1.

2.

3.

  1. சட்டத்திற்கு புறம்பாக நடந்துகொண்ட  நடந்துகொண்ட எஸ்.ஐ. மனோகரனுக்கு Legal Notice / சட்ட அறிவிப்பு கடிதம் ஆடியோ.
  2. வாகன தணிக்கை என்ற பெயரில், சட்டதிட்டங்களை சரியாக படிக்காமல், அங்காங்கே, வசூலை மட்டுமே மனதில் கொண்டு பல காவலர்கள் தவறான முறையில் செயலட்டு வருகின்றனர். 18-02-22 மாலை வாகன் தனிக்கைகாக என் என்னுடைய டெல்லி பதிவு எண் கொண்ட வாகனம் நிறுத்தபட்டது. அப்போது நடந்த சம்பவ முதல் ஆடியோ.
  3. சட்ட அறிவிப்பு கடிதம் கொடுக்க சென்றபோது, என்னிடம் அவர் வருத்தம் தெரிவித்ததால், சட்ட நடவடிக்கை நிறுத்த பட்டது. அதன் ஆடியோ,

 

AAPKKL-2022-009 Traffic Police

AIARA-All India All-Rights Association

Legal Notice Ref: / AAPKKL2022-009 / தேதி: 23-02-2022: 

அனுப்புனர்:

MMY. ஹமீது மரைக்கார்(51/2022)

த.பெ.: MM யாக்கூப் 

46 வள்ளல் சீதக்காதி வீதி

காரைக்கால்-60902

பெறுனர்:

உதவி ஆய்வாளர் (மனோகரன்)

போக்குவரத்து காவல் நிலையம்

காரைக்கால்-609602

 

என்னுடைய வாகனத்தை  தணிக்கை செய்யும்போது, சட்டத்திற்கு புறம்பாக நடந்து, எங்களுக்கு கஷ்டத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியதற்கு நஷ்ட ஈடு கோருவது தொடர்பாக.இந்த சட்ட அறிவிப்பு கடிதம் தரப்படுகிறது.

 

18-02-2022 மாலை மணி சரியாக 5:55 மணிக்கு, என்னுடைய வாகனம் Mahindra Scorpio Reg No: DL8CX3529 காரைக்கலில் இருந்து நாகூர் நோக்கி சென்றுகொண்டு இருந்தபோது, தாங்கள் என்னுடைய வாகனத்தை தனிக்கைகாக, நாகூர் ரோட்டில் உள்ள  போலீஸ் குடியிருப்பு அருகில் நிறுத்தியுள்ளீர்கள், அப்போது அதை ஓட்டிச்சென்ற என்னுடைய தங்கை மகன் திரு இம்ரான் (டிரைவர்) வாகனத்தை நிறுத்தி, என்னவென்று கேட்டதற்கு, “ரூபாய்: 1000 கொடுத்துவிட்டு போ” என  சொல்லியுள்ளீர்கள், அவர் ஏன் என்று கேட்டதற்கு “டெல்லியில் பதிவு செய்யபட்ட காரை இங்கே ஓட்டகூடாது” என்று சொல்லியுள்ளீர்கள். “எல்லா ஆவணகளும் சரியாக இருக்கும் போது ஏன்  சார் நான் பணம் கொடுக்கணும், முடியாது”, என்று சொன்னதும் “500 ரூபாயாவது கொடுத்துவிட்டு போ இல்லையென்றால் உன்னையும், வாகனத்தையும் உள்ளே போட்டுவிடுவேன்” என்று ஒருமையில் பேசி மிரட்டியுள்ளீர்கள்.  

 

அதன் பின் டிரைவர், எனக்கு போன் செய்து விஷயத்தை சொன்னதும், “நான் விபரத்தை சொல்கிறேன” என்று, போனை தங்களிடம் கொடுக்க சொன்னேன், நீங்கள் போனை வாங்க மறுத்ததோடு “யாராக இருந்தாலும் இங்கே வர சொல்லு” என்றும்,. “அதுவரை இங்கிருந்து போக முடியாது” எனவும்  மிரட்டியுள்ளீர்கள். அப்போது என்னுடைய வாகனத்தில் என் குடும்ப பெண்கள் நால்வரும் குழந்தைகளும் இருந்தார்கள்.

 

அதன்பின் நான், அவசர காவல் எண்: 100 அழைத்து விழயத்தை பதிவு செய்தேன். பின் புதுவை POP (Policing Of Police) தொடர்பு கொண்டேன், பின், காரைக்கால் நகர காவல் நிலையத்தை தொடர்பு கொண்டேன், பின் காரைக்கால் (Anti-Corruption and Vigilance) சில் விஷயத்தை பதிவு செய்தேன். கடைசியாக  போக்குவரத்து காவல் ஆய்வாளரை தொடர்பு கெண்டு விஷயத்தை சொன்னதும், ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் சரி பார்த்துவிட்டு விட சொல்கிறேன் என்றார். நான் தொடர்பு கொண்டு பேசிய அனைத்து அழைப்பையும், ஆடியோ பதிவு செய்துள்ளேன். இதற்கிடையில், ஒரு மணி நேரம் கடந்துவிட்டது .

 

ஆனால், தங்களுடைய  மேல் அதிகாரி, என் வாகனத்தின் ஆவணங்கள் சரிபார்த்து அனுப்ப சொல்லி அறிவுறுத்தியும், என்னிடம் வாகனத்தில் அனைத்து ஒரிஜினல் ஆவணகளும் சரியாக இருந்தும், உங்களுடைய அதிகார துஷ்பிரயோகத்தால் மேலும் காலதாமதபடுத்தியதில், சுமார் ஒன்றரை மணி நேரம் காருக்குள்ளே குழந்தைளும், பெண்களும் கொசுகடியாலும்,  மிகுந்த புழுக்கத்தலும் அதிக சிரமமடைந்தனர்.

 

மேல் அதிகாரி அறிவுறுத்தலின் படி,  ஆவணகளை சரி பார்த்துவிட்ட பிறகும், மீண்டும் ஒரு முறை ஆவணங்கள் சரி பார்க்க என்னை காவல் நிலையம் வர வைக்க வேண்டும் என்பதற்காக, போலீஸ் நோட்டீஸ் கொடுத்து அதில், என்னுடைய வாகனம் பெயர் மாற்றப்படவில்லை என்று, மூன்று நாட்களில் காவல் நிலையம் வந்து ஆவணங்களையும் சமர்பிக்க உத்தரவு இட்டுள்ளீர்கள். இந்த செயலானது, எதோ உள்நோக்கம் (லஞ்சம் அல்லது மிரட்டல்) உடையதாக இருக்கலாம் என நான் கருதுகிறேன் 

 

நான் டெல்லியில் இருந்து வாகனத்தை வாங்கி மூன்று மாதங்களுக்குள்  மட்டுமே ஆகும் நிலையில், உடனே பெயர் மாற்ற  வலியுறுத்தி எந்த சட்டமும் என்னை கட்டாயபடுத்த வில்லை. நான் ஒரு வருடத்திற்கு மேலாக அந்த வாகனத்தை காரைக்காலில் வைத்துக்கொள்ள விரும்பினால் மட்டுமே, பெயர் மாற்றம் அவசியமாகிறது. (பார்க்க: மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988.பகுதி 47, 48). எனவே, வாகன உரிமையாளர்களுக்கு தேவையான நிம்மதியையும் வசதிகளையும் மதிக்கும் பொருட்டு, சட்டத்திட்டங்களை மத்திய அரசு வகுத்து கொடுத்து இருக்கும்போது, பொதுமக்களை மிரட்டுவதும், வழிபரி போல அங்காங்கே பணம் பறிப்பதும், திட்டுவதும், மரியாதையற்ற  வார்த்தைகளை பிரயோகப் படுத்துவதும், தொடர்கதையாகி விட்டது. இப்படி அநாகரீகமான செயல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும். மேலும், வாகன தணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள், மோட்டார் வாகன சட்டதிட்டங்களை படித்து, வாகன ஓட்டிகளின்  உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்

 

எனவே, 

  1. என்னுடைய அனைத்து ஒரிஜினல் ஆவணத்தையும், சரி பார்த்த பிறகும், என்னை அலைகழிக்கும் நோக்கத்தோடு என் வாகன பெயரில் நோட்டிஸ் கொடுத்தற்கும்,
  2. என் வாகனத்தை இயக்கிவரை நோக்கி மரியாதை குறைவான வார்த்தைகளை பிரயோகபடுத்தி உள்ளே போட்டு விடுவேன் என மிரட்டியதற்காகவும்.
  3. 15 வருடங்களுக்கு முழு வரியும் கட்டி, இந்தியா முழுவதும் ஓடுவதற்கு தகுயான வாகனத்தை, காரைகாலில் ஓட கூடாது என்று பொய் சொல்லி பணம் பறிக்க முயன்றதற்காகவும்.
  4. என் குடும்ப பெண்கள் மற்றும் குழந்தைகளை மிகவும் சிரம படுத்தியதற்காகவும்
  5. மேற்படி விஷயங்களால் எனக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்ததற்காகவும்.

 

எனக்கும், மிகவும் சிரமத்துகுள்ளான என் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் சேர்த்து வருத்தம் தெரிவிப்பதோடு, ரூபாய்: 50,000 ஐம்பதாயிரம் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று இந்த Legal Notice சட்ட அறிவிப்பு தங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு கிடைத்த தினம் முதல் 14 நாட்களுக்குள் தங்களுடைய ஆட்சேபனையையோ அல்லது சம்மதத்தையோ தெரிவிக்காத பட்சத்தில், நான் தங்கள் மீது வழக்கு தொடர இதுவே எனது முதல் நடவடிக்கையாகும்  என்று இதன் மூலம் பறைசாற்றுகிறேன்.

இப்படிக்கு

பதிவு:

Hamid Incharges

 

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »