காரைக்கால் ஆம் ஆத்மி கட்சி சார்பாக, பல குளறுபடிகளை களையும் நோக்கத்திலும், மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நோக்கத்திலும், அரசு நிர்வாகத்துடன் சட்டபடியும், எழுத்து பூர்வமாகவும், பல நடவடிக்கைகளை எடுத்துகொண்டு வருகிறோம். அதில் பல அரசு நிர்வாகங்கள், சரிவர நிர்வாகம் செய்வதில்லை என்பது தெள்ளதெளிவாக தெரிகிறது. மக்களிடம் மனசாட்சியின்றி கடுமையான வரி வசூலில் இறங்கியுள்ள மத்திய அரசும், மானில அரசும், நகராட்சியும் பணத்தை வசூல் செய்வதிலேயே குறிகோளாக உள்ளதே தவிர, மக்களுக்கான சேவைகளை முழுமையாக நிறைவேற்ற அலட்சியம் காட்டுகின்றன. மக்கள் ஏமாளிகள், விபரம் அறியாதவர்கள், முட்டாள்கள் என்று நினைத்துகொண்டு, அரசு ஊழியர்கள் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள் . ஆனால், ஆம் ஆத்மி கட்சியின், தொடர் சட்ட நடவடிக்கைகள், இனி அவர்களை உறங்க விடாது. ஊதியம் வாங்கும் ஒவ்வொரு அரசு ஊழியரும், மக்களுக்கான பணியை செய்தே ஆகவேண்டும். அதுவரை எங்கள் பனி தொடரும்.
09-02-2022 அன்று ஆம் ஆத்மி கட்சி சார்பாக, காரைக்கால் நகராட்சிக்கு, தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக 3௦ வது நாள் பதில்கள் தயாரிக்கப்பட்டு, 32 வது நாள், நேரடியாக வீட்டிற்கு வந்து கையில் கொடுக்கப்பட்டது.
லஞ்ச பணம் தராத எந்த வேலையையும், முடிந்தவரை அல்லது கடைசி வரை காலம் தாழ்த்தி பழக்கப்பட்டு, வேறு வழியே இல்லாத வேலைகளை கடைசி நேரத்தில் தந்து தப்பித்து கொள்வது. என்பது தெளிவாக தெரிகிறது.
அதில், கேட்கப்பட்ட கேள்விகளும் , தரப்பட்ட பதில்களும் :
- காரைக்கால் நகர எல்லைக்குள், குப்பை வரி வசூல் தொடங்கப்பட்ட தேதி விபரம் தரவும்? பதில்: காரைக்கால் நகராட்சியில் குப்பை வரி தொடங்கப்பட்ட தேதி: 01-06-2017 (இங்கு நான் குப்பை வரி வசூல் செய்ய வந்த அரசாணையை கேட்க தவரிவிட்டேன்)
- புதுச்சேரி முதலமைச்சர், காரைக்காலுக்கு குப்பை வரி ரத்து அறிவிப்பு நகல் தரவும்? பதில்: நீங்கள் கோரும் தகவல் இந்த அலுவலகத்தில் இல்லை. (இல்லை என்றால் அப்படி ஒரு அரசானை போடவில்லையா? அல்லது இவர்களிடம் இல்லையா? என்ற விபரம் இல்லை)
- குப்பை வரி இதுவரை எவ்வளவு எந்த தேதிவரை எத்தனை நபர்களிடம் வசூல் செய்யப்பட்டுள்ளது? ஆண்டு வாரியாக தரவும். பதில்: நீங்கள் கோரும் தகவல் பக்கம் ஒன்றிற்கு ரூ: 2 வீதம் செலுத்தி வருவாய் பிரிவில் அலுவலக நேரங்களில் பெற்றுகொள்ளவும். (15-03-2022 அன்று ஆம் ஆத்மி சார்பாக கல ஆய்வுகள் தொடங்கும்)
- காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், புதிய தண்ணீர் குழாய்கள் போட்டுகொள்வதற்கு ரோடுகளை உடைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது எப்போதுதரவும்? அதன் அனுமதி நகல் தரவும். பதில்: நகல் இணைக்கப்பட்டுள்ளது. (அனுமதி வழங்கப்பட்டது 2018, தண்ணீர் குழாய்களும், அந்த ஆண்டே போடப்பட்டது, ஆனால் பல இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் இன்றுவரை சரிவர மூடப்படவில்லை)
- புதிய தண்ணீர் குழாய் போட்ட பிறகு, தோண்டப்பட்ட பள்ளங்களை மீண்டும் தார் அல்லது சிமெண்ட் போட்டு மூடித்தரும் பொறுப்பு, குழாய்கள் பதித்த ஒப்பந்த தாரர் உடையதா? அல்லது புதிய ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதா? பதில்: புதிய தண்ணீர் குழாய் போடுவதற்கு பொதுப்பணி துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, தோண்டப்பட்ட பள்ளங்களை மூடுவது பொதுப்பணி துறையை சார்ந்தது. (ஒரு துறைக்கு குழிகள் தோண்டுவதற்கும், மூடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் குழிகளை மூடாவிடில், அனுமதி கொடுத்த நகராட்சி நிர்வாகம் தான் கேள்வி எழுப்ப வேண்டும். ஆனால்,அவர்கள் எழுப்பவில்லை. குழிகளை மூடி சமபடுத்தி “தார்” அல்லது “சிமென்ட்” போட்டு தர பொதுமக்கள் புகார் அளித்தாலும் காரைக்கால், நகராட்சி அந்த புகார் மனுக்களை அலட்சியபடுத்தி விடுகிறது)
- புதுச்சேரி அரசானை G O Ms No 3 /2012/A2/ARW dt 31.12.2012. குறிப்புப்படி சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், மக்கள் இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், சேவை அமைப்புகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறை அழைத்து, குறைகளை கேட்டு அறிய வேண்டும். அதன் அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். என்ற நிலையில், காரைக்கால் நகராட்சி கடைசியாக மக்களை சந்தித்த தேதி விபரம், மேலும், அடுத்த தேதி விபரம்? கடைசி சந்திப்பில் சமர்பித்த அறிக்கை நகல் தரவும். கேள்வி 6 க்கும் 7 க்கும் சேர்த்து பதில் கீழே.
- ஒவ்வொரு துறை இயக்குநரும், தினமும் ஒரு மணி நேரம் பொதுமக்களை சந்திக்க வேண்டும். புகார்களை பெற்று அன்றே நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதப்படுத்த கூடாது, என்று அரசாணை எண்(G.O. Ms 4 /2010/A2/ARW dt 12.8.2010) கூறும் நிலையில், காரை நகராட்சி நிர்வாகம் தினமும் எந்த நேரம் மக்களை சந்திக்க அனுமதிக்கிறது? கேள்வி 6 க்கும் 7 க்கும் சேர்த்து பதில்: பொதுமக்கள் சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் சேவை அமைப்புகள் தினந்தோறும் நகராட்சி நிர்வாகத்தை சந்திக்க அனுமதிக்கப்பட்டு, அவர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பார்வை நேரம்: காலை 8.45 முதல் மாலை 5.45 வரை. ( இவர்கள் என்னுடைய கேள்விகளுக்கு மிகவும் திறமையாக பதில் அளித்து உள்ளனர். காரைக்கால் வாழ் மக்கள் நராட்சி வேளையில் தொய்வு ஏற்பட்டால், நகராட்சி ஆணையரை சந்தித்து புகார் அளிக்க சென்றால், உடனே அனுமதிப்பதில்லை. பல வேளைகளில், சந்திக்க முடியாது என்றே பதில் தருகின்றனர். எனவே, ஆம் ஆத்மி கட்சி சார்பாக 15-03-2022 முதல் ஆணையரை நேரில் சந்தித்து இதற்கான தீர்வை காணும்.)
- காரைக்கால் நகராட்சியில் 10 நாட்களுக்கு மேல் நிலுவையிலுள்ள நிறைவேற்றாடாத அல்லது பதில் அளிக்கபடாத மக்கள் கோரிக்கைகள்,மனுக்கள் எத்தனை என்ற விபரம் தரவும்? அவற்றை பார்வையிடவும் அனுமதி தரவும். கேள்வி 8 க்கும்9 க்கும் சேர்த்து பதில் கீழே.
- எனக்கான பதிலுக்கு ஏதேனும் நகல் எடுக்கும் செலவாக, என்னிடமிருந்து வசூலிக்க வேண்டி இருந்தால், எனக்கு முன்கூட்டியே தெரியபடுத்த கடிதம் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அணுக வேண்டுகிறேன். பதில்: இவ்வலுவலக பதிவு எண், பதிவு ஏடுகளை பார்வையிட்டு அறிந்துகொள்ளவும். முதல் ஒரு மணி நேரத்திற்கு இலவசம், அடுத்த ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ரூ: 5 வீதம் செலுத்த வேண்டும். (15-03-2022 முதல், ஆம் ஆத்மி கட்சி சார்பாக காரைக்கால் வாழ் மக்களுக்காக மேற்படி ஆவண ஆய்வை தொடங்க இருக்கிறது.)