புதுச்சேரி கள நிலவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்…

நமது பிரதான கொள்கை என்பது… ஊழலை ஒழிப்பது…

இந்த ஊழல் சேற்றில் சிக்கியுள்ள மக்களை எப்படி காப்பது…

முதலில் நாம் தெளிவாக புரிந்து அதன் படி மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு அளித்தல் அவசியம்….

நாம் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் செயலாற்ற வேண்டும்…

எதை ஒன்றையும் எதிர்பார்த்து செயல் படாமல் செயல்பட்டால்… அதன் பலனாக உனக்கு நீ எதிர்பாராத வகையில் கிடைக்கும்…

அதுதான் மக்களின் நம்பிக்கை….
அதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும்….

இரண்டு முக்கிய நிகழ்வுகளை ஆவணங்களுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்…

புதுச்சேரி அரசின் தணிக்கை அறிக்கை..
என்பது புதுச்சேரி வரவு செலவு அறிக்கை… இதில் தணிக்கை குறைபாடுகள்..

இதனை அரசு போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…

ஆனால் நடவடிக்கைகள் எடுப்பதில்லை… …

இதை மக்களிடம் கொண்டு செல்வதோடு… பொது நல வழக்கு தொடரவும் ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும்….

முதலாவதாக…

தணிக்கை அறிக்கையில்..
குறிப்பிடுவது.

புள்ளியல் விவரப்படி… புதுச்சேரி மொத்த மக்கள் தொகையில். 7.70 சதவீதம் பேர் தான் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளதாக தெரிவிக்கின்றனர்…

அதன் படி பார்த்தால்.. மொத்த மக்கள் தொகை 15 லட்சம்..

இதில் 7.70 சதவீதம். என்றால் சுமார் 1.10.லட்சம் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்…

அதன் படி வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் வழங்கப்படும் குடும்ப சிவப்பு நிற ரேஷன் அட்டைகள்.
. 30000.அட்டைகள் தான் இருக்க வேண்டும்.

ஆனால் இப்போது இருப்பது…

மஞ்சள் அட்டை 1.70 லட்சம் அட்டைகளும்..

சிவப்பு அட்டை 1.60 லட்சம் அட்டைகளும் உள்ளன…

ஊழல் இங்கு தான் அரசியல் வாதிகள்.. மற்றும் அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளை ஆரம்பிக்கிறது…

இதன் மூலம் சுமார் வருடத்திற்கு ரூ 500 கோடி அளவுக்கு தகுதி இல்லாதவர்களுக்கு சலுகை என்ற அடிப்படையில் செல்கிறது…

அரசு உண்மையிலேயே செய்ய வேண்டியது என்ன…

உண்மையிலேயே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பு நடத்தி… அவர்களுக்கு மட்டும் அரசு சலுகைகள் கிடைக்குமானால்… புதுச்சேரி இரண்டு ஆண்டுகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இல்லாத மக்களாக இருக்கும் மாநிலமாக மாறிவிடும்…
இந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பு… கல்லூரி மாணவர்களுக்கு உரிய பயிற்சி கொடுத்து தன்னார்வலர்கள் கொண்ட அமைப்புகளை பயன்படுத்தி நடத்தினால்… நல்ல பலன் கிடைக்கும்…

கணக்கெடுப்பு நடத்தாமல் இந்த இழி நிலை தொடருமானால்…
தணிக்கை துறை அதிகாரிக்கு இந்த முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கும் படியும்… இதன் மீது உரிய விசாரணை நடத்தும் படியும்… தவறான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும்..
புகார் அளிக்கலாம்…

தணிக்கை துறை கால தாமதப்படுத்தும் பட்சத்தில்… பொது நல வழக்கு தொடரலாம்…
நீதிமன்றம் விசாரணை நடத்தி..
உண்மையான கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வைக்க லாம்…

உதாரணமாக…

ஏனாம்..
தொகுதியில். 30000 வாக்குகள் உள்ளன.. மக்கள் தொகை சுமார் 40000…

இதில் சிவப்பு அட்டைகள்… சுமார் 11000 அட்டைகள்..

மஞ்சள் அட்டைகள் சுமார் 5000.அட்டைகள்…

அதாவது மொத்த மக்கள் தொகை 40000
ரேஷன் அட்டைகள் 22000

இதே நிலை தான் மற்ற தொகுதிகளிலும்….

இரண்டாவதாக….

தணிக்கை அறிக்கையில் அரசுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையாக
சுமார் 1104 கோடி காட்டப்பட்டுள்ளது…

இதில் சுமார் 510 கோடி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வராமல் உள்ளது…

மின் துறை….. 710. கோடி

வணிக வரித்துறை.. 208 கோடி

கலால் துறை 42 கோடி

மற்ற துறைகளில்.. 144 கோடி..

மொத்தம் 1104 கோடி…

இதை வசூலிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன…

எந்த எந்த நிறுவனங்கள் தரவில்லை..

தராத ஏமாற்றும் நிறுவனங்கள் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை…

இதை மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும்….

மேற்கண்ட இரண்டும் அரசின் தவறுகள்… நிர்வாக சீர்கேடுகள்… ஆவணங்கள் ஆதாரங்களோடு மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும்…

பொது நல வழக்கு தொடர வேண்டும்..

தணிக்கை துறை அதிகாரிகளிடமும் முறையிட வேண்டும்….

மேலும் பல திட்டங்கள் நீண்ட கால மாக நிறைவேற்ற படாமல் கோமா நிலையில் படுத்த படுக்கையாக உள்ளன…

இவற்றை எல்லாம் மக்களுக்கு எடுத்துரைப்பது யார்…

புதிய மாற்றத்தை யார் கொண்டு வருவது…

நாம் தான்… ஆம்…
ஆம் ஆத்மி கட்சி தான்…

நாம் மக்களுக்கு எடுத்து சொல்வதற்கு மக்களிடம்… இளைஞர்களிடம் இத்தகைய நிர்வாக சீர்கேடுகளை வாட்ஸ்அப்.. முகநூல் வாயிலாக கொண்டு சென்றாலே போதும்…

அரசு அலுவலகங்கள் தற்போது இயங்குவதில்லை… காரணம் 40 சதவீதத்துக்கும் மேல் காலிப் பணியிடங்கள் நிரப்பாமல் உள்ளதால் பணியில் பெரும் தேக்க நிலை உள்ளது….

இதற்கு அரசு அலுவலகங்கள் முறையாக செயல் பட சேவை பெறும் உரிமை சட்டம் அவசியம்..

இந்த சட்டம்

தொடர்பான அவசியத் தேவை…

தொடரும்….

தொகுப்பு: திரு ராமு கோவிந்தராஜ் (ஆம் ஆத்மி கட்சி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »