காரைக்கால் ஆம் ஆத்மி கட்சியின் வாரந்திர கூட்டம் 07-11-21

வணக்கம்,

முதற்கட்டமாக சுமார் 15 நபர்கள் கொண்ட இளைஞர்களுக்கான கூட்டம் கடந்த 07-11-21 ஞாயிற்றுகிழமை காரைக்கால்  வள்ளல் சீதக்காதி வீதியில் திரு MMY ஹமீது இல்லத்தில் நடைபெற்றது.

அதில்

  1. இளைஞர்களுக்கு நம் நாட்டு அரசியல் தெரிந்து கொள்ளுதல் எவ்வளவு அவசியம் என்பதையும்,
  2. தற்போது இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகளில் ஊழலற்ற ஒரே கட்சி ஆம் ஆத்மி கட்சிதான் என்பதையும்.
  3. நம் நாட்டை ஊழல் கலாசாரத்திலிருந்து மீட்டுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும்,
  4. டெல்லிக்கு அடுத்தபடியாக புதுவையிலும் எவ்வாறு மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதையும்,  மிகவும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அடுத்தகட்டமாக

  1. அரசாங்க செயல்பாடுகளை கண்காணிக்கும் பயிற்சி
  2. தனக்கு தேவையான அரசு வேலைகளை ப்ரோக்கர் உதவியின்றி லஞ்சமின்றி  தானே செய்துகொள்ள பயிற்சி,
  3. வாரத்தில் ஒரு நாள் மட்டும் பொது சேவைக்காக ஒதிக்கி தொண்டர்களுக்கான பயிற்சி,
  4. வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவது,
  5. தொழில் செய்ய விரும்புவர்களுக்கு தொழில் வாய்ப்பையும்,
  6. சொந்த தொழில் செய்ய  நிதி பற்றாக்குறை இருப்பின், நிதி ஏற்பட்டு திட்டம்.

போன்றவைகள் அடுத்த ஞாயிற்றுகிழமை கூட்டத்தில் பேச இருக்கிறோம்.

மேலும் 30 முதல் 50 நபர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »