளர்க்கப்படுகிறது…

ஊழலை ஒழிப்போம் என்பவர்களே ஊழல்வாதிகளாக இருக்கும் போது, எந்த காலத்திலும் ஊழல் ஒழியப் போவதில்லை. மக்களின் நிலையும் மாறப் போவதில்லை..

நமது புதுச்சேரி மாநிலத்தில் ஊழல் இல்லாத இடமே இல்லை…
இது எங்கும் பரவி இருக்கிறது.

ஓட்டுக்கு ரூ 100 ல் ஆரம்பித்து… ரூ 500 ஆகி ரூ 1000-2000 வரை வந்து விட்டது…

அதன் விளைவு, முதல் போட்டவர்கள், முதலும்  வட்டியுமாக சேர்த்து வசூலிக்க  ஆரம்பித்து விட்டனர்.

புதுச்சேரி ஒரு சின்னஞ்சிறு மாநிலம். இதில் அதிகாரத்தை பரவலாக்கினால்..
தாம் போட்ட முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது என்ற காரணத்தால்…

அதிகாரத்தை பரவலாக்க கூடிய…

  • உள்ளாட்சி தேர்தல்..
  • கூட்டுறவு தேர்தல்..
  • கோவில் நிர்வாகம்..
  • வாரியங்கள்
  • இவையனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிலே வைத்துள்ளனர்….

இதனால், இவர்களை சுற்றி ஒரு வளையத்தை அமைத்து குறுநில மன்னர்கள் போல செயல்பட்டு வருகின்றனர்…

ஊழல் நடைபெறும் இடங்கள்…

  • நகராட்சி
  • கொம்யூன் பஞ்சாயத்துக்கள்
  • 73 தன்னாட்சி நிறுவனங்கள்
  • கூட்டுறவு நிறுவனங்கள்
  • கோவில் நிர்வாகங்கள்
  • 12 அரசு சார்பு நிறுவனங்கள்
  • பத்திர பதிவுத்துறை
  • நகர அமைப்பு துறை
  • வாகன பதிவுத்துறை
  • நில அளவை துறை
  • வருவாய் துறை
  • கலால் துறை
  • வணிக வரித்துறை
  • தலைமை செயலகம்

இவைதான் நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை…

இப்போது விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்ய தங்களுக்கு வசதியாக ஆட்சியாளர்கள்…ஓய்வு பெற்றவர்களை பணியில் அமர்த்திக் கொள்வதும்….

வேலை வாய்ப்பு அலுவலகங்களை மூடி கொல்லைப்புற வழியாக சட்டத்தை மீறி பணியாட்களை நியமனம் செய்வதும், ஊழலின் உச்ச கட்டமாக இருக்கிறது…

ஒரு சிறிய மாநிலத்தில் இவ்வளவு அநீதிகள் நடந்தாலும், அமைதியாக இருப்பதற்கு காரணம், அனைவருமே இந்த விஷயங்களில். மென்மையாகவும். வளைந்து கொடுத்தும்.. பெற வேண்டியதை பெற்றும் காலம் ஓடுவதால்… அமைதியாக செல்கிறது..

ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல, எந்த ஒரு விஷயமும் வெளி வருவதில்லை… அப்படியே வெளி வந்தாலும் மூடி மறைக்கப்படும்…..

சுனாமி வந்த போது மத்திய அரசு தந்த ரூ 250 கோடி ஊழல்..
யாருக்கும் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டது..புதுச்சேரி ஊழல் வரலாற்றில்.. கறை படிந்த கதை….

முதலில் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழல்களை பார்ப்போம்…

நாளை தொடரும்…
ஆம் ஆத்மி கட்சியின் ஊழல் ஒழிப்பின். முதல் கட்ட பணி… விழிப்புணர்வு பதிவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »