அன்பார்ந்த புதுச்சேரி பெருமக்களே…ஆம் ஆத்மி கட்சியின் பணிவான வேண்டுகோள்…
புதுச்சேரியில்….
ஜனநாயகத்தில்… முதல் அதிகாரம் கொண்டது.
1. பாராளுமன்றம்
2. சட்ட மன்றம்.
பாராளுமன்ற செயல்பாடு சொல்ல தேவையில்லை…
கடந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு. ராதாகிருஷ்ணன்…
ராஜ்யசபா உறுப்பினர்..திரு கோகுலகிருஷ்னன்…
இவர்களின் செயல் பாடுகள் அனைத்தும் புதுச்சேரி மக்களுக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும்….
சட்ட மன்றம்… கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல் பட்ட விதம்…
துன்ப பட்ட துயரப்பட்ட மக்களை கேட்டால் தெரியும்…
முழுமையான பட்ஜெட். போட்டது கிடையாது..
முழுமையாக சட்ட சபையை கூட்டுவது. கிடையாது..
வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கிடையாது..
பட்ஜெட்டில் சொல்வதை ஒன்று கூட நிறைவேற்றுவது கிடையாது….
ஜனநாயகத்தின். முதல் அதிகார மானது இப்படி இருக்க…
ஜனநாயகத்தின் இரண்டாவது மக்கள் அதிகாரமான…
கூட்டுறவு அமைப்புகள்..
உள்ளாட்சி அமைப்புகள்…
இதன் இரண்டு நிலையுமே மிகவும் மோசம்…
உள்ளாட்சி. தேர்தலை நடத்துவது இல்லை…
கூட்டுறவு அமைப்புகளில். அரசியல் தலையீடு அதிகரித்து சிக்கி சீரழிந்து விட்டது
ஜனநாயகத்தின் மூன்றாவது மக்கள் அதிகாரம் கொண்டது…
- தகவல் பெறும் உரிமை சட்டம்…
2. சேவை பெறும் உரிமை சட்டம்…
இதில் தகவல் பெறும் உரிமை மட்டுமே அமல்படுத்தப்பட்டது…
இது கூட ஒழுங்காக பதில் அளிப்பதில்லை…
இந்த சட்டம் கூட பாதி கிணறு தாண்டிய நிலையில் உள்ளது…
தகவல் ஆணையர்.. அதாவது மேல் முறையீடு செய்ய புதுச்சேரியில் அலுவலகம் இல்லை…
இந்த லட்சணத்தில்… இந்த சட்டம் இருக்கிறது…
அடுத்து சேவை பெறும் உரிமை சட்டம்…
இந்த சட்டத்தை அமல் படுத்தவே இல்லை….
இதுதான் புதுச்சேரி ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை கட்டிக் காக்கும் நிலை…
இந்த நிலையை பார்த்தால் கரடியே காரித்துப்பும் கதையாக இருக்கிறதே…
நீங்கள் துப்ப மாட்டீர்களா என்ன…
சேவை பெறும் உரிமை சட்டம்… என்றால் என்ன.. இதை அமல் படுத்த இவர்களுக்கு என்ன தயக்கம்….
இந்த சட்டம் டில்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களால் அமல்படுத்தப்பட்டு…100 சதவீத பயனை மக்கள் அடைந்து வருகின்றனர்…
புதுச்சேரியில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால்….
மக்கள் 70 வகையான சான்றிதழ்களை வீட்டில் இருந்தே பெறலாம்…
அரசு அலுவலகங்கள் தேடி அலைய வேண்டியதில்லை…
எம் எல் ஏ அலுவலகம் போக தேவையில்லை..
அல்லக்கைகளை தேடி அலைய தேவையில்லை…
லஞ்சம் கொடுக்காமல் அதிகாரத்துடன் பெறலாம்…
ஆச்சரியமாக இருக்கும்.. ஆனால் இது தான் உண்மை….
உதாரணமாக உங்களுக்கு ரேஷன் கார்டு தேவை…
இதற்காக அலுவலகம் தேவையில்லை…
இந்த சட்டம் அமலானால் பொதுவாக மக்கள் குறை தீர்ப்பு துறை உருவாக்க படும்… இதற்கு பொதுத் தொலைபேசி எண் அளிக்க படும்…
அந்த எண்ணில் தொடர்பு கொண்டு… எனக்கு ரேஷன் கார்டு வேண்டும் என்று தகவல் தெரிவித்தால் போதும்…
சிவில் சப்ளை துறை ஊழியர் உங்கள் வீட்டுக்கு வந்து தேவையான ஆவணங்களை.. ஆதாரங்களை பெற்று குறைந்த பட்சம் பத்து நாளைக்குள் ரேஷன் அட்டை அளித்து விட்டு… அந்த மக்கள் குறை தீர்ப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்…
இவ்வாறு 70 வகையான சான்றிதழ்களை அளிக்க இந்த சட்டம் வகை செய்கிறது…
இந்த சட்டத்தை புதுச்சேரி அரசு அமல்படுத்தாதது ஏன்…
மக்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை வைக்காதது ஏன்…
சட்டமன்ற உறுப்பினர்களாவது இந்த சட்டத்தை அமல் படுத்த கோரிக்கை வைக்கலாமே…..
இந்த அரசானது மக்களுக்கானது அல்ல என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்…
மக்களுக்கான அரசாங்கம் அமைய ஆம் ஆத்மி கட்சி முன் வைக்கும் மக்கள் அதிகாரம் வழங்கும் விதமாக..
அதிகாரத்தை பரவலாக்க.
மாநில தகுதி பெற்று தருதல்
நிதிப்பற்றாக்குறை போக்க நடவடிக்கை எடுத்தல்…
அடிப்படை வசதிகள் பெற உள்ளாட்சி தேர்தலை நடத்துதல்…
கூட்டுறவு அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துதல்…
தகவல் பெறும் உரிமை சட்டம் முழுமையாக அமல் படுத்துதல்…
சேவை பெறும் உரிமை சட்டம் அமல் படுத்துதல்…
இந்த ஐந்து அம்ச திட்டங்களை கொண்டு வரவும்…
மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கவும்…
கிராமம் கிராமமாக தீவிர பிரச்சாரத்தில்..
ஈடுபட இருக்கிறது..
கல்வியாளர்கள்… சட்ட வல்லுநர்கள்… முதியவர்கள்… தொழிலாளர்கள்… அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள்… இளைஞர்கள்… இளம் பெண்கள்…. பெருமளவில் ஆதரவு தந்து…
புதுச்சேரி புதிய பொலிவுடன்… பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டுகிறோம்….
நன்றி வணக்கம்..
கோ ராமலிங்கம்
செயற்குழு உறுப்பினர்..
ஆம் ஆத்மி கட்சி
புதுச்சேரி…