இது சற்று ஆழமான பதிவு… விரிவான பதிவு…
இதை ஒரு முறை அவசியம் படித்து… மற்றவர்களுக்கு சொல்லும் முன்… நீங்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும்… என்பதே… இந்த பதிவின் நோக்கம்…

நான் பல பதிவுகளை பதிவு செய்து இருக்கிறேன்… இது மிகவும் முக்கியமான பதிவு…

இதை படித்து விட்டுவிட்டு நிச்சயமாக கடந்து செல்ல முடியாது… உண்மையிலேயே சமூக அக்கறை உள்ளவராக இருந்தால்…..

வாழ்க்கையில் நமக்கு பல கேள்விகள் இருக்கின்றன…
அவற்றை தீர்ப்பதற்கான வழிகளும் இருக்கின்றன…

அதை தீர்ப்பதற்கான முடிவுகளை நாம் தான் எடுக்கிறோம்…

அதில் வெற்றியும் காண்கிறோம்…

இப்படித்தான் எல்லோருக்கும் வாழ்க்கை என்னும் படகு கரை சேருகிறது….

இதே சமூகத்திலும் பல கேள்விகளும் இருக்கின்றன…

வழிகளும் இருக்கின்றன…

முடிவுகளும் இருக்கின்றன…

இதை நாம் சரியாக செய்கிறோமா…

இந்த சமூக படகை நாம் சரியாக செலுத்தி கரை சேறுகிறோமா என்பதே… நம்மை நாம் ஒவ்வொருவரும் சுய பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டியது…..

இதோ உங்கள் முன்…
சமூகத்தில் நிலவும்.. அசாதாரண சூழலில்…

கேள்விகளும்
வழிகளும்
முடிவுகளும்….

நமது புதுச்சேரி மாநிலம் ஏன் இப்படி ஆனது….

மாநிலம் தகுதி கிடைக்குமா கிடைக்காதா…

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா நடக்காதா…

பஞ்சாலை களை திறக்க நடவடிக்கை எப்போது எடுப்பார்கள்…

10000 பணியிடங்கள் நிரப்புவதில் ஏன் காலதாமதம்…

இளைஞர்களுக்கு கோபம் வரவே வராதா…

இளைஞர் மன்றங்கள் அமைதி காப்பது. ஏன்…

வலுவான உண்மையான போராட்டங்கள் நடக்காதா…

நிதிப்பற்றாக்குறை எப்போது தான் போகும்…

ஆட்சியாளர்கள்.. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்களா…

எதிர்க்கட்சிகள்.. பதுங்கி ஓடி ஒளிவது ஏன்…

அரசு ஊழியர்கள் ஒழுங்காக தங்கள் பணியை செய்கிறார்களா…

இவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் தொண்டமா…

நமது வரிப்பணத்தில் இயங்கும் இவர்கள் பணியை யாராவது கண்காணிக்கிறார்களா…

திட்டங்கள் ஒழுங்காக செயல்படுத்தப்படுகிறதா…

தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலனுக்காக உண்மையாக போராடுகிறதா…

மக்கள் சரியான நபருக்கு ஓட்டு போடுகிறார்களா….

நடக்கும் அநியாயங்களை யாராவது தட்டிக் கேட்கிறார்களா….

கிரிமினல்கள் ரெளடிகள் இவர்களை அரசியலில் நுழைய விடலாமா…

அனைத்திலும் ஊழல் நடக்கிறதே இதை அனுமதிக்கலாமா…

நாம் இந்த கஷ்டங்களை எல்லாம் விதி என்று அனுபவிக்க தான் வேண்டுமா…

குண்டும் குழியுமான சாலைகளில் தான் காலம் முழுவதும் பயணம் செய்ய வேண்டுமா….

இதனை தீர்க்க நம்மால் முடியாதா.. முடியவே முடியாதா…

இப்படி மலைபோல நம் கேள்விகள் குவிந்தாலும்…

அவற்றை தீர்க்க வழிகளும் இருக்கத்தான் செய்கின்றன….

மாநில தகுதி கிடைக்க ஒன்று பட்ட வலுவான போராட்டம் நடத்த வேண்டும்…

இதன் மூலம் நிதிப்பற்றாக்குறை பிரச்னையை தீர்க்க முடியும்…

 

லோக் பால் சட்டம்..
தகவல் பெறும் உரிமை சட்டம்
சேவை பெறும் உரிமை சட்டம்…

இவற்றை சரியாக அமல் படுத்தி ஊழலை ஒழிக்க முடியும்… அரசு ஊழியர்களை ஒழுங்காக பணி செய்ய வைக்க முடியும்…

உள்ளாட்சி தேர்தல்..

கூட்டுறவு அமைப்புகள் தேர்தல்… நடத்தி…

அதிகாரத்தை பகிர்ந்து அளித்தாலே அடிப்படை வசதிகள் நிறைவாக இருக்கும்….

கிராமங்கள் தோறும் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து நமது கிராமத்தை நாமே பாதுகாக்கலாம்… நமக்கு தலைவர்கள் தேவையில்லை…

ஓட்டுக்கு பணம் கொடுப்பவனை ஊருக்குள் நுழைய விடவே கூடாது…..

இதற்கான முடிவுகளும் நம்மிடையே உள்ளன..

ஒன்று பட்டால் நம்மால் முடியாதது இல்லை… முதலில்…. ஒன்று பட வேண்டும்…

நல்ல கட்சியை தேர்ந்தெடுக்கலாம்…

நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்காமல் களத்தில் இறங்கி போராடலாம்…

அநீதி நடக்கும் போது தட்டிக் கேட்கலாம்…

கிராமம் தோறும் மக்கள் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கலாம்…

தகவல் பெறும் உரிமை சட்டம் கீழ்… கிராமத்தில்.. மாநிலத்தில் நடக்கும் தவறுகளை நிர்வாக சீர்கேடுகள் முறைகேடுகள் கேட்டு அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க கோரலாம்…

ஓட்டுக்கு பணம் கொடுப்பவன் திருடன்..
அந்த திருடனை ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம்…
எங்கள் கிராமமமோ எங்கள் மாநிலமோ கொள்ளை போவதை அனுமதிக்க மாட்டோம்..

என மிகப்பெரிய போர்டு எழுதி கிராம நுழைவு வாயிலில் வைத்து…
ஊழலுக்கு முடிவு கட்டுங்கள்…..

யாருக்குமே அஞ்சாதீர்கள்…

வயதானவர்கள் வழிகாட்டுதலில்.

இளைஞர்கள் பயணம் செய்தால்…

மாநிலம் என்ற சமூக படகில் ஆனந்த மாக அனைவரும் பயணம் செய்யலாம்….

கேள்விகளுக்கு வழிகள் நிறைய இருக்கின்றன…

முடிவு உங்கள் கையில்….

தொகுப்பு: திரு ராமு கோவிந்தராஜ் (ஆம் ஆத்மிகட்சி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »