ஊழலை ஒழிப்பது நாம் என்ன செய்ய வேண்டும்?
இதில் நமது பணி என்ன? விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்…
ஊழலை ஒழிப்போம் என்ற உயர்ந்த கொள்கையை முன்னெடுத்துதான். டில்லியில் ஆம் ஆத்மி கட்சி மக்கள் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றியது…
- ஊழலை ஒழிப்பது என்பது
- ஊழலை அம்பலப்படுத்துவது…
- இதற்கு முதலில் துணிச்சல் தேவை…
- நிமிர்ந்த நடையும்
- நேர்கொண்ட பார்வையும்
- அஞ்சா நெஞ்சமும் தேவை…..
ஊழல், எங்கே ஆரம்பிக்கிறது….
தேர்தலில் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் இருந்து இது ஆரம்பிக்கிறது அதை ஆரம்பத்திலேயே இதனை கிள்ளி எறிய வேண்டும்…
- ஓட்டுக்கு பணம் கொடுப்பவன் திருடன்…
- திருடனுக்கு நமது ஓட்டைப் போடலாமா…
- திருட்டு தொழிலுக்கு மக்களை உடந்தையாக செயல்பட விடலாமா…
- தொகுதிக்கு பத்து பேராவது வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல்
- காவல் துறையிலும்.. தேர்தல் துறையிலும் புகார் செய்ய வேண்டும்
- பொதுநல வழக்குகள் தொடர வேண்டும்…
அப்படி செய்யாததின் விளைவு கோடிக்கணக்கில் செலவு செய்தவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்தது போல் திருட்டு கணக்கு காட்டி தப்பித்து விடுகின்றனர்….
ஊழலை வாழவைக்க நாம் விடும் முதல் வழி இதுதான்… அதுவும் மக்கள் துணையோடு…
இதற்கு சரியான முடிவை எடுப்பது அவசியம்….
வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் இந்த அ சிங்கத்தை தடுத்து நிறுத்தி ஊர் உலகம் அறியச் செய்தால்…
மக்களும் தங்களுக்காக மாற்று அரசியல் தர நேர்மையான அரசியல் நடத்த ஒரு கட்சி இருக்கிறது என்ற நம்பிக்கை வரும்…..
இது ஊழலை ஒழிக்க நாம் போடும் முதல் தடுப்பணை…
இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் மக்கள் முதல்வர் உட்பட பல கோடி செலவு செய்து தான் ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்றனர்…
போட்ட முதலை எடுக்க இரட்டை வேடத்தில் நடிக்கின்றனர்…
இதில் உரிமைகளை கேட்க ஏது இவர்களுக்கு நேரம்….
ஆட்சிக்கு வந்த பின் அதிகாரிகளை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு ஆட்டம் போடுவது ஒரு வகை…
இங்கு பல் இல்லாத பாம்பாக நமது அரசு மாநில தகுதி இல்லாமலும் யூனியன் அந்தஸ்து இல்லாமலும் இரண்டாம் கட்ட மாக இருப்பதால்… அதிகாரிகளுக்கு அடங்கி போகும் நிலை… இதில் நிதி பற்றாக்குறை வேறு…
அதிகாரிகளின் ஆட்சியில்… அனைத்துமே அவர்கள் கையெழுத்து போட்டால் மட்டுமே…
அறிவிப்பு வந்தால் கூட அமலாவதில்லை…
கெஞ்சி கூத்தாடி ஆறிப்போன கஞ்சாக மக்களுக்கு இறுதியில் கிடைக்கும் போது பாதியில் மீதி கிடைக்கும்…
இப்போது நடக்கும் ஆட்சி என்பது…. அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்காமல் குவித்து வைத்து… ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கவே…
இதனால் தான்… இவர்கள்…
உள்ளாட்சி தேர்தல் தொடங்கி…
தன்னாட்சி நிறுவனங்கள் வாரியத்தின் தலைவர்கள் நியமனம் செய்யாமல்…
கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேர்தல் நடத்தாமல்…
தனிக் கல்வி வாரியம் அமைக்காமல்…
லோக் பால் சட்டம்..
தகவல் பெறும் உரிமை சட்டம்..
சேவை பெறும் உரிமை சட்டம்….
இவற்றை முறையாக செயல்படுத்தாமல்… கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கும் நிலை.
..
எனவே மக்களிடம்.
அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும்… அனைத்து அமைப்புக்களுக்கும்…
சட்டங்களையும் அமல் படுத்தவும்…
மக்களுக்கு இதில் உள்ள அதிகாரத்தையும் விளக்குவதோடு…
இதனை கொண்டு வர அமல் படுத்த.
. தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம்.
முக்கிய மாக
தகவல் பெறும் உரிமை சட்டம்
சேவை பெறும் உரிமை சட்டம்
லோக் பால் சட்டம்…
உள்ளாட்சி தேர்தல்
கூட்டுறவு அமைப்புகள் தேர்தல்…
கோவில் நிர்வாகக்குழு தேர்தல்….
இவற்றின் அவசியத் தேவைகளை மக்களிடம் கொண்டு செல்வது அவசியமாகிறது…..
சேவை பெறும் உரிமை சட்டம்…
இது அமல் படுத்த பட்டால்… புதுச்சேரியில் ஊழல் பெரும்பாலும் ஒழிந்து விட. வாய்ப்பு இருக்கிறது….
அந்த சட்டத்தின் முக்கிய அம்சம் என்ன…
இதன் பலன்கள் என்ன..
மக்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் அதிகாரம் என்ன…
இதை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது…
இதற்காக எப்படி செயல்படுவது..
தொடரும்
தொகுப்பு: திரு ராமு கோவிந்தராஜ் (ஆம் ஆத்மி கட்சி)