கடந்த சில வருடங்களாக, சட்ட விரோதமாக, வட்டித்தொழில் செய்யும் தனியார்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவசரத்திற்கு உதவுகிறார்கள் எனறு, 80 முதல் 90 சதவீத மக்கள் வட்டிக்கு வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் சிக்கிவிட்டனர். சட்டப்படி 1 வீதத்திற்கு மேல் வட்டிக்கு விடக்கூடாது என்றபோதிலும், பேராசையால், 5 முதல் 30 வீதம் வரை வட்டிக்கு  கொடுப்பவர்கள் அதிகம்   முளைத்துவிட்டனர். வட்டிக்கு வாங்கியவர்களும் தன்னுடைய பிரச்சனை தீர்ந்தால் போதும் என்று, திருப்பி செலுத்தும் திறனுக்கு அதிகமாக வாங்குவதால் கட்டமுடியாமல் மாட்டிகொள்கிறார்கள்.

சட்ட விரோத வட்டித் தொழிலில் ஈடுபடுபவர்கள் கவனத்திற்கு 

  1. வட்டித் தொழிலை சுட்டிக்காட்டி லைசன்ஸ் கட்டாயம் எடுத்திருக்க வேண்டும்.
  2. வட்டித் தொழில் பெயரில், ஜி.எஸ்.டி. நம்பர் கட்டாயம் எடுத்திருக்க வேண்டும்.
  3. வட்டி தொழிலுக்காக வங்கி கணக்கு கட்டாயம் இருக்க வேண்டும்.
  4. அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் வங்கி மூலமாக மட்டுமே செய்யவேண்டும்.
  5. வாங்கும் வட்டியில் சேவை வரியாக 18 சதவீதம் அரசுக்கு கட்டவேண்டும்.
  6. தொடர்ச்சியாக, வரவு செலவு கணக்கு அரசுக்கு கட்டாயம் காட்டவேண்டும்.
  7. வட்டி நிர்ணயம் 1 வீதத்திலிருந்து 2 வீத்ததிற்கு மிகாமல்  இருக்க வேண்டும்.
  8. எதையாவது அடமானமாக  பெற்றுகொண்டு மட்டுமே பணம்  கொடுக்க வேண்டும்.
  9. அடமானமாக பெற்ற பொருளை கட்டாயம், பதிவு துறையில் பதிவு  செய்ய  வேண்டும்.
  10. திருப்பி செலுத்த, போதுமானம் வருமானம், உள்ளதா என்று உறுதி செய்திருக்க வேண்டும்.
  11. கடனுக்கான உண்மையான காரணத்தை  குறிப்பிட்டு, கடன் பத்திரம் எழுத வேண்டும்.
  12. வெற்று கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொள்வது சட்டப்படி குற்றம். 
  13. வெற்று வங்கி செக்கில் கையெழுத்து வாங்கிக் கொள்வதும், சட்டப்படி குற்றம்.
  14. கட்டத்  தவறினால், சட்ட பூர்வமாக மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  15. வட்டிக்கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பேரில், போலீசில் புகார்  கொடுக்க முடியாது.
  16. கொடுத்தாலும், கண்டிக்க, தண்டிக்க, கட்டாய படுத்த, போலீசுக்கு அதிகாரம் இல்லை.
  17. கடனாளியை திட்டுவதோ, மிரட்டுவாதோ, அடிப்பதோ,  தண்டனைக்குறிய குற்றம்.
  18. கடனாளியை அவமான படுத்தினால், மான நஷ்ட வழக்கு தொடர  உரிமை உண்டு.
  19. கடன் தொல்லையால், தற்கொலைக்கு முயன்றால், முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.
  20. கடன் தொல்லையால், உயிரை மாய்த்துகொண்டால், கொலை வழக்கு பதியவேண்டும்.

வட்டி வியாபாரிகள் மேற்படி விஷயங்களில், பலவற்றை தன்னை அறியாமல் செய்து வருகின்றனர். வட்டி வியாபாரிகளின் மிரட்டலாலும், கொடுமையினாலும், கொடூர வட்டி விகிதத்தாலும், பலர் தங்கள்  உடமைகளை இழந்து, நகைகளை இழந்து, வீடுகளை இழந்து, கடைசியாக குடும்பத்தையே  இழந்து, ஒரு கட்டத்தில் தற்கொலையும் செய்துகொள்கின்றனர். 

சட்டத்திற்கு புறம்பாக தொழில் செய்பவர்களை கண்காணித்து பிடித்து, தண்டனை வாங்கி தரும் பொறுப்பு , உள்ளூர் நிர்வாகத்திற்கும் , காவல் துறைக்கும் உண்டு. ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்வதில்லை. அதனால், ஆம் ஆத்மி கட்சி பொது மக்களின் நலன் கருதி சட்ட விரோத வட்டி வியாபாரிகளை  கண்காணிக்கிறது. 

இனி வரும் காலங்களில், தெரு தெருவாக, வீடு வீடாக மக்களை மிரட்டும் சகிதம் அலைந்து திரியாமல் ஒரு லைசன்ஸ் எடுத்து, அலுவலகம் அமைத்து, அரசுக்கு முறையாக கணக்கு காட்டி, வரி செலுத்தி, வட்டி தொழிலை சட்டப்படி மட்டுமே செய்திட ஆம் ஆத்மி கட்சி கேட்டுக் கொள்கிறது.

சட்ட விரோத வட்டி தொழிலில் ஈடுபடுபவர்கள் இவற்றை மீறும் பட்சத்தில்,  காவல் துறை மூலமாகவும், நீதிமன்றம் மூலமாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க ஆம் ஆத்மி கட்சி தயாராக உள்ளது. எனவே, வட்டியில் சிக்கி, வழி தெரியாமல் தவிக்கும் எவரும் எங்களை  தயங்காமல் தொடர்பு  கொள்ளலாம்.

MMY ஹமீது. செல்: 7667 303030                                            மாவட்ட தலைவர். ஆம் ஆத்மி கட்சி.                                                                                       சட்ட விழிப்புணர்வு பெற பார்க்க: WWW.AAPPY.IN

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »