ஆம் ஆத்மி கட்சி நண்பர்களே…. இந்த பதிவு உங்களுக்காக….
ஊழலை ஒழிக்க ஆரம்பிக்கப்பட்ட இயக்கமே.
ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற. இயக்கம்…
அண்ணா ஹசாரே தலைமையில். நடந்தது…
இது இந்தியா முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது….
தலைநகரில்… இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றவை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களே….
குறிப்பாக திரு அரவிந்த் கெஜ்ரிவால்…கிரண் பேடி..மற்றும் பலரின் முழுமையான அர்ப்பணிப்பே டில்லி மக்களிடையே மிகுந்த ஊழலை ஒழிக்கும் இந்த இயக்கத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது….
இதில் கிரண் பேடி பாஜகவில் விலை பேசப்பட்டு முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு தேர்தலில் நின்று டெபாசிட் இழந்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கும்…..
புதுச்சேரியிலும். ஊழலுக்கு எதிரான இயக்கத்தை ஆம் ஆத்மி கட்சி நடத்த வேண்டும்….
ஊழல் என்பது எல்லா இடங்களிலும் சாக்கடை போல பரவி கிடக்கிறது…
தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் ஆரம்பிக்கிறது.
..
பிறகு… ஆட்சியாளர்கள்…
அதிகாரிகள்… ஒப்பந்ததாரர்கள்… கூட்டுக் கொள்ளையில்…
ஊழல் என்பது தலைவிரித்து ஆடுகிறது….
ஊழலை ஒழிக்க நாம் விரிவான இயக்கங்களை நடத்துதல் முக்கியம்…..
பட்ஜெட் படி செலவுகள் எதுவும் செய்வதில்லை…
மக்களும் எதையும் கேட்பதில்லை….
இதில் ஊழல் பெருமளவு நடைபெறும் இடங்கள்…
மத்திய அரசு மூலம்… புரியாத இந்தி திட்டங்களுக்காக வருடம் தோறும் பல நூறு கோடிகள்….
நகராட்சி பஞ்சாயத்தில் நடைபெறும் ஊழல்கள்…
நகராட்சி பஞ்சாயத்துக்கள்… கடந்த பதிமூன்று ஆண்டுகளாக வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிப்பதில்லை…
வீட்டு வரி… தொழில் வரி… மற்றும் வீடு கட்டுவதற்கு அனுமதி கொடுக்க இவர்கள் நிர்ணயிக்கும் வரிகள்…
இதன் மூலம் வருவாய்…
அடிப்படை வசதிகளை தீர்க்க பயன்படுத்த வேண்டும்…
ஆனால்… இதில் தான் பெருமளவு ஊழல் நடைபெறுகிறது….
இதில் உயர் அதிகாரிகள்… உள்ளூர் ஆளும் கட்சி ஆதரவாளர்கள்… ஒப்பந்ததாரர்கள்… கூட்டுக் கொள்ளையடிக்கும் அவலம்…
பல நேரங்களில் பணி செய்யாமலே பணி முடித்ததாக பணம் எடுப்பது…
பணிகளை ஒழுங்காக முடிக்காமல் அரை குறை வேலையாக முடிப்பது….
யார் இவர்களை தட்டி கேட்பது….
இப்போது சாலைகள் குண்டும் குழியுமான இருப்பதற்கும்… வரவு செலவு கணக்கு காட்டாமல் இருப்பதற்கும்… பஞ்சாயத்து தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கும்… ஒரு சம்பந்தம் உண்டு….
ஆட்சி அதிகாரத்தை குவித்து வைத்து இதில் ருசி கண்ட கூட்டங்கள்…அதிகாரத்தை விட்டு தர மனம் இல்லை….
இதைத் தவிர 73 தன்னாட்சி நிறுவனங்கள்….
12 அரசு சார்பு நிறுவனங்கள்…
520 கூட்டுறவு நிறுவனங்கள்….
இவற்றில் நடக்கும்… ஊழல்கள்… பணி நியமனங்கள்… நிர்வாக சீர்கேடுகள்….
இவற்றை நாம் கண்காணிக்காமல் விட்டதின் விளைவு புதுச்சேரி சில ஊழல் பூ தங்களுக்கு புதையலாக தெரிகிறது….
இவற்றை அம்பலப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பது தான் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பணியாக இருக்க வேண்டும்… இதற்கான திட்டமிடலை இப்போது இருந்தே ஆரம்பித்தால் தான்…
வரும் 2026 ல் மக்கள் ஆதரவுடன் இந்த பணநாயக கட்சிகளை விரட்டி… ஜனநாயக ஆட்சியை நேர்மையான ஆட்சியை அமைக்கலாம்…
இதற்கு கடுமையான உழைப்பும்… உண்மையான அர்ப்பணிப்பு உணர்வும் தேவை….
ஊழலை ஒழிப்பது அவ்வளவு சுலபமான வேலை அல்ல…
ருசி கண்டவர்கள்..
பதம் பார்த்தவர்கள்..
கோடிகளிலே கரை புரண்ட வர்கள்…
சுயநல கிரிமினல் சக்திகள்…
இவர்களை எதிர்த்து அல்லவா நாம் களத்தில் இறங்க வேண்டும்…
இது மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே சாத்தியம்….
அதிகாரக் குவியல் என்பது அனைத்திலுமே பரவி விட்டது…
அரசுத் துறையில் காலியிடங்களை கூட நிரப்ப இவர்களுக்கு மனம் இல்லை…
நிதிப்பற்றாக்குறை என்று சப்பைக்கட்டு காரணங்களை கூறினால் கூட உண்மை அது இல்லை…
அரசு துறைகளில் 40 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதால்… அரசு துறைகள் இயங்கவில்லை… இது இவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது…
மக்கள் தான் இதில் அலைக்கழிக்கப்படுகின்றனர்…
ஊழலும் முறைகேடுகளுக்கு… ஆதிக்க அடக்குமுறைகளும்… சர்வாதிகார போக்கும் தலைதூக்கி… எம் எல் ஏ அலுவலக வாசலில் மக்களை நிற்க வைத்து கையேந்தி நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்….
புதுச்சேரியில்…
45 அரசு துறைகள்…
73 தன்னாட்சி நிறுவனங்கள்…
12 பொதுத் துறை நிறுவனங்கள்…
520 கூட்டுறவு நிறுவனங்கள்…
5 முனிசிபாலிட்டிகள்…
10 கொம்யூன் பஞ்சாயத்துகள்…
108 கிராம பஞ்சாயத்துகள்…
813 கிராம வார்டுகள்…
117 நகர வார்டுகள்…
490. சதுர கிமீ
நான்கு பகுதிகள்
15 லட்சம் மக்கள்…
7.70 சதவீதம் வறுமைக் கோட்டுக்கு கீழ்…
84.5 சதவீதம் படித்தவர்கள்….
இதுதான் புதுச்சேரி…
இந்த புதுச்சேரியை ஊழலற்ற புதுச்சேரியாக மாற்ற நாம் ஒவ்வொருவரும் களத்தில் இறங்க வேண்டும்……
ஒரு உதாரணத்தை இங்கு பதிவு செய்கிறேன்…
12 பொதுத் துறை நிறுவனங்கள்…
அரசு முதலீடு…… 709 கோடி
கூட்டுறவு சங்கங்கள்..
அரசு முதலீடு.. 305 கோடி…
அரசுக்கு இதன் மூலம் வருமானம்… அதிகபட்சமாக.. ரூ 6 லட்சம் மட்டுமே…
இதில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே…
இந்த இரண்டு கூட மக்களிடம் சுரண்டப்படும் வரியில் இருந்து தான்…
பவர் கார்ப்பரேஷன்..
சாராய ஆலை….
இதற்கு என்ன செய்ய வேண்டும்…
இந்த ஊழலுக்கு எதிரான புதுச்சேரி இயக்கத்தை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு முன்பாக..
புதுச்சேரி வரவு செலவு கணக்கை தெளிவாக புரிந்து கொள்வது அவசியம்.
.. 2019..2020…வரவு செலவு அறிக்கை முழு விவரத்தை…